12TH TAMIL மெய்ப்பாட்டியல்

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

12TH TAMIL மெய்ப்பாட்டியல்
12TH TAMIL மெய்ப்பாட்டியல்

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • இலக்கியத்தைப் படிக்குந்தோறும் அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாடே சுவை என்னும் மெய்ப்பாடு
  • இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு ஆகும்.

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

 

தொல்காப்பிய உரையாசிரியர் “பேராசிரியர்”

சொற்கோட்டார்குப் பொருள் கண் கூடாதல்
கவி கண்காட்டும்

மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • மெய்ப்பாடு 8 வகைப்படும்
    1. சிரிப்பு
    2. அழுகை
    3. சிறுமை
    4. வியப்பு
    5. அச்சம்
    6. பெருமை
    7. சினம்
    8. மகிழ்ச்சி

நகை (சிரிப்பு) மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • “புகழ் மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.

அழுகை மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினாள், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.

இளிவரல் (சிறுமை) மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • “நாயைக்கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்ட வரின் உதவியினால் வந்த தண்ணீரை மன வலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”

மருட்கை (வியப்பு) மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • “இந்திரன் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை, விண்ணுலகு அழைத்துச் சென்ற வியப்பான காட்சியை நாங்கள் கண்டோம்”.

அச்சம் மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • “மதம் பிடித்த யானை மரங்களை முறித்தது. கார்கால மேகம் இடிப்பதுபோல முழங்கியது. உயிர் பிழைப்பதற்கு வேறு இடம் காணவியலாமல் மன நடுக்கம் அடைந்தோம். உயிரினும் சிறந்த நாணத்தைக் காக்க மறந்தோம். வளையல்கள் ஒலிக்க விரைந்து ஓடிச்சென்று அவனைச் சேர்ந்து மயில்போல் நடுங்கி நின்றோம்”.

பெருமிதம் மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என் முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.

வெகுளி (சினம்) மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • “சிறு சொல் சொல்லிய சினம்மிக்க வேந்தரை வென்று அவர்கள் சிதறி ஓடுமாறு, போரிட்டு அவர்களின் முரசையும் ஒருங்கே கைப்பற்றுவேன்”.

உவகை (மகிழ்ச்சி) மெய்ப்பாடு

12TH TAMIL மெய்ப்பாட்டியல்

  • முழுநிலவு முகத்தாள் குந்தி, திறன் மிக்க மருமகன் கண்ணனை எதிர்கொண்டாள். வெள்ளலைகள் நிறைந்த நீலக் கடலின் நீரை முகந்து வரும் மேகத்தைக் கண்ட தோகை மயில்போல் மகிழ்ந்து வரவேற்றாள்.

அருஞ்சொற்பொருள்

  • நகை =  சிரிப்பு
  • இளிவரல் =  சிறுமை
  • மருட்கை =  வியப்பு
  • பெருமிதம் =  பெருமை
  • வெகுளி =  சினம்
  • உவகை =  மகிழ்ச்சி

இலக்கணக்குறிப்பு

  • நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை =  தொழிற்பெயர்கள்

தொல்காப்பியம்

  • தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ளது = மெய்ப்பாட்டியல்
  • தமிழின் முதல் இலக்கண நூல் = தொல்காப்பியம்
  • பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல் = தொல்காப்பியம்
  • தொல்காப்பியரை “ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்” எனப் புகழ்கின்றனர்
  • தொல்காப்பியம் முழுமைக்கும் “இளம்பூரணர்” உரை எழுதி உள்ளார்

 

Leave a Reply