6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- இந்தியாவில் புதிய பிராந்திய அரசுகள் உருவான காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
- வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றிய காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
- இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் = புத்தர், மகாவீரர்.

சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு
- சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
- கங்கைச் சமவெளியின் வளமான மண், இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு ஆகியவற்றால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது.
- கைவினைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவியது = இரும்பு.
- அதிக வேளாண் உற்பத்தி, அதிக கைவினைப்பொருட்கள் உற்பத்தி காரணமாக வணிக மற்றும் பரிமாற்ற மையங்கள் தோன்றின.
- இதனால் நகரங்களும், பெருநகரங்களும் உருவாகின.
- இரும்பை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மகாஜனபதம் = மகதம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கணசங்கங்கள் என்றால் என்ன
- “கணா” என்னும் சொல்லின் பொருள் = சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்கள்.
- “சங்கா” என்னும் சொல்லின் பொருள் = மக்கள்.
- கணசங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால் ஆளப்பட்டது.
- கணசங்கங்கள் பின்பற்றிய மரபு = சமத்துவ மரபு.
முடியாட்சி என்றால் என்ன
- முடியாட்சி அரசு என்பது, ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வது ஆகும்.
- இம்முறையில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும் போது அது அரச வம்சமாக மாறுகிறது.
- முடியாட்சி அரசு பின்பற்றும் மரபு = வைதீக வேத மரபு.
கணசங்கங்களும் முடியாட்சி அரசுகளும்
- கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் இரண்டு வகையான அரசுகள் இருந்தன.
- கணசங்கங்கள் = முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி.
- முடியாட்சி = மன்னராட்சி முறையில் அமைந்தவை.
ஜனபதங்கள்
- மக்கள் குழுவாக குடியேறிய தொடக்கக்கால இடங்களே ஜனபதங்கள் எனப்படும்.
- பின்னர் ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது.
மகாஜனபதங்கள்
- கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால், பெரிய அளவில் மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின.
- இதனால் ஜனபதங்கள், மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.
- மகாஜனபதங்கள் என்பதன் பொருள் = பெரிய அரசுகள்.
16 மகாஜனபதங்கள் யாவை
- கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளி பகுதியில் 16 மகாஜனபதங்கள் இருந்தன. அவை,
- குரு
- பாஞ்சாலம்
- அங்கம்
- மகதம்
- வஜ்ஜி
- காசி
- மல்லம்
- கோசலம்
- அவந்தி
- சேதி
- வத்சம்
- மத்சயம்
- சூரசேனம்
- அஸ்மகம்
- காந்தாரம்
- காம்போஜம்
முக்கிய மகாஜனபதங்கள்
- முக்கியமான நான்கு மகாஜனப்பதங்கள்,
- மகதம் = பீகார்.
- அவந்தி = உஜ்ஜயினி.
- கோசலம் = கிழக்கு உத்திரப்பிரதேசம்.
- வத்சம் = கோசாம்பி, அலகாபாத்.
- இந்நான்கு அரசுகளில், “மகதம்” பேரரசாக உருவெடுத்தது.
- நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு = மகதம்.
மகதத்தை ஆண்ட நான்கு வம்சங்கள்
- நான்கு அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன. அவை,
- ஹரியங்கா வம்சம்.
- சிசுநாக வம்சம்.
- நந்த வம்சம்.
- மௌரிய வம்சம்.

ஹரியங்கா வம்சம் குறிப்பு
- மகதத்தின் படிப்படியான வளர்ச்சி யாருடைய ஆட்சிக்காலத்தில் துவங்கியது = ஹரியங்க வம்சத்தின் பிம்பிசாரர் ஆட்சிக்காலத்தில்.
- பிம்பிசாரர் எந்த முறைகளில் ஆட்சியை விரிவுபடுத்தினார் = படையெடுப்பு, திருமண உறவு முறை.
- பிம்பிசாரரின் மகன் = அஜாதசத்ரு.
- புத்தரின் சமகாலத்தவர் = அஜாதசத்ரு.
- முதல் பௌத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் = ராஜகிருகம்.
- முதல் பௌத்த சமய மாநாட்டை கூட்டியவர் = அஜாதசத்ரு.
- அஜாதசத்ருவின் மகன் = உதயன்.
- பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகரை உருவாக்கியவர் = உதயன்.
- பாடலிபுத்திரம் என்பது = இன்றைய பாட்னா.
சிசுநாக வம்சம் குறிப்பு
- மகதத்தின் தலைநகரை ராஜகிருகத்தில் இருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் = சிசுநாக அரசர் காலசோகன்.
- இரண்டாம் புத்த மத மாநாடு நடைபெற்ற இடம் = வைசாலி.
- இரண்டாம் புத்த மத மாநாட்டை வைசாலியில் நடத்தியவர் = சிசுநாக அரசர் காலசோகன்.
நந்த வம்சம் குறிப்பு
- இந்தியாவில் முதன் முதலில் பேரரசை உருவாக்கியவர்கள் = நந்தர்கள்.
- இந்தியாவில் முதன் முதலில் பேரரசை உருவாக்கிய வம்சம் = நந்த வம்சம்.
- நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் = மகாபத்ம நந்தர்.
- அவரைத் தொடர்ந்து அவரின் எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர்.
- மகாபத்ம நந்தர் மற்றும் அவரின் மகன்கள் எட்டு பேரையும் சேர்த்து “நவ நந்தர்கள்” என்று அழைத்தனர்.
- நந்த வம்சத்தின் கடைசி அரசன் = தனநந்தன்.
- நந்த வம்சத்தின் கடைசி அரசனான தனநந்தரை, சந்திரகுப்த மௌரியர் வெற்றி கொண்டார்.
மௌரியப் பேரரசு தொடர்பான சான்றுகள்
| தொல்லியல் சான்றுகள் | முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள் |
| கல்வெட்டுகள் | அசோகரின் கல்வெட்டு பேராணைகள், ஜூனாகத் கல்வெட்டு. |
| மதச்சார்பற்ற இலக்கியங்கள் | கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சசம், மாமூலனாரின் அகநானூறு பாடல். |
| மதம் சார்ந்த இலக்கியங்கள் | சமண, பௌத்த நூல்கள், புராணங்கள். |
| வெளிநாட்டுச் சான்றுகள் | தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா (ஆசிரியர் – மெகஸ்தனிஸ்). |
இந்தியாவின் முதல் பேரரசு
- இந்தியாவின் முதல் பேரரசு = மௌரியப் பேரரசு.
- மௌரியர்களின் தலைநகரம் = பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா).
- மௌரியர்களின் அரசு முறை = முடியாட்சி முறை.
- மௌரியப் பேரரசின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 322 முதல் 187 வரை.
- மௌரியப் பேரரசின் முக்கிய அரசர்கள் = சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர், அசோகர்.
- ராஜகிருகம், மகத்தின் தொடக்கக்காலத் தலைநகராக இருந்தது.
சந்திரகுப்த மௌரியர்
- இந்தியாவின் முதல் பெரிய பேரரசு = மௌரியப் பேரரசு.
- இந்தியாவின் முதல் பெரிய பேரரசை நிறுவியவர் = சந்திரகுப்த மௌரியர்.
- இந்தியாவின் முதல் பெரிய பேரரசு அமைந்த இடம் = மகதம்.
- சந்திரகுப்த மௌரியரை தென்இந்தியாவிற்கு அழைத்து வந்த சமணத் துறவி = பத்திரபாகு.
- சந்திரகுப்த மௌரியர் உயிர் துறந்த இடம் = சரவணபெலகொலா (கர்நாடகா).
- சந்திரகுப்தர், சரவணபெலகொலாவில், சமணச் சடன்கானா “சல்லேகனா” செய்து உயர் துறந்தார்.
- சல்லேகனா என்றால் என்ன = உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல்.
பிந்துசாரர்
- சந்திரகுப்த மௌரியரின் மகன் = பிந்துசாரர்.
- பிந்துசாரரின் இயற்பெயர் = சிம்ஹசேனா.
- கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர் = “அமிர்தகதா”.
- அமிர்தகதா என்பதன் பொருள் = எதிரிகளை அழிப்பவன்.
- பிந்துசாரரின் மகன் = அசோகர்.
- அசோகர் முதன் முதலில் எங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் = உஜ்ஜைன்.
அசோகர்
- மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் = அசோகர்.
- “தேவனாம்பிரியர்” என்று அழைக்கப்பட்ட அரசர் = அசோகர்.
- தேவனாம்பிரியர் என்பதன் பொருள் = கடவுளுக்கு பிரியமானவன்.
- அசோகர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு = கி.மு (பொ.ஆ.மு) 261.
- கலிங்க போரின் பயங்கரத்தை பற்றி அசோகர் தன்னுடைய எந்த பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார் = 13 ஆம் பாறைக் கல்வெட்டு.
- “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” என்று கூறிய வரலாற்று அறிஞர் = H.G.வெல்ஸ்.
சந்த அசோகர் தம்ம அசோகர்
- சந்த அசோகர் என்பதன் பொருள் = கொடிய அசோகர்.
- தம்ம அசோகர் என்பதன் பொருள் = நீதிமான் அசோகர்.
- எந்த போருக்கு பின்னர் அசோகர் புத்த மதத்திற்கு மாறினார் = கலிங்கப் போர்.
- தர்மத்தை பரப்ப அசோகர் மேற்கொண்ட பயணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = தர்மயாத்திரைகள் (Dharmayatras).
- அசோகர் எந்த தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் பற்று குறிப்பு உள்ளது = இரண்டாம் தூண் கல்வெட்டில்.
- அசோகர் மகன் = மகிந்தா.
- அசோகரின் மகள் = சங்கமித்திரை.
- புத்த மதத்தை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகனையும், மகளையும் அனுப்பி வைத்தார்.
- புத்த மதத்தை பரப்ப அசோகர் நியமித்த அதிகாரிகள் = தர்ம-மகாமாத்திரர்கள்.
- மூன்றாம் புத்த சமய மாநாடு நடைப்பெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
- மூன்றாம் புத்த சமய மாநாட்டை நடத்தியவர் = அசோகர்.
அசோகரின் ஆணைகள்
- அசோகரின் ஆணைகள் மொத்தம் எத்தனை = 33.
- அசோகரின் ஆணைகள், மக்களின் மீது அவர் கொண்ட அக்கறையையும், நேர்மையையும் விவரிக்கின்றன.
- பேராணை என்றால் என்ன = அரசரால் அலல்து உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.

13 ஆம் பாறைக் கல்வெட்டு
- அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களையும், சத்யபுத்திரர்களையும் குறிப்பிட்டுள்ளன = இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள்.
அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை
- சாஞ்சி கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = பிராமி.
- காந்தகார் கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = கிரேக்கம் மற்றும் அராமிக்.
- வடமேற்குப் பகுதிகளில் உள்ள எழுத்துமுறை = கரோஸ்தி.
ஜூனாகத் கல்வெட்டு / கிர்னார் கல்வெட்டு
- ஜூனாகத் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
- கிர்னார் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
- ருத்ரதாமனின் ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு “சுதர்சனா ஏரி” எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது.
- சுதர்சனா ஏரி பணிகள் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் துவங்கியது.
- சுதர்சனா ஏரியின் பணிகள் அசோகரின் காலத்தில் நிறைவு பெற்றது.
மௌரிய நிர்வாகம்
- மௌரியர்களின் நிர்வாகம் = மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் ஆகும்.
- மௌரியப் பேரரசின் அதிகாரம் மிக்க நபர் = அரசர்.
- மௌரியப் பேரரசில் அரசருக்கு உதவிய அமைச்சரவை = மந்திரிபரிஷத்.
- மந்திரிபரிஷத் என்ற அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் = ஒரு புரோகிதர், ஒரு சேனாதிபதி, ஒரு மகாமந்திரி மற்றும் இளவரசன்.
மௌரிய அரசின் வருவாய் முறை
- “பாலி” மற்றும் “பாகா” என்னும் இரண்டு வரிகளை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எங்கு உள்ளது = லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு.
- லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு, எந்த இரண்டு வரிகளை பற்றி குறிப்பிட்டுள்ளது = பாகா, பாலி.
- பாகா என்பது ஒரு வகை நில வரி ஆகும். இது மொத்த விளைச்சலில் 1 / 6 பங்கு வரியாக வசூலிக்கப்படும்.
- உப்பு மற்றும் நீர் பாசனம் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
- அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டது.
மௌரிய அரசின் நீதி நிர்வாகம்
- நீதித்துரையின் தலைவர் = அரசர்.
- மேல்முறையீட்டு நீதிமன்றமும் அரசரே ஆவார்.
- அரசர் தனக்கு கீழே பல துணை நீதிபதிகளை நியமித்தார்.
- தண்டனைகள் கடுமையாக இருந்தன.
மௌரிய அரசின் இராணுவ நிர்வாகம்
- படைகளின் தலைமைத் தளபதி = அரசர்.
- முப்பது நபர்களைக் கொண்ட குழு, ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆறு குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
- ஒரு குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஐந்து.
- ஒவ்வொரு குழுவும், கடற்படை, ஆயுதங்கள், காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகியவற்றை நிர்வாகம் செய்தது.
மௌரிய அரசின் நகராட்சி நிர்வாகம்
- ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
- நகர நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரி = “நகரிகா”.
- நகர நிர்வாகத்தை கவனிக்கும் “நகரிகா” என்னும் அதிகாரிக்கு உதவி செய்த அதிகாரிகள் = ஸ்தானிகா, கோபா.

மௌரிய பேரரசின் நாணயம்
- அரசு பணியாளர்களுக்கு பணம் ஊதியமாகவே வழங்கப்பட்டது.
- முத்திரை பதிக்கபப்ட்ட வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பனா (panas).
- மௌரிய பேரராசின் வெள்ளி நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்கள் = மயில், மலை வடிவம்.
- மௌரிய பேரரசு காலத்தில் புழக்கத்தில் இருந்த பிறைவடிவ செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = மஸகாஸ்.
- “மஸகாஸ்” எனப்படுவது = மௌரியர் கால பிறைவடிவ செப்பு நாணயங்கள்.
மௌரியர் கால வணிகம்
- கிரேக்கம் (ஹெலனிக்), மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது.
- சிறப்பு மிக்க துணிகள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டன என அர்த்தசாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது = காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபம் (அஸ்ஸாம்) மற்றும் மதுரை (தமிழ்நாடு).
மௌரியர் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி
| ஏற்றுமதி பொருட்கள் | இறக்குமதி பொருட்கள் |
|---|---|
| நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரங்கள், பருத்தி இழை துணி, தங்கத்தினால் ஆன பொருட்கள், சங்குகள், சிப்பிகள் | குதிரைகள், தங்கம், கண்ணாடி பொருள்கள், பட்டு (லினன்) |
கலை கட்டிடக்கலை
- மௌரியர் கால கலையை இரண்டு வகைகளாக பிரிப்பர். அவை,
- உள்ளூர் கலை
- அரச கலை
| உள்ளூர் கலை | அரச கலை |
|---|---|
| யக்சன், யக்சி உருவச் சிலைகள் | அரண்மனைகள் மற்றும் பொது கட்டிடங்கள், ஒற்றைக்கால் தூண்கள், பாறை குடைவரைக் கட்டிடக்கலை, ஸ்தூபிகள் |
- யக்சன் என்றால் என்ன = நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழலோடு தொடர்புடைய கடவுள்.
- யக்சி என்றால் என்ன = யக்சன் கடவுளின் பெண் வடிவம்

ஸ்தூபி என்றால் என்ன
- செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும்.
- புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
- சாஞ்சி ஸ்தூபி எங்கு உள்ளது = மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு அருகே உள்ளது.
சாரநாத் ஒற்றைக்கல் தூண்
- சாரநாத் ஒற்றைக்கல் தூணின் சிகரப்பகுதியில் (தலைப்பகுதியில்) தர்மசக்கரம் உள்ளது.
சிங்கமுகத் தூண்

- சாரநாத்தில் உள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் சேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாறைக் குடைவரைக் கலையின் தொடக்கம்
- இந்தியாவில் பாறைக் குடைவரை கலையின் தொடக்கம், மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து துவங்கியது.
- பராபர் குன்றுகள் = இங்குள்ள குன்றில் மூன்று குகைகளில் அசோகரின் அர்ப்பணிப்பு (யாருக்காக வழங்கினார்) பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாகார்ஜுனா கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் “தசரத மௌரியரின்” கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
- அசோகரின் பேரன் = தசரத மௌரியர்.
மௌரியப் பேரரசு வீழ்ச்சிக்கான காரணங்கள்
- அசோகருக்கு பின் வந்த அரசர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
- பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலகங்கள்.
- பாக்டீரிய நாட்டை சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு.
- மௌரியப் பேரரசின் கடைசி அரசன் = பிருகத்ரதா.
- பிருகத்ரதாவின் படைத்தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
- மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
- சுங்க வம்சத்தை நிறுவியவர் = புஷ்யமித்ர சுங்கன்.
- சுங்க வம்சத்தின் முதல் அரசர் = புஷ்யமித்ர சுங்கன்.
பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்
- மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.
நாளந்தா பல்கலைக்கழகம்
- நாளந்தா பல்கலைக்கழகம், பண்டைய மகத நாட்டில் இருந்த புத்த மடாலயம் ஆகும்.
- குப்தர்களின் காலத்தில் இது மிகப் புகழ் பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது.
- நாளந்தா என்பது “சம்ஸ்கிருத” சொல் ஆகும்.
- நா + அலம் + தா = மூன்று சம்ஸ்கிருத சொல்லின் கூட்டுச் சொல் “நாளந்தா”.
- இம்மூன்று சொற்களின் பொருள் = வற்றாத அறிவை அளிப்பவர்.
ஊர்களின் புதிய பெயர்கள்
| பண்டைய பெயர் | தற்போதைய பெயர் |
|---|---|
| ராஜகிருகம் | ராஜ்கிர் |
| பாடலிபுத்திரம் | பாட்னா |
| கலிங்கா | ஒடிசா |
மெகஸ்தனிஸின் “இண்டிகா”
- கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதவர் = மெகஸ்தனிஸ்.
- செலுக்கஸ் நிகேட்டரின் தூதவராக சந்திர குப்த மௌரியரின் அவைக்கு வந்தவர் = மெகஸ்தனிஸ்.
- மெகஸ்தனிஸ் இந்தியாவில் இருந்த ஆண்டுகள் = 14 ஆண்டுகள்.
- “இண்டிகா” என்னும் நூலின் ஆசிரியர் = மெகஸ்தனிஸ்.
- மௌரியப் பேரரசு பற்றி நாம் தெரிந்த கொள்ள உதவும் நூல் = இண்டிகா.
சீனப்பெருஞ்சுவர்
- இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும்.
- குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவர்களை இணைத்தார்.
ஒலிம்பியாவின் ஜியஸ் கோவில்
- கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
- வரலாறு என்றால் என்ன
- மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
- சிந்துவெளி நாகரிகம்
- தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
- 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]