பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

Table of Contents

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

சங்க காலம்

  • சங்கம் என்ற சொல் மதுரைப் பாண்டிய மன்னர்களின் ஆதரவில், தமிழ்ப் புலவர்கள் குழுமியிருந்த குழுவை குறிப்பிடுகிறது.
  • இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாக “சங்க இலக்கியங்கள்” எனப்படுகிறது.
  • சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் “சங்க காலம்” என அழைக்கப்படுகிறது.

கல்வெட்டு சான்றுகள்

  • கலிங்க அரசன் காரவேலனுடைய “ஹதிகும்பா” கல்வெட்டு.
  • கரூர்க்கு அருகே உள்ள புகளூர் கல்வெட்டு.
  • அசோகரின் இரண்டாம் மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள்
  • மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம், அழகர் மலை, கீழவளவு கல்வெட்டுகள்

செப்பேடு சான்றுகள்

  • சின்னமனூர் செப்பேடுகள்
  • வேள்விக்குடி செப்பேடுகள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சங்க கால நாணயங்கள்

  • சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள்.
  • குறுநில மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்
  • ரோமானிய நாணயங்கள்

பெருங்கற்கால நினைவு சின்னங்கள்

  • புதைவிடங்கள்
  • நடுகற்கள்

அகழ்வாய்வு பொருட்கள் கிடைத்த இடங்கள்

  • ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.

சங்க கால இலக்கியச் சான்றுகள்

  • தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி. காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை.

அயல்நாட்டவர் குறிப்புகள்

  • எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் (The Periplus of Erythrean Sea)
  • பிளினியின் “இயற்கை வரலாறு” (Natural History)
  • தாலமியின் “புவியியல்” (Geography).
  • மெகஸ்தனிஸின் “இண்டிகா”.
  • ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம் நூல்கள்.

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

கால அளவுகி.மு (பொ.ஆ.மு) 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி (பொ.ஆ) 3 ஆம் நூற்றாண்டு வரை
தமிழகத்தின் புவியியல் பரப்புவடக்கே = வேங்கடம் (திருப்பதி மலை) வரை. தெற்கே = கன்னியாகுமரி வரை. கிழக்கு, மேற்கு = கடல் எல்லைகள் வரை.
காலம்இரும்புக் காலம்
பண்பாடுபெருங்கற்காலப் பண்பாடு
அரசுமுறைமுடியாட்சி
ஆட்சி புரிந்த அரச வம்சங்கள்சேரர், சோழர், பாண்டியர்கள்

ஜார்ஜ் எல் ஹார்ட்

  • ஜார்ஜ் நெல் ஹார்ட் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார் = கலிபோர்னியா.
  • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர் = ஜார்ஜ் எல் ஹார்ட்.
  • தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது என்று கூறியவர் = ஜார்ஜ் எல் ஹார்ட்.
  • மற்ற மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக தமிழ் உருபெற்று எழுந்துள்ளது எனக் கூறியவர் = ஜார்ஜ் எல் ஹார்ட்.

சேரர்கள்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
  • சேர அரசர்களை பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
  • வட இந்தியா மீது படையெடுத்து சென்ற சேர அரசன் = சேரன் செங்குட்டுவன்.
  • சிலப்பதிகார கண்ணகிக்கு சிலை எடுக்க, இமயமலையில் இருந்து கற்களை கொண்டு வந்தவர் = சேரன் செங்குட்டுவன்.
  • “பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்” = சேரன் செங்குட்டுவன்.
  • சேரன் செங்குட்டுவனின் தம்பி = இளங்கோவடிகள்.
  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் = இளங்கோவடிகள்.
  • தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசன் = சேரல் இரும்பொறை.

சேர அரசர்கள் சூட்டிக்கொண்ட பட்டப் பெயர்கள்

  • ஆதவன்
  • குட்டுவன்
  • வானவன்
  • இரும்பொறை

சோழர்கள்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
  • சங்க காலத்தில் சோழ அரசு வேங்கடம் (திருப்தி மலைகள்) வரை விரிந்திருந்தது.
  • “சோழ மண்டலம்” என அழைக்கப்படும் பகுதி = காவிரி கழிமுகப்பகுதி.
  • சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் = கரிகால் சோழன்.
  • தன்னை எதிர்த்த சேர, பாண்டிய மற்றும் 11 வேளிர்களின் கூட்டுப் படையை தோற்கடித்த சோழ மன்னன் = கரிகால் சோழன்.
  • எந்த இடத்தில கரிகால் சோழன் தன்னை எதிர்த்த சேர, பாண்டிய மற்றும் 11 வேளிர்களின் கூட்டுப் படையை தோற்கடித்தார் = தஞ்சை பகுதியில் உள்ள “வெண்ணி” என்னும் சிற்றூரில்.
  • வேளாண்மையை மேம்படுத்த காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டியவர் = கரிகால் சோழன்.
  • சோழர்களின் துறைமுகம் = புகார்.
  • கரிகாலன் ஆட்சியின் பொழுது நடைபெற்ற வணிக நிகழ்வுகளை பற்றிய செய்திகளை கூறும் நூல் = பட்டினப்பாலை.

கல்லணை

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
  • கல்லணையை கட்டியவர் = கரிகாற்சோழன்.
  • இது கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.
  • கழிமுகப் பகுதியில் நீரைப் திருப்பி விடுவதற்கு வசதியாக இவ்வணை கட்டப்பட்டது.
  • கல்லணை கட்டப்பட்ட பொழுது 69000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.

சோழ மன்னர்கள் சூட்டிக்கொண்ட பட்டப் பெயர்கள்

  • சென்னி
  • செம்பியன்
  • கிள்ளி
  • வளவன்

பாண்டியர்கள்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
  • தமிழ்ப் புலவர்களையும், அறிஞர்களையும் ஆதரித்தவர்கள் = பாண்டியர்கள்.
  • சங்ககால பாண்டியரில், மிகவும் புகழ்பெற்ற வீரராக திகழ்பவர் = பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • சேரர், சோழர், ஐந்து வேளிர்களின் கூட்டுப்படையை தோற்கடித பாண்டிய மன்னன் = நெடுஞ்செழியன்.
  • எந்த இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர்களின் கூட்டுப்படையை தோற்கடித்தார் = தலையாலங்கானம்.
  • “கொற்கையின் தலைவன்” என போற்றப்படுபவர் = நெடுஞ்செழியன்.
  • முத்துக்குளிப்புக்கு பெயர் பெற்ற நாடு = பாண்டிய நாடு.
  • பாண்டியர்கள் நாணயத்தில் பொறிக்கப்பட்ட உருவங்கள் = யானை, மீன்.
  • வேதவேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்ட பாண்டிய மன்னன் = பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி.

பாண்டிய மன்னர்கள் சூட்டிக் கொண்ட பட்டப் பெயர்கள்

  • மாறன்
  • வழுதி
  • செழியன்
  • தென்னர்

அரசு உரிமைச் சின்னங்கள் யாவை

  • அரசு அதிகாரத்தின் சின்னங்களாக இருந்தவை,
    1. செங்கோல் (Scepter)
    2. முரசு (Drum) (தெய்வமாக கருதப்பட்டது)
    3. வெண்கொற்றக்குடை (White Umbrella)

மூவேந்தர்களின் மாலை

  • சேரர்களின் மாலை = பனம்பூ மாலை
  • சோழர்களின் மாலை = அத்திப்பூ மாலை
  • பாண்டியர்களின் மாலை = வேப்பம்பூ மாலை

மூவேந்தர்களின் துறைமுகம்

  • சேரர்களின் துறைமுகம் = முசிறி / தொண்டி
  • சோழர்களின் துறைமுகம் = புகார்
  • பாண்டியர்களின் துறைமுகம் = கொற்கை.

மூவேந்தர்களின் தலைநகர்

  • சேரர்களின் தலைநகரம் = வஞ்சி / கரூர்.
  • சோழர்களின் தலைநகரம் = உறையூர் / புகார்
  • பாண்டியர்களின் தலைநகர் = மதுரை.

மூவேந்தர்களின் சின்னங்கள்

  • சேரர்களின் சின்னம் = வில், அம்பு
  • சோழர்களின் சின்னம் = புலி.
  • பாண்டியர்களின் சின்னம் = இரண்டு மீன்கள்.

வேளிர் யார்

  • மூவேந்தர்களைக் தவிர சங்ககால தமிழகத்தில் பல்வேறு குறுநில மன்னர்களும் இருந்தனர்.
  • இந்த குறுநில மன்னர்களை “வேளிர்” என்று அழைப்பர்.

ஆய் பொருள்

  • ஆய் என்னும் சொல் “ஆயர்” என்னும் சொல்லில் இருந்து வந்தது.
  • ஆய் என்பதன் பொருள் = ஆநிரை மேய்ப்பவர்.
  • சங்ககால ஆய் மன்னர்களில் முக்கியமானவர் = அந்திரன், திதியன், நன்னன்.
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

கடையேழு வள்ளல்கள்

  • கடையேழு வள்ளல்கள் = பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி.
  • கிழார் = கிராமத் தலைவர்.

சங்ககால ஆட்சி முறை

  • அரசுரிமை பரம்பரையானது.
  • “கோ” என்பதன் பொருள் = அரசர்.
  • அரசருக்குரிய வேறு பெயர்கள் = வேந்தன், கோன், மன்னன், கொற்றவன், இறைவன்.
  • அரசுக்கட்டிலேருதல் என்றால் என்ன = அரசனின் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டப்படும் விழா அல்லது முடிசூட்டு விழா.
  • பட்டது இளவரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = கோமகன்.
  • பட்டது இளவரசனுக்கு இளையவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல்.
  • “நிலவரி” எவ்வாறு அழைக்கப்பட்டது = இறை.
  • “நிலவரி” வேறு பெயர் = இறை.

அரசவை

  • அரசருடைய சபை = அரசவை.
  • சங்ககால அரசர்கள் எத்தனை கடமைகளை செய்தனர் = ஐந்து.
  • சங்ககால அரசர்கள் ஐந்து வித கடமைகளை செய்தனர். அவை,
    1. கல்வி கற்பதை ஊக்குவித்தல்
    2. சடங்குகளை நடத்துவது
    3. பரிசுகள் வழங்குவது
    4. மக்களைப் பாதுகாத்தல்
    5. குற்றவாளிகளை தண்டித்தல்
  • அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழுக்கள் = ஐம்பெருங்குழு, எண்பேராயம்.

சங்ககால படைகள்

  • அரசரின் படைகள் = நான்கு (காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை).
  • படைத்தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = தானைத்தலைவன்.
  • தோமாராம் என்றால் என்ன = தோமாரம் (ஏறியீட்டி) என்பது சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவதாகும்.
  • ஆயுதங்கள் வைக்கப்பட்டிற்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படும் = படைக் கொட்டில்.
  • “போர்முரசு” = கடவுளாக கருதி வணங்கப்பட்டது.

சங்ககால சட்டமும் நீதியும்

  • அரசரே இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆவார்.
  • தலைநகரில் நீதிமன்றம் “அவை” என்று அழைக்கப்பட்டது.
  • கிராமங்களில் “மன்றங்கள்” என்றழைக்கப்பட்டது.

சங்ககால உள்ளாட்சி நிர்வாகம்

  • நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது = மண்டலம்.
  • மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன = நாடுகள்.
  • நாடுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = பல கூற்றங்களாக (கூற்றம்).
  • சங்ககால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு = ஊர்.
  • ஊர் (அல்லது) கிராமம் = பேரூர் (பெரிய கிராமம்), சிற்றூர் (சிறிய கிராமம்), மூதூர் (பழமையான கிராமம்).
  • “பட்டினம்” எனப்படுவது = கடற்கரையோர நகரங்கள்.
  • துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல் = புகார்.
  • பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள்
    1. ஏறுவரிசையில் = ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
    2. இறங்கு வரிசையில் = மண்டலம் > நாடு > கூற்றம் > ஊர்.

சங்ககால முக்கிய நகரங்கள்

  • புகார்
  • உறையூர்
  • கொற்கை
  • மதுரை
  • முசிறி
  • வஞ்சி (கரூர்)
  • காஞ்சி

திணை சார்ந்த சங்ககால சமூகம்

  • மருதநிலம் = மென்புலம் (நன்செய்) நிலம்.
  • குறுஞ்சி, முல்லை = வன்புலம் (புன்செய்) நிலங்கள்.
திணைநிலம்தொழில்மக்கள்கடவுள்
குறுஞ்சிமலையும் மலை சார்ந்த இடமும்வேட்டையாடுதல் / சேகரித்தல்குறவர், குறத்தியர்முருகன்
முல்லைகாடும், காடு சார்ந்த இடமும்ஆநிரை மேய்த்தல்ஆயர், ஆய்ச்சியர்மாயோன்
மருதம்வயலும் வயல் சார்ந்த இடமும்வேளாண்மைஉழவன், உழத்தியர்இந்திரன்
நெய்தல்கடலும் கடல் சார்ந்த இடமும்மீன் பிடித்தல் / உப்பு உற்பத்திபரதவர், நுளத்தியர்வருணன்
பாலைவறண்ட நிலம்வீரச் செயல்கள்மறவர், மறத்தியர்கொற்றவை

சங்ககாலத்தில் பெண்களின் நிலை

  • சங்ககாலத்தில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கை = 40.
  • நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்து, அரிய நூல்களை கொடுத்து சென்றுள்ளனர்.
  • திருமணம் பெண்களின் விருப்பத்தை சார்ந்தே இருந்தது.
  • பெற்றோர்களின் சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு வழங்கப்பட்டது.

சங்க காலப் பெண்பாற்புலவர்கள்

  • அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப்பாடினியார், ஆதிமந்தியார், பொன்முடியார்.

சமய நம்பிக்கைகள் மற்றும் சமூகப் பிரிவுகள்

  • சங்ககால மக்களின் முதன்மைக் கடவுள் = முருகன் (சேயோன்).
  • நாடுகள் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
  • தமிழகத்தில் சாதிமுறை இல்லை.
  • வர்ணாசிரம முறை (தொழிலை அடிப்படையாகக் கொண்ட) பிற்காலத்திலேயே தென்னாட்டில் வந்தது.

நடுகல் என்றால் என்ன

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
  • பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள் மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தனர்.
  • போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.

சங்ககால உடை அணிகலன்கள்

  • வசதிபடைத்த மக்கள் பயன்படுத்திய ஆடைகள் = மஸ்லின், பட்டு, பருத்தி.
  • ஆண்களும் பெண்களும் விதவிதமான அணிகலன்களை அணிந்திருந்தனர்.

சங்ககால கலைகள்

  • இசையின் ஏழு சுரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்த சோழ மன்னன் = கரிகாற்சோழன்.
  • பாடல்கள் பாடியோரை எவ்வாறு அழைத்தனர் = பாணர், விறலியர்.
  • சங்ககால மக்களிடையே மிக முக்கியமான பண்பாட்டு அம்சமாக விளங்கிய கலை = கூத்து (நாட்டுப்புற நாடகம்).
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

சங்ககால மக்களின் தொழில்

  • வேளாண்மை, ஆநிரை மேய்த்தல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், நெசவு செய்தல்.
  • தச்சர், கொல்லர், பொற்கொல்லர், மட்பாண்டம் செய்வோரும் இருந்தனர்.

சங்ககால விழாக்கள்

  • அறுவடைத் திருநாள் (பொங்கல்), கார்த்திகை தீப விழா ஆகியவை கொண்டாடப்பட்டது.
  • தலைநகரில் கொண்டாடப்பட்ட விழா = இந்திரா விழா.

சங்ககால வணிகம்

  • 3 நிலை வணிகம் = உள்ளூர் வணிகம், உள்நாட்டில் வணிகம், கடல் கடந்து வணிகம்.
  • முக்கியத் துறைமுகங்களில் “கலங்கரை இலங்குசுடர்” என்னும் ஒளிவிளக்குக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
  • பண்டமாற்று முறை பரவலாக இருந்தது.
  • மதுரையில் “நாளங்காடி” எனப்படும் காலைநேர சந்தையும், “அல்லங்காடி” எனப்படும் இரவுநேர சந்தையும் இருந்தன.

எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின்

  • எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும் “கருமிளகுக்கதிர்” அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
  • இவ்வாறு பதப்படுத்தி உடலைப் பாதுகாப்பது பண்டைய நாட்களில் பின்பற்றப்பட்ட முறையாகும்.

சங்ககாலத்தில் ஏற்றுமதி இறக்குமதி

முக்கிய ஏற்றுமதி பொருட்கள்முக்கிய இறக்குமதி பொருட்கள்
உப்பு, மிளகு, முத்துக்கள், தந்தம், பட்டு, நறுமணப் பொருட்கள், வைரம், குங்குமப்பூ, விலைமதிப்பு மிக்க கற்கள், மஸ்லின், சந்தனக் கட்டை.புஷ்பராகம், குதிரைகள். தகரம், கண்ணாடி

இந்தியப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது

  • இந்திய வணிகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.
  • இந்தியப் பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது எனக் கூறிய மன்னன் = ரோமப் பேரரசர் ஆரிலியன்.
  • ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தியப் பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்.

இந்தியாவின் முதல் பேரங்காடி

  • “இயற்கை வரலாறு” என்னும் நூலின் ஆசிரியர் = பிளினி.
  • “இந்தியாவின் முதல் பேரங்காடி” என முசிறியை கூறியவர் = பிளினி.
  • “இந்தியாவின் முதல் பேரங்காடி” எனக் கூறப்பட்ட இடம் = முசிறி.
  • ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) எனும் நூலில் முசிறியை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • தமிழகத்தில் ரோமானிய குடியிருப்புகள் இருந்த இடம் = முசிறி.
  • தமிழகத்தில் ரோமானிய தெய்வமான அகஸ்டஸ் கடவுளுக்கு கோவில் இருந்த இடம் = முசிறி.

பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரம்

  • கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது) அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

களப்பிரர்கள்

  • கி.பி (பொ.ஆ) மூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் சங்ககாலம் படிப்படியாக சரிவைத் சந்தித்தது.
  • சங்ககாலத்தை தொடர்ந்து அடுத்து ஆட்சி செய்தவர்கள் = களப்பிரர்கள்.
  • களப்பிரர்கள் சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தனர்.
  • களப்பிரர்களின் ஆட்சி பற்றி அறிந்து கொள்ள உதவும் இலக்கிய சான்றுகள் = தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம்.
  • களப்பிரர்கள் காலத்தில் உருவான காப்பியங்கள் = சீவக சிந்தாமணி, குண்டலகேசி.
  • தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் = களப்பிரர்கள் காலம்.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகள் தமிழகத்தில் அறிமுகம் ஆன காலம் = களப்பிரர்கள் காலம்.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் வருகையால் தமிழகத்தில் உருவான எழுத்து முறை = வட்டெழுத்து முறை.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உருவான காலம் = களப்பிரர்கள் காலம்.

தமிழ் இலக்கியங்களை மீட்டவர்கள்

  • பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ்நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள் = ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்) தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ.வே.சாமிநாத அய்யர்.

 

 

 

 

Leave a Reply