மந்திரிபரிஷத் என்ற அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் = ஒரு புரோகிதர், ஒரு சேனாதிபதி, ஒரு மகாமந்திரி மற்றும் இளவரசன்.
மௌரிய அரசின் வருவாய் முறை
“பாலி” மற்றும் “பாகா” என்னும் இரண்டு வரிகளை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எங்கு உள்ளது = லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு.
லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு, எந்த இரண்டு வரிகளை பற்றி குறிப்பிட்டுள்ளது = பாகா, பாலி.
பாகா என்பது ஒரு வகை நில வரி ஆகும். இது மொத்த விளைச்சலில் 1 / 6 பங்கு வரியாக வசூலிக்கப்படும்.
உப்பு மற்றும் நீர் பாசனம் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டது.
மௌரிய அரசின் நீதி நிர்வாகம்
நீதித்துரையின் தலைவர் = அரசர்.
மேல்முறையீட்டு நீதிமன்றமும் அரசரே ஆவார்.
அரசர் தனக்கு கீழே பல துணை நீதிபதிகளை நியமித்தார்.
தண்டனைகள் கடுமையாக இருந்தன.
மௌரிய அரசின் இராணுவ நிர்வாகம்
படைகளின் தலைமைத் தளபதி = அரசர்.
முப்பது நபர்களைக் கொண்ட குழு, ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆறு குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
ஒரு குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஐந்து.
ஒவ்வொரு குழுவும், கடற்படை, ஆயுதங்கள், காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகியவற்றை நிர்வாகம் செய்தது.
மௌரிய அரசின் நகராட்சி நிர்வாகம்
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
நகர நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரி = “நகரிகா”.
நகர நிர்வாகத்தை கவனிக்கும் “நகரிகா” என்னும் அதிகாரிக்கு உதவி செய்த அதிகாரிகள் = ஸ்தானிகா, கோபா.
மௌரிய பேரரசின் நாணயம்
அரசு பணியாளர்களுக்கு பணம் ஊதியமாகவே வழங்கப்பட்டது.
முத்திரை பதிக்கபப்ட்ட வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பனா (panas).
மௌரிய பேரராசின் வெள்ளி நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்கள் = மயில், மலை வடிவம்.
மௌரிய பேரரசு காலத்தில் புழக்கத்தில் இருந்த பிறைவடிவ செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = மஸகாஸ்.
“மஸகாஸ்” எனப்படுவது = மௌரியர் கால பிறைவடிவ செப்பு நாணயங்கள்.
மௌரியர் கால வணிகம்
கிரேக்கம் (ஹெலனிக்), மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது.
சிறப்பு மிக்க துணிகள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டன என அர்த்தசாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது = காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபம் (அஸ்ஸாம்) மற்றும் மதுரை (தமிழ்நாடு).
மௌரியர் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி
ஏற்றுமதி பொருட்கள்
இறக்குமதி பொருட்கள்
நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரங்கள், பருத்தி இழை துணி, தங்கத்தினால் ஆன பொருட்கள், சங்குகள், சிப்பிகள்
குதிரைகள், தங்கம், கண்ணாடி பொருள்கள், பட்டு (லினன்)
கலை கட்டிடக்கலை
மௌரியர் கால கலையை இரண்டு வகைகளாக பிரிப்பர். அவை,
உள்ளூர் கலை
அரச கலை
உள்ளூர் கலை
அரச கலை
யக்சன், யக்சி உருவச் சிலைகள்
அரண்மனைகள் மற்றும் பொது கட்டிடங்கள், ஒற்றைக்கால் தூண்கள், பாறை குடைவரைக் கட்டிடக்கலை, ஸ்தூபிகள்
யக்சன் என்றால் என்ன = நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழலோடு தொடர்புடைய கடவுள்.
யக்சி என்றால் என்ன = யக்சன் கடவுளின் பெண் வடிவம்
ஸ்தூபி என்றால் என்ன
செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும்.
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
சாஞ்சி ஸ்தூபி எங்கு உள்ளது = மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு அருகே உள்ளது.
சாரநாத் ஒற்றைக்கல் தூண்
சாரநாத் ஒற்றைக்கல் தூணின் சிகரப்பகுதியில் (தலைப்பகுதியில்) தர்மசக்கரம் உள்ளது.
சிங்கமுகத் தூண்
சாரநாத்தில் உள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் சேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாறைக் குடைவரைக் கலையின் தொடக்கம்
இந்தியாவில் பாறைக் குடைவரை கலையின் தொடக்கம், மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து துவங்கியது.
பராபர் குன்றுகள் = இங்குள்ள குன்றில் மூன்று குகைகளில் அசோகரின் அர்ப்பணிப்பு (யாருக்காக வழங்கினார்) பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகார்ஜுனா கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் “தசரத மௌரியரின்” கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
அசோகரின் பேரன் = தசரத மௌரியர்.
மௌரியப் பேரரசு வீழ்ச்சிக்கான காரணங்கள்
அசோகருக்கு பின் வந்த அரசர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலகங்கள்.
பாக்டீரிய நாட்டை சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு.
மௌரியப் பேரரசின் கடைசி அரசன் = பிருகத்ரதா.
பிருகத்ரதாவின் படைத்தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
சுங்க வம்சத்தை நிறுவியவர் = புஷ்யமித்ர சுங்கன்.
சுங்க வம்சத்தின் முதல் அரசர் = புஷ்யமித்ர சுங்கன்.
பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்
மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.
நாளந்தா பல்கலைக்கழகம்
நாளந்தா பல்கலைக்கழகம், பண்டைய மகத நாட்டில் இருந்த புத்த மடாலயம் ஆகும்.
குப்தர்களின் காலத்தில் இது மிகப் புகழ் பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது.
நாளந்தா என்பது “சம்ஸ்கிருத” சொல் ஆகும்.
நா + அலம் + தா = மூன்று சம்ஸ்கிருத சொல்லின் கூட்டுச் சொல் “நாளந்தா”.
இம்மூன்று சொற்களின் பொருள் = வற்றாத அறிவை அளிப்பவர்.
ஊர்களின் புதிய பெயர்கள்
பண்டைய பெயர்
தற்போதைய பெயர்
ராஜகிருகம்
ராஜ்கிர்
பாடலிபுத்திரம்
பாட்னா
கலிங்கா
ஒடிசா
மெகஸ்தனிஸின் “இண்டிகா”
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதவர் = மெகஸ்தனிஸ்.
செலுக்கஸ் நிகேட்டரின் தூதவராக சந்திர குப்த மௌரியரின் அவைக்கு வந்தவர் = மெகஸ்தனிஸ்.
மெகஸ்தனிஸ் இந்தியாவில் இருந்த ஆண்டுகள் = 14 ஆண்டுகள்.
“இண்டிகா” என்னும் நூலின் ஆசிரியர் = மெகஸ்தனிஸ்.
மௌரியப் பேரரசு பற்றி நாம் தெரிந்த கொள்ள உதவும் நூல் = இண்டிகா.
சீனப்பெருஞ்சுவர்
இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும்.
குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவர்களை இணைத்தார்.
ஒலிம்பியாவின் ஜியஸ் கோவில்
கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.