7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- அறிவின் வழிப்பட = ஞானமார்க்கம்.
- சடங்குகள், நற்செயல்கள் வழியாக வழிப்பட = கர்மா மார்க்கம்.
- ஞானமார்க்கம், கர்மா மார்க்கம் ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறந்தது = பக்தி மார்க்கம்.
- ஞானமார்க்கம், கர்மா மார்க்கம் ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறந்தது “பக்தி மார்க்கம்” எனக் கூறும் நூல் = பகவத் கீதை.
பக்தி இயக்கம்
- பக்தி இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி.
- தமிழகத்தில் “பக்தி இயக்கம்” எப்பொழுது துவங்கியது = கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
- பக்தி இயக்கம் எதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது = தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் பக்தி இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சூபி தத்துவம்
- தொடக்கக்கால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு எதிராகத் தோன்றியதே சூபி தத்துவம் ஆகும்.
- கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்றனர் சூபி வாதிகள்.
ஹரிதாசர்
- “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” (There is only one god, though Hindus and Muslims call him by different names) என்று கூறியவர் = ஹரிதாசர்.
தமிழகத்தில் பக்தி இயக்கம்
- தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர்கள் = ஆழ்வார்களும் நாயன்மார்களும்.
- ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி இயக்கத்தை பரப்ப பயன்படுத்திய மொழி = தமிழ் மொழி.
- பக்தி இயக்கத்தினர் ஆண், பெண் சமத்துவத்தை முன்னிறுத்தினர்.
வைணவம் சமயம்
- ஆழ்வார்கள் மொத்தம் = 12.
- விஷ்ணு பக்தி இயக்கம் (அல்லது) வைணவம் சார்ந்த ஆழ்வார்களில் இருவர் தனிச் சிறப்பு பெற்றுள்ளனர். அவர்கள்,
- நம்மாழ்வார்
- ஆண்டாள்
நம்மாழ்வார் குறிப்பு
- நம்மாழ்வார் இயற்றியது = திருவாய்மொழி.
- திருவாய்மொழியில் உள்ள பாடல்கள் = 1102 பத்திகள்.
- நம்மாழ்வார் பாடிய மொத்த பாடல்கள் = 4000.
- நம்மாழ்வாரின் 4000 பாடல்களை தொகுத்தவர் = நாதமுனி.
- நம்மாழ்வாரின் பாடல்களை, நாதமுனி எந்த பெயரில் தொகுத்துள்ளார் = நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
ஆண்டாள் குறிப்பு
- 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் = ஆண்டாள்.
- பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டார் = விஷ்ணு சித்தர்.
- “விஷ்ணு சித்தர்” என அழைக்கப்படும் ஆழ்வார் = பெரியாழ்வார்.
- தன்னை தாய் யசோதையாக உருவகித்து, குழந்தை கிருஷ்ணனை பற்றி பல பாடல்களை பாடியவர் = பெரியாழ்வார்.
- பெரியாழ்வார், ஆண்டாளை குழந்தையாக எங்கு கண்டெடுத்தார் = திருவில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில்.
- ஆண்டாள் என்பதன் பொருள் = ஆட்சி புரிபவள்.
- ஆண்டாள் இயற்றிய நூல்கள்,
- திருப்பாவை (கிருஷ்ணனை அடையும் வழி)
- நாச்சியார் திருமொழி (பெண்ணின் புனிதப் பாடல்கள்)
- “திருவரங்கம் அரங்கநாதன்” மீதான தனது காதலை ஆண்டாள் தனது பாடல்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆழ்வார்கள் பெயர்கள்
- ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் ஆவர். இவர்கள் “வைணவ அடியார்கள்” என்றும் அழைக்கப்படுவர்.
-
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசையாழ்வார்
- பெரியாழ்வார்
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- திருமங்கை ஆழ்வார்
- திருப்பண் ஆழ்வார்
- குலசேகர ஆழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- ஆண்டாள்.
-
- முதல் ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் = மூன்று.
- முதல் மூன்று ஆழ்வார்கள் = பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
நாயன்மார்கள் (சைவ அடியார்கள்)
- நாயன்மார்கள் (சைவ அடியார்கள்) மொத்தம் எத்தனை பேர் = 63 பேர்.
- “மும்மூர்த்திகள்” என அழைக்கப்படுபவர்கள் = திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் .
- நாயன்மார்களின் பாடல்களை தொகுத்தவர் = நம்பியாண்டார் நம்பி.
- எந்த வருடம் நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறையை தொகுத்ததாக கூறப்படுகிறது = கி.பி. 1000.
- சைவ புனித நூல் = திருமுறை.
- திருமுறையில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை = 12.
- சைவத் திருமுறை 12 இல் நம்பியாண்டார் நம்பி தொகுத்த நூல்கின் எண்ணிக்கை = 11.
- 12 வது நூல் சேக்கிழார் எழுதிய “பெரியபுராணம்” ஆகும்.
ஆதிசங்கரர்
- ஆதிசங்கரர் என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
- ஆதிசங்கரரின் காலம் = ஏறத்தாழ கி.பி. 700 – 750.
- ஆதிசங்கரர் கூறிய தத்துவம் = அத்வைதம்.
- ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தின் சாரம் = ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணைதல்.
- ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் மொத்தம் = நான்கு.
- ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் = பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி.
- ஆதிசங்கரர் எதை மீட்டெடுக்க முயற்சி செய்தார் = வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
- ஆதிசங்கரரின் பணிகளில் சிறந்தது = “பிரம்ம சூத்திரம்” என்னும் நூலுக்கு ஆதி சங்கரர் எழுதிய உரை சிறப்பு வாய்ந்தது ஆகும்.
- வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல் = பிரம்ம சூத்திரம்.
இராமானுஜர் வாழ்க்கை வரலாறு
- இராமானுஜரின் காலம் = பதினொன்றாம் நூற்றாண்டு.
- இராமானுஜர் கூறிய தத்துவம் = விசிஷ்டாத்வைதம்.
- இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் கூறும் சாரம் = ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
- இராமானுஜர் பிற்காலத்தில் தங்கிய இடம் = ஸ்ரீரங்கம்.
- சாதியக் கட்டுப்பாடுகளைக் கண்டனம் செய்தவர் = இராமானுஜர்.
- இராமானுஜரின் பக்திநெறி = “ஸ்ரீவைஷ்ணவம்” என்று அழைக்கப்படுகிறது.
வடகலை தென்கலை வேறுபாடு
- தமிழகத்தில் வைணவம் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவாக உள்ளது.
- வடகலை வைணவம் பரவிய இடம் = காஞ்சிபுரம்.
- தென்கலை வைணவம் பரவிய இடம் = ஸ்ரீரங்கம்.
- வடகலை பின்பற்றும் மொழி = சமஸ்க்கிருதம்.
- தென்கலை பின்பற்றும் மொழி = தமிழ்.
- வடகலை பின்பற்றும் நூல்கள் = சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேத நூல்கள்.
- தென்கலை பின்பற்றும் நூல்கள் = தமிழில் பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய “நாலாயிர திவ்வியப் பிரபந்த” நூலினை பின்பற்றுகின்றனர்.
வட இந்தியாவில் பக்தி இயக்கம்
- வட இந்தியாவில் பக்தி சிந்தனையை “மக்கள் இயக்கமாக” மாற்றியவர் = இராமாநந்தர்.
- மதுராவுக்கு அருகே “கோவர்தன் குன்றுகளில்” கிருஷ்ணனுக்கு கோவிலை அமைத்தவர் = தெலுங்கு அறிஞர் வல்லபாச்சாரியார்.
- பார்வைத்திறன் அற்ற தத்துவஞானி, இசைக்கலைஞர் = சூர்தாஸ்.
- வல்லபாச்சாரியார் அமைத்த மதுர கிருஷ்ணர் கோவிலோடு, ஆக்ராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலோடும் தொடர்பு உடையவர் = சூர்தாசர்.
- சூர்தாசர் இயற்றிய கவிதை நூல்களின் தொகுப்பு = சூர்சாகர்.
- கிருஷ்ணரின் தீவிர பெண் பக்தை = மேவார் நாட்டு இளவரசரின் மனைவி “மீராபாய்”.
- மீராபாய் யாரின் சீடராவார்? = ரவிதாஸ்.
- மீராபாய் புகழ்பெற காரணம் = அவரின் “பஜன்(பஜனை)” பாடல்கள்.
- தனது பாடல்கள், நடனங்கள் மூலம் கிருஷ்ண வழிபாட்டை பிரபலம் ஆக்கியவர் = சைத்தன்யர்.
- வங்காளத்தில் வைணவ சமயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் = சைத்தன்யர்.
- “சைதன்ய தேவா” என்றும் “சைதன்ய மகாபிரபு” என்றும் அழைக்கப்பட்டவர் = சைதன்ய தேவர்.
- “மகாபிரபு” என்று அழைக்கப்பட்ட தத்துவ ஞானி = சைதன்ய தேவர்.
- “இராமசரிதமானஸ்” என்னும் நூலின் ஆசிரியர் = துளசிதாசர்.
- “இராமசரிதமானஸ்” எம்மொழியில் எழுதப்பட்டது = இந்தி மொழி.
- நட்பு, விசுவாசம் ஆகிய உணர்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து எழுதப்பட்ட நூல் = இராமசரிதமானஸ்.
துக்காராம்
- துக்காராம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் = மகாராஸ்டிரா.
- துக்காராமின் காலம் = பதினேழாம் நூற்றாண்டு.
- விஷ்ணுவின் அவதாரமான “விதோபா” குறித்து துக்காராம் படைத்த ஆன்மீகப் பாடல்கள் = “அபங்கா” அல்லது “கீர்த்தனைகள்” என்று அழைக்கப்படுகிறது.
- விதோபா கோவில் (அல்லது) பாண்டு ரங்கா கோவில் உள்ள இடம் = மகாராஸ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூர் (அல்லது) பண்டரிபுரம் என்னுமிடத்தில் உள்ளது.
- வங்காளத்திற்கு சைதன்யர் போல், மகாராஸ்டிராவிற்கு “துக்காராம்”.
இந்தியாவில் சூபியிஸம்
- சிந்துவை அரேபியர்கள் கைப்பற்றிய காலத்தில் சூபியிஸம் இந்தியாவிற்குள் நுழைந்தது.
- சூபியிஸத்தை இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய இரு சமயங்களை சார்ந்தவர்களும் பின்பற்றினர்.
சூபயிஸம் பெயர் காரணம்
- சூபி என்ற சொல் “சுப்” என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.
- சுப் என்பதன் பொருள் = கம்பளி.
- சூபிக்கள் சொரசொரப்பான முரட்டு கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
- சூபியிசம் அடிப்படையில் இஸ்லாம் மதத்தை சார்ந்ததாக இருந்தாலும், எந்த இரண்டு மதத்தின் சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருக்கிறது = இந்து, மகாயான பௌத்தம்.
- எந்த புத்த சமயத்தின் கருத்துக்களை சூபியிசம் பெற்றிருக்கிறது = மகாயான பௌத்தம்.
- உலோமாக்களின் கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிசம் மறுத்தது.
சூபி பிரிவுகள்
- இடைக்காலத்தில் சூபிக்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை,
-
-
- சிஸ்டி
- சுரவார்டி
- பிர்தௌசி
-
-
- சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் = மொய்னுதீன் சிஸ்டி.
- மொய்னுதீன் சிஸ்டி மறைந்த ஆண்டு = 1236.
- மொய்னுதீன் சிஷ்டி மறைந்த இடம் = ஆஜ்மீர் (ராஜஸ்தான், இந்தியா).
- மொய்னுதீன் சிஷ்டி நினைவிடம் உள்ள இடம் = ஷரிப் தர்கா, ஆஜ்மீர்.
- புகழ்பெற்ற அறிஞர் “அமீர் குஸ்ரு”, எந்த சிஸ்டி அமைப்பின் சூபி துறவியை பின்பற்றினார் = நிஜாமுதீன் அவுலியா.
- “சுரவார்டி” சூபி அமைப்பை தோற்றுவித்தவர் = ஈரானை சேர்ந்த சூபி துறவி “அப்துல் வகித் அபுநஜிப்” ஆவார்.
- பிர்தௌசி அமைப்பு, சுரவார்டி அமைப்பின் கிளை அமைப்பாகும்.
- பிர்தௌசி அமைப்பு செயல்பட்ட மாநிலம் = பீகார்.
- பிர்தௌசி பீகார் மாநிலத்தில் மட்டுமே செயல்பட்டது.
கபீர் வரலாறு
- கபீர் ஓர் இஸ்லாமியர்.
- ஆனால் வாரணாசியில் இருந்த “இராமாநந்தரின்” தலைமையை ஏற்றார்.
- இந்து – இஸ்லாம் சமயங்கள் இடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டவர் = கபீர்.
- பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே, வடிவமற்றவர் என்றும் நம்பியவர் = கபீர்.
- கபீரின் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன = போஜ்பூரி மொழி மற்றும் உருது மொழி கலந்து எழுதப்பட்டுள்ளன.
- கபீரின் கவிதை தொகுப்பு நூல்கள் = கிரந்தவளி, பைஜக்.
குருநானக் வரலாறு
- குருநானக் பிறந்த ஆண்டு = 1469.
- குருநானக் பிறந்த இடம் = லாகூர் அருகே கிராமம்.
- குருநானக் மறைந்த இடம் = லாகூர் அருகே உள்ள “கர்தார்பூர்”.
- குருநானக் மறைந்த ஆண்டு = 1539.
- குருநானக்கின் 550 வது பிறந்த நாளை (2019 ம் வருடம்) சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் “நடைப்பாதை” ஒன்றை இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வரை அமைத்து வருகிறது.
-
- நானக் கோவில் அமைந்துள்ள இடம் = குர்தாஸ்பூர், பஞ்சாப், இந்தியா.
- குருத்வாரா தர்பார் சாகிப் கோவில் அமைந்துள்ள இடம் = கர்தார்பூர், லாகூர், பாகிஸ்தான்.
-
- இந்தியாவின் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூரில் அமைந்துள்ள நானக் கோவிலில் இருந்து, பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாகிப் கோவில் வரை நடைப்பாதை ஒன்றை இந்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
- குருநானக் தனக்கு பின்னர் யாரை குருவாக நியமித்தார் = தனது சீடர் “லேனா” என்பவரை.
குருநானக் போதனைகள்
- கடவுள் வடிவமற்றவர் என்று போதித்தார் குருநானக்.
- தன்னைப் பின்பற்றுவோரை, அமைதிக்காகவும், வீடுபேற்றிற்காகவும் கடவுளை நினைத்து தியானம் செய்யும்படி கோரினார்.
- குருநானக்கின் போதனைகளே, சீக்கிய மதத்தின் மூல கோட்பாடு ஆகும்.
சீக்கியர்களின் முதல் குரு
- சீக்கியர்களின் முதல் குரு = குருநானக்.
- குருநானக் வேதசடங்குகள், சாதி பாகுபாட்டை எதிர்த்தார்.
சீக்கியர்களின் புனித நூல்
- சீக்கியர்களின் புனித நூல் = குரு கிரந்சாகிப்.
- குரு கிரந்சாகிப் = குருநானக், மற்றும் பிற சீக்கிய குருக்களின் போதனைகளின் தொகுப்பு.
குருத்வாரா
- குருநானக்கின் போதனைகள் எவ்வாறு பரப்புரை செய்யப்பட்டன = “கீர்த்தன்” எனப்படும் பாடல்கள் பாடும் இசைக்குழுக்கள் மூலம்.
- குருநானக்கின் பக்தர்கள் எங்கு ஒன்று கூடுவர் = “தர்மசாலைகள்” எனப்படும் ஓய்வு விடுதிகள்.
- தர்மசாலைகள் எனப்பும் ஓய்வு விடுதிகளே, பிற்காலத்தில் “குருத்வாரா”க்களாக மாறின.
குரு கோவிந்த் சிங்
- யாருடைய காலத்தில் சீக்கிய மதத்தில் “பாகல்” எனப்படும் திருமுழக்கு செய்யும் முறை அறிமுகம் ஆனது = குரு கோவிந்த் சிங்.
- “பாகல்” முறையை அறிமுகம் செய்தவர் = குரு கோவிந்த் சிங்.
- “பாகல்” என்றால் என்ன = சீக்கிய மதத்தில் “பாகல்” என்பது “குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல் முறையாகும்.
கால்சா அமைப்பு
- “கால்சா” என்பதன் பொருள் = தூய்மை.
- கால்சா = ஒழுங்கமைக்கப்பட்ட சகோதரத்துவ அமைப்பாகும்.
- பாகல் முறையில் திருமுழக்கு பெற்றவர்கள், இந்த “கால்சா” அமைப்பில் சேருவர்.
- “கால்சா” அமைப்பில் சேருபவர்களுக்கு “சிங்” (சிங்கம்) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
கால்சா உறுப்பினர்கள்
- கால்சா அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் 5 தனித்தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். அவை,
- கேஷ் (வெட்டப்படாத முடி)
- கன்கா (சிகைக்கோல்)
- கிர்பான் (குறுவாள்)
- கடா (இரும்பு காப்பு)
- கச்சேரா (உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை)
- சீக்கிய குருவான “குரு கோவிந்த் சிங்” காலத்திற்கு பிறகு, சீக்கியர்களின் புனித நூலான “குரு கிரந்சாகிப்” நூல், குருவாகப் கருதப்பட்டு, அதனை பரப்பும் வேலையை “கால்சா” அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
புத்தக வினாக்கள்
- கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்? = பெரியாழ்வார்.
- அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்? = ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்)
- பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்? = இராமாநந்தர்.
- சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்? = மொய்னுதீன் சிஸ்டி.
- சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்? = குருநானக்.
- பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் _____________ ? = விஷ்ணு சித்தர்.
- சீக்கியர்களின் புனிதநூல் __________ ஆகும்? = குரு கிரந்சாகிப்
- மீராபாய் ______________ என்பாரின் சீடராவார்? = ரவிதாஸ்.
- _________________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது? = இராமானுஜர்.
- தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் _____________ என்ற இடத்தில் அமைந்துள்ளது? = கர்தார்பூர்.
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்