9TH TAMIL ஏறு தழுவுதல்

9TH TAMIL ஏறு தழுவுதல்

9TH TAMIL ஏறு தழுவுதல்

9TH TAMIL ஏறு தழுவுதல்

  • வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை மாடுகள்.
  • முல்லை, மருதநிலங்களில் கால்கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல்.
  • ஏறுதழுவுதல், தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல்

  • ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.
  • கலித்தொகையின் முல்லைக்கலியில் “ஏறு தழுவுதல்” பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் நிகழ்வு = ஏறு தழுவுதல்.

எழுந்தது துகள்,

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு,

கலங்கினர் பலர்

–    கலித்தொகை

  • “காளைகளின் பாய்ச்சல்” பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,

மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்

துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்

மள்ளர் வனப்பு ஒத்தன

–    கலித்தொகை

  • மேற்கண்ட பாடலில் மருதநிலத்து வீரர்களுக்கு இணையாக காளைகள் விவரிக்கப்பட்டுள்ளது.
9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்

ஏறுகோள்

  • கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  • “ஏறுகோள்” பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை
  • “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் உள்ள ஐம்பெருங்காப்பிய நூல் = சிலப்பதிகாரம்.
  • “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ள இலக்கண நூல் = புறப்பொருள் வெண்பாமாலை.

சிற்றிலக்கியத்தில் ஏறு தழுவுதல்

  • “ஏறு தழுவுதல்” பற்றி குறிப்புகள் உள்ள சிற்றிலக்கிய வகை = பள்ளு.
  • “எருதுகட்டி” என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் “கண்ணுடையம்மன் பள்ளு” பதிவு செய்துள்ளது.
  • ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள சிற்றிலக்கியம் = பள்ளு
  • ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள பள்ளு இலக்கியம் = கண்ணுடையம்மன் பள்ளு.
  • “கண்ணுடையம்மன் பள்ளு” நூலின் ஆசிரியர் = முத்துகுட்டிப் புலவர் (முத்துநாயகப் புலவர்).

எருது பொருதார் கல்

9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்
  • “எருது பொருதார் கல்” கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் = சேலம்.
  • சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது.
  • கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு.
  • கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூர்

9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்
  • கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது.

மதுரை மாவட்டம் கல்லூத்து மேட்டுப்பட்டி

  • திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சித்திரக்கல் புடவு

  • தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகத்தில் காளை தெய்வம்

9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்
  • சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.

ஐராவதம் மகாதேவன்

  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளம்

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

ஏறுகள்

  • ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன.

ஏறு தழுவுதல் வேறு பெயர்கள்

  • மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

சல்லிக்கட்டு

  • சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
  • சல்லி என்பதன் பொருள் = மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.

ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு

9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்
  • ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு = காளைச் சண்டை.
  • இதில் காளை மாட்டினை கொன்று அடக்க வேண்டும்.

வெளிநாடுகளில் காளைப் போர் குறித்த சித்திரங்கள்

  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த இடம்பெற்றுள்ளன.
9TH TAMIL ஏறு தழுவுதல்
9TH TAMIL ஏறு தழுவுதல்

காங்கேயம் காளை மாடுகள்

  • தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
  • தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது.
  • தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படும் காளை இனம் = காங்கேயம் காளைகள்.
  • பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன.
  • பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.
  • மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன.
  • அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.
  • இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply