புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

Table of Contents

7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

  • அறிவின் வழிப்பட = ஞானமார்க்கம்.
  • சடங்குகள், நற்செயல்கள் வழியாக வழிப்பட = கர்மா மார்க்கம்.
  • ஞானமார்க்கம், கர்மா மார்க்கம் ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறந்தது = பக்தி மார்க்கம்.
  • ஞானமார்க்கம், கர்மா மார்க்கம் ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறந்தது “பக்தி மார்க்கம்” எனக் கூறும் நூல் = பகவத் கீதை.

பக்தி இயக்கம்

  • பக்தி இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி.
  • தமிழகத்தில் “பக்தி இயக்கம்” எப்பொழுது துவங்கியது = கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
  • பக்தி இயக்கம் எதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது = தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் பக்தி இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சூபி தத்துவம்

  • தொடக்கக்கால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு எதிராகத் தோன்றியதே சூபி தத்துவம் ஆகும்.
  • கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்றனர் சூபி வாதிகள்.

ஹரிதாசர்

  • “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” (There is only one god, though Hindus and Muslims call him by different names) என்று கூறியவர் = ஹரிதாசர்.

தமிழகத்தில் பக்தி இயக்கம்

  • தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர்கள் = ஆழ்வார்களும் நாயன்மார்களும்.
  • ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி இயக்கத்தை பரப்ப பயன்படுத்திய மொழி = தமிழ் மொழி.
  • பக்தி இயக்கத்தினர் ஆண், பெண் சமத்துவத்தை முன்னிறுத்தினர்.

வைணவம் சமயம்

  • ஆழ்வார்கள் மொத்தம் = 12.
  • விஷ்ணு பக்தி இயக்கம் (அல்லது) வைணவம் சார்ந்த ஆழ்வார்களில் இருவர் தனிச் சிறப்பு பெற்றுள்ளனர். அவர்கள்,
    • நம்மாழ்வார்
    • ஆண்டாள்

நம்மாழ்வார் குறிப்பு

  • நம்மாழ்வார் இயற்றியது = திருவாய்மொழி.
  • திருவாய்மொழியில் உள்ள பாடல்கள் = 1102 பத்திகள்.
  • நம்மாழ்வார் பாடிய மொத்த பாடல்கள் = 4000.
  • நம்மாழ்வாரின் 4000 பாடல்களை தொகுத்தவர் = நாதமுனி.
  • நம்மாழ்வாரின் பாடல்களை, நாதமுனி எந்த பெயரில் தொகுத்துள்ளார் = நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

ஆண்டாள் குறிப்பு

  • 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் = ஆண்டாள்.
  • பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டார் = விஷ்ணு சித்தர்.
  • “விஷ்ணு சித்தர்” என அழைக்கப்படும் ஆழ்வார் = பெரியாழ்வார்.
  • தன்னை தாய் யசோதையாக உருவகித்து, குழந்தை கிருஷ்ணனை பற்றி பல பாடல்களை பாடியவர் = பெரியாழ்வார்.
  • பெரியாழ்வார், ஆண்டாளை குழந்தையாக எங்கு கண்டெடுத்தார் = திருவில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில்.
  • ஆண்டாள் என்பதன் பொருள் = ஆட்சி புரிபவள்.
  • ஆண்டாள் இயற்றிய நூல்கள்,
    1. திருப்பாவை (கிருஷ்ணனை அடையும் வழி)
    2. நாச்சியார் திருமொழி (பெண்ணின் புனிதப் பாடல்கள்)
  • “திருவரங்கம் அரங்கநாதன்” மீதான தனது காதலை ஆண்டாள் தனது பாடல்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

ஆழ்வார்கள் பெயர்கள்

  • ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் ஆவர். இவர்கள் “வைணவ அடியார்கள்” என்றும் அழைக்கப்படுவர்.
      1. பொய்கை ஆழ்வார்
      2. பூதத்தாழ்வார்
      3. பேயாழ்வார்
      4. திருமழிசையாழ்வார்
      5. பெரியாழ்வார்
      6. தொண்டரடிப்பொடி ஆழ்வார்
      7. திருமங்கை ஆழ்வார்
      8. திருப்பண் ஆழ்வார்
      9. குலசேகர ஆழ்வார்
      10. நம்மாழ்வார்
      11. மதுரகவி ஆழ்வார்
      12. ஆண்டாள்.
  • முதல் ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் = மூன்று.
  • முதல் மூன்று ஆழ்வார்கள் = பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

நாயன்மார்கள் (சைவ அடியார்கள்)

  • நாயன்மார்கள் (சைவ அடியார்கள்) மொத்தம் எத்தனை பேர் = 63 பேர்.
  • “மும்மூர்த்திகள்” என அழைக்கப்படுபவர்கள் = திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் .
  • நாயன்மார்களின் பாடல்களை தொகுத்தவர் = நம்பியாண்டார் நம்பி.
  • எந்த வருடம் நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறையை தொகுத்ததாக கூறப்படுகிறது = கி.பி. 1000.
  • சைவ புனித நூல் = திருமுறை.
  • திருமுறையில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை = 12.
  • சைவத் திருமுறை 12 இல் நம்பியாண்டார் நம்பி தொகுத்த நூல்கின் எண்ணிக்கை = 11.
  • 12 வது நூல் சேக்கிழார் எழுதிய “பெரியபுராணம்” ஆகும்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

ஆதிசங்கரர்

  • ஆதிசங்கரர் என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
  • ஆதிசங்கரரின் காலம் = ஏறத்தாழ கி.பி. 700 – 750.
  • ஆதிசங்கரர் கூறிய தத்துவம் = அத்வைதம்.
  • ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தின் சாரம் = ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணைதல்.
  • ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் மொத்தம் = நான்கு.
  • ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் = பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி.
  • ஆதிசங்கரர் எதை மீட்டெடுக்க முயற்சி செய்தார் = வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
  • ஆதிசங்கரரின் பணிகளில் சிறந்தது = “பிரம்ம சூத்திரம்” என்னும் நூலுக்கு ஆதி சங்கரர் எழுதிய உரை சிறப்பு வாய்ந்தது ஆகும்.
  • வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல் = பிரம்ம சூத்திரம்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு

  • இராமானுஜரின் காலம் = பதினொன்றாம் நூற்றாண்டு.
  • இராமானுஜர் கூறிய தத்துவம் = விசிஷ்டாத்வைதம்.
  • இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் கூறும் சாரம் = ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
  • இராமானுஜர் பிற்காலத்தில் தங்கிய இடம் = ஸ்ரீரங்கம்.
  • சாதியக் கட்டுப்பாடுகளைக் கண்டனம் செய்தவர் = இராமானுஜர்.
  • இராமானுஜரின் பக்திநெறி = “ஸ்ரீவைஷ்ணவம்” என்று அழைக்கப்படுகிறது.

வடகலை தென்கலை வேறுபாடு

  • தமிழகத்தில் வைணவம் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவாக உள்ளது.
  • வடகலை வைணவம் பரவிய இடம் = காஞ்சிபுரம்.
  • தென்கலை வைணவம் பரவிய இடம் = ஸ்ரீரங்கம்.
  • வடகலை பின்பற்றும் மொழி = சமஸ்க்கிருதம்.
  • தென்கலை பின்பற்றும் மொழி = தமிழ்.
  • வடகலை பின்பற்றும் நூல்கள் = சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேத நூல்கள்.
  • தென்கலை பின்பற்றும் நூல்கள் = தமிழில் பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய “நாலாயிர திவ்வியப் பிரபந்த” நூலினை பின்பற்றுகின்றனர்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

வட இந்தியாவில் பக்தி இயக்கம்

  • வட இந்தியாவில் பக்தி சிந்தனையை “மக்கள் இயக்கமாக” மாற்றியவர் = இராமாநந்தர்.
  • மதுராவுக்கு அருகே “கோவர்தன் குன்றுகளில்” கிருஷ்ணனுக்கு கோவிலை அமைத்தவர் = தெலுங்கு அறிஞர் வல்லபாச்சாரியார்.
  • பார்வைத்திறன் அற்ற தத்துவஞானி, இசைக்கலைஞர் = சூர்தாஸ்.
  • வல்லபாச்சாரியார் அமைத்த மதுர கிருஷ்ணர் கோவிலோடு, ஆக்ராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலோடும் தொடர்பு உடையவர் = சூர்தாசர்.
  • சூர்தாசர் இயற்றிய கவிதை நூல்களின் தொகுப்பு = சூர்சாகர்.
  • கிருஷ்ணரின் தீவிர பெண் பக்தை = மேவார் நாட்டு இளவரசரின் மனைவி “மீராபாய்”.
  • மீராபாய் யாரின் சீடராவார்? = ரவிதாஸ்.
  • மீராபாய் புகழ்பெற காரணம் = அவரின் “பஜன்(பஜனை)” பாடல்கள்.
  • தனது பாடல்கள், நடனங்கள் மூலம் கிருஷ்ண வழிபாட்டை பிரபலம் ஆக்கியவர் = சைத்தன்யர்.
  • வங்காளத்தில் வைணவ சமயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் = சைத்தன்யர்.
  • “சைதன்ய தேவா” என்றும் “சைதன்ய மகாபிரபு” என்றும் அழைக்கப்பட்டவர் = சைதன்ய தேவர்.
  • “மகாபிரபு” என்று அழைக்கப்பட்ட தத்துவ ஞானி = சைதன்ய தேவர்.
  • “இராமசரிதமானஸ்” என்னும் நூலின் ஆசிரியர் = துளசிதாசர்.
  • “இராமசரிதமானஸ்” எம்மொழியில் எழுதப்பட்டது = இந்தி மொழி.
  • நட்பு, விசுவாசம் ஆகிய உணர்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து எழுதப்பட்ட நூல் = இராமசரிதமானஸ்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

 

7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

துக்காராம்

  • துக்காராம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் = மகாராஸ்டிரா.
  • துக்காராமின் காலம் = பதினேழாம் நூற்றாண்டு.
  • விஷ்ணுவின் அவதாரமான “விதோபா” குறித்து துக்காராம் படைத்த ஆன்மீகப் பாடல்கள் = “அபங்கா” அல்லது “கீர்த்தனைகள்” என்று அழைக்கப்படுகிறது.
  • விதோபா கோவில் (அல்லது) பாண்டு ரங்கா கோவில் உள்ள இடம் = மகாராஸ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூர் (அல்லது) பண்டரிபுரம் என்னுமிடத்தில் உள்ளது.
  • வங்காளத்திற்கு சைதன்யர் போல், மகாராஸ்டிராவிற்கு “துக்காராம்”.

இந்தியாவில் சூபியிஸம்

  • சிந்துவை அரேபியர்கள் கைப்பற்றிய காலத்தில் சூபியிஸம் இந்தியாவிற்குள் நுழைந்தது.
  • சூபியிஸத்தை இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய இரு சமயங்களை சார்ந்தவர்களும் பின்பற்றினர்.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

சூபயிஸம் பெயர் காரணம்

  • சூபி என்ற சொல் “சுப்” என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.
  • சுப் என்பதன் பொருள் = கம்பளி.
  • சூபிக்கள் சொரசொரப்பான முரட்டு கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • சூபியிசம் அடிப்படையில் இஸ்லாம் மதத்தை சார்ந்ததாக இருந்தாலும், எந்த இரண்டு மதத்தின் சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருக்கிறது = இந்து, மகாயான பௌத்தம்.
  • எந்த புத்த சமயத்தின் கருத்துக்களை சூபியிசம் பெற்றிருக்கிறது = மகாயான பௌத்தம்.
  • உலோமாக்களின் கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிசம் மறுத்தது.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

சூபி பிரிவுகள்

  • இடைக்காலத்தில் சூபிக்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை,
        1. சிஸ்டி
        2. சுரவார்டி
        3. பிர்தௌசி
  • சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் = மொய்னுதீன் சிஸ்டி.
  • மொய்னுதீன் சிஸ்டி மறைந்த ஆண்டு = 1236.
  • மொய்னுதீன் சிஷ்டி மறைந்த இடம் = ஆஜ்மீர் (ராஜஸ்தான், இந்தியா).
  • மொய்னுதீன் சிஷ்டி நினைவிடம் உள்ள இடம் = ஷரிப் தர்கா, ஆஜ்மீர்.
  • புகழ்பெற்ற அறிஞர் “அமீர் குஸ்ரு”, எந்த சிஸ்டி அமைப்பின் சூபி துறவியை பின்பற்றினார் = நிஜாமுதீன் அவுலியா.
  • “சுரவார்டி” சூபி அமைப்பை தோற்றுவித்தவர் = ஈரானை சேர்ந்த சூபி துறவி “அப்துல் வகித் அபுநஜிப்” ஆவார்.
  • பிர்தௌசி அமைப்பு, சுரவார்டி அமைப்பின் கிளை அமைப்பாகும்.
  • பிர்தௌசி அமைப்பு செயல்பட்ட மாநிலம் = பீகார்.
  • பிர்தௌசி பீகார் மாநிலத்தில் மட்டுமே செயல்பட்டது.

கபீர் வரலாறு

  • கபீர் ஓர் இஸ்லாமியர்.
  • ஆனால் வாரணாசியில் இருந்த “இராமாநந்தரின்” தலைமையை ஏற்றார்.
  • இந்து – இஸ்லாம் சமயங்கள் இடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டவர் = கபீர்.
  • பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே, வடிவமற்றவர் என்றும் நம்பியவர் = கபீர்.
  • கபீரின் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன = போஜ்பூரி மொழி மற்றும் உருது மொழி கலந்து எழுதப்பட்டுள்ளன.
  • கபீரின் கவிதை தொகுப்பு நூல்கள் = கிரந்தவளி, பைஜக்.
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

குருநானக் வரலாறு

  • குருநானக் பிறந்த ஆண்டு = 1469.
  • குருநானக் பிறந்த இடம் = லாகூர் அருகே கிராமம்.
  • குருநானக் மறைந்த இடம் = லாகூர் அருகே உள்ள “கர்தார்பூர்”.
  • குருநானக் மறைந்த ஆண்டு = 1539.
  • குருநானக்கின் 550 வது பிறந்த நாளை (2019 ம் வருடம்) சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் “நடைப்பாதை” ஒன்றை இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வரை அமைத்து வருகிறது.
      1. நானக் கோவில் அமைந்துள்ள இடம் = குர்தாஸ்பூர், பஞ்சாப், இந்தியா.
      2. குருத்வாரா தர்பார் சாகிப் கோவில் அமைந்துள்ள இடம் = கர்தார்பூர், லாகூர், பாகிஸ்தான்.
  • இந்தியாவின் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூரில் அமைந்துள்ள நானக் கோவிலில் இருந்து, பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாகிப் கோவில் வரை நடைப்பாதை ஒன்றை இந்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • குருநானக் தனக்கு பின்னர் யாரை குருவாக நியமித்தார் = தனது சீடர் “லேனா” என்பவரை.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

குருநானக் போதனைகள்

  • கடவுள் வடிவமற்றவர் என்று போதித்தார் குருநானக்.
  • தன்னைப் பின்பற்றுவோரை, அமைதிக்காகவும், வீடுபேற்றிற்காகவும் கடவுளை நினைத்து தியானம் செய்யும்படி கோரினார்.
  • குருநானக்கின் போதனைகளே, சீக்கிய மதத்தின் மூல கோட்பாடு ஆகும்.

சீக்கியர்களின் முதல் குரு

  • சீக்கியர்களின் முதல் குரு = குருநானக்.
  • குருநானக் வேதசடங்குகள், சாதி பாகுபாட்டை எதிர்த்தார்.

சீக்கியர்களின் புனித நூல்

  • சீக்கியர்களின் புனித நூல் = குரு கிரந்சாகிப்.
  • குரு கிரந்சாகிப் = குருநானக், மற்றும் பிற சீக்கிய குருக்களின் போதனைகளின் தொகுப்பு.

குருத்வாரா

  • குருநானக்கின் போதனைகள் எவ்வாறு பரப்புரை செய்யப்பட்டன = “கீர்த்தன்” எனப்படும் பாடல்கள் பாடும் இசைக்குழுக்கள் மூலம்.
  • குருநானக்கின் பக்தர்கள் எங்கு ஒன்று கூடுவர் = “தர்மசாலைகள்” எனப்படும் ஓய்வு விடுதிகள்.
  • தர்மசாலைகள் எனப்பும் ஓய்வு விடுதிகளே, பிற்காலத்தில் “குருத்வாரா”க்களாக மாறின.

குரு கோவிந்த் சிங்

  • யாருடைய காலத்தில் சீக்கிய மதத்தில் “பாகல்” எனப்படும் திருமுழக்கு செய்யும் முறை அறிமுகம் ஆனது = குரு கோவிந்த் சிங்.
  • “பாகல்” முறையை அறிமுகம் செய்தவர் = குரு கோவிந்த் சிங்.
  • “பாகல்” என்றால் என்ன = சீக்கிய மதத்தில் “பாகல்” என்பது “குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல் முறையாகும்.

கால்சா அமைப்பு

  • “கால்சா” என்பதன் பொருள் = தூய்மை.
  • கால்சா = ஒழுங்கமைக்கப்பட்ட சகோதரத்துவ அமைப்பாகும்.
  • பாகல் முறையில் திருமுழக்கு பெற்றவர்கள், இந்த “கால்சா” அமைப்பில் சேருவர்.
  • “கால்சா” அமைப்பில் சேருபவர்களுக்கு “சிங்” (சிங்கம்) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்

கால்சா உறுப்பினர்கள்

  • கால்சா அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் 5 தனித்தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். அவை,
    1. கேஷ் (வெட்டப்படாத முடி)
    2. கன்கா (சிகைக்கோல்)
    3. கிர்பான் (குறுவாள்)
    4. கடா (இரும்பு காப்பு)
    5. கச்சேரா (உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை)
  • சீக்கிய குருவான “குரு கோவிந்த் சிங்” காலத்திற்கு பிறகு, சீக்கியர்களின் புனித நூலான “குரு கிரந்சாகிப்” நூல், குருவாகப் கருதப்பட்டு, அதனை பரப்பும் வேலையை “கால்சா” அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

புத்தக வினாக்கள்

  1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்? = பெரியாழ்வார்.
  2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்? = ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்)
  3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்? = இராமாநந்தர்.
  4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்? = மொய்னுதீன் சிஸ்டி.
  5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்? = குருநானக்.
  6. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் _____________ ? = விஷ்ணு சித்தர்.
  7. சீக்கியர்களின் புனிதநூல் __________ ஆகும்? = குரு கிரந்சாகிப்
  8. மீராபாய் ______________ என்பாரின் சீடராவார்? = ரவிதாஸ்.
  9. _________________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது? = இராமானுஜர்.
  10. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் _____________ என்ற இடத்தில் அமைந்துள்ளது? = கர்தார்பூர்.

 

 

← Back

Thank you for your response. ✨

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *