9TH TAMIL மணிமேகலை

9TH TAMIL மணிமேகலை

9TH TAMIL மணிமேகலை

9TH TAMIL மணிமேகலை

  • மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.
  • அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் விழாதான்.
  • அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது.
  • அவ்விழா நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைகிறது மணிமேகலையின் விழாவறை காதை.
  • இந்திராவிழா பற்றி மணிமேகலையில் கூறப்படும் காதை = விழாவறைக் காதை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • சமயக் கணக்கர் = சமயத் தத்துவவாதிகள்
  • பாடைமாக்கள் = பல மொழிபேசும் மக்கள்
  • குழீஇ = ஒன்றுகூடி
  • தோம் = குற்றம்
  • கோட்டி = மன்றம்
  • பொலம் = பொன்
  • வேதிகை = திண்ணை
  • தூணம் = தூண்
  • தாமம் = மாலை
  • கதலிகைக் கொடி = சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
  • காழூன்று கொடி = கொம்புகளில் கட்டும் கொடி
  • விலோதம் = துணியாலான கொடி
  • வசி = மழை
  • செற்றம் = சினம்
  • கலாம் = போர்
  • துருத்தி = ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு)

இலக்கணக்குறிப்பு

  • தோரணவீதியும், தோமறு கோட்டியும் = எண்ணும்மைகள்
  • காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் = இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள்
  • மாற்றுமின், பரப்புமின் = ஏவல் வினைமுற்றுகள்
  • உறுபொருள் = உரிச்சொல்தொடர்
  • தாழ்பூந்துறை = வினைத்தொகை
  • பாங்கறிந்து = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • நன்பொருள், தண்மணல், நல்லுரை = பண்புத்தொகைகள்
9TH TAMIL மணிமேகலை
9TH TAMIL மணிமேகலை

மணிமேகலை முக்கிய அடிகள்

  • “மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “பசியும் பிணியும் பகையும் நீங்கி” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “அறம் எனப்படுவது யாதெனின் கேட்பின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை

பாடல் பொருள்

  • அரசருக்குரிய அமைச்சர் குழு = ஐம்பெருங்குழு, எண்பேராயம்.
  • புகார் நகரத்தில் பல மொழிகள் பேசும் அயல்நாட்டினரும் குழுமியிருந்தனர்.

ஐம்பெருங்குழு

  • அரசருக்குரிய அமைச்சர் குழு = ஐம்பெருங்குழு.
  • ஐம்பெருங்குழுவில் உள்ள உறுப்பினர்கள்
    • அமைச்சர்
    • சடங்கு செய்விப்போர்
    • படைத்தலைவர்
    • தூதர்
    • சாரணர் (ஒற்றர்)
9TH TAMIL மணிமேகலை
9TH TAMIL மணிமேகலை

எண்பேராயம் என்றால் என்ன

  • அரசருக்குரிய அமைச்சர் குழு = எண்பேராயம்.
  • எண்பேராயம் குழுவில் உள்ள உறுப்பினர்கள்,
  • கரணத்தியலவர்
  • கரும விதிகள்
  • கனகச்சுற்றம்
  • கடைக்காப்பாளர்
  • நகரமாந்தர்
  • படைத்தலைவர்
  • யானை வீரர்
  • இவுளி மறவர்

மணிமேகலை நூல் குறிப்பு

  • தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
  • மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
  • இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.
  • பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம்.
  • இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது;
  • பௌத்த சமயச் சார்புடையது.
  • கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
  • முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.
  • மணிமேகலையின் முதல் காதை = விழாவறை காதை.

சீத்தலைச் சாத்தனார் ஆசிரியர் குறிப்பு

  • மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
  • கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
  • இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார்.
  • சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
  • தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.

 

Leave a Reply