9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்
9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்
- நாம் பேசும் போதும் எழுதும் பொழுதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது அவசியமாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வல்லினம் மிகா இடங்கள்
அது செய்
இது காண் |
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. |
எது கண்டாய்?
எவை தவறுகள்? |
இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. |
குதிரை தாண்டியது.
கிளி பேசும். |
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. |
அண்ணனோடு போ
எனது சட்டை. |
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. |
தந்தையே பாருங்கள்.
மகளே தா. |
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. |
வந்த சிரிப்பு
பார்த்த பையன் |
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
நாடு கண்டான்.
கூடு கட்டு |
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. |
வரும்படி சொன்னார்.
பெறும்படி கூறினார். |
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. |
வாழ்க தமிழ்
வருக தலைவா! |
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. |
குடிதண்ணீர், வளர்பிறை,
திருவளர்செல்வன் |
வினைத்தொகையில் வல்லினம் மிகாது. |
ஒரு புத்தகம், மூன்று கோடி | எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது. |
தாய்தந்தை, இரவுபகல் | உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. |
அன்று சொன்னார்.
என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப் போன்ற கவிஞர் யார்? |
அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. |
அவ்வளவு பெரியது.
அத்தனை சிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்ட காட்சி. நேற்றைய சண்டை. |
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை,
இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. |
என்னோடு சேர்.
மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி. |
மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. |
தமிழ் படி. (ஐ)
கை தட்டு. (ஆல்) வீடு சென்றாள்.(கு) கரை பாய்ந்தான். (இருந்து) |
இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. |
தலைவி கூற்று.
தொண்டர் படை |
நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது. |
உறு பொருள்
நனி தின்றான். கடி காவல் |
சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. |
பார் பார்
சலசல |
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. |
கருத்துகள்
பொருள்கள் வாழ்த்துகள் |
கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
(மிகும் என்பர் சிலர்) |
பைகள், கைகள் | ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. |
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- 9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்
- 9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை