9TH TAMIL அகழாய்வுகள்

9TH TAMIL அகழாய்வுகள்

9TH TAMIL அகழாய்வுகள்

9TH TAMIL அகழாய்வுகள்

  • அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் தோண்டிச் செதுக்கி ஆராய்தல் ஆகும்.
  • அகழாய்வு வரலாறு முழுமை பெற உதவுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கீழடி அகழாய்வு பொருட்கள்

  • மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், உலோகப் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான்கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு-கறுப்புப் பானைகள், சதுரங்கக் காய்கள், தானியங்களைச் சேகரிக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன கூர் முனைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.

கீழடி நாகரிகம்

  • மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இவற்றுள் தொன்மையானவை சுமார் 2300ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.
  • இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட பெரும்பான்மையான இடங்கள், இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன.
  • ஆனால், கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரப்பொருள்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.
9TH TAMIL அகழாய்வுகள்
9TH TAMIL அகழாய்வுகள்

பாவேந்தர் பாரதிதாசன்

  • “அறிவை விரிவு செய்” என்று கூறியவர் = பாவேந்தர்.

இராபர்ட் புரூஸ்புட்

  • 150 ஆண்டுகளுக்கு முன்னால் 1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்.
  • இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.
  • இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கிடைத்தது = சென்னை அருகே பல்லாவரம்.
  • சென்னை பல்லாவரம் அருகே கற்கருவியை கண்டுபிடித்தவர் = இராபர்ட் புரூஸ்புட்.
  • தமிழகத்தில் அகழாய்வு பனி துவங்கிய ஆண்டு = 1863.

ரோமானியர்களின் பழங்காசுகள்

  • இராபர்ட் புரூஸ்புட் பல்லாவரத்தில் கற்கருவியை கண்டுபிடிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் கோவையில் ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரிக்கமேடு அகழாய்வு

  • அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.
  • அதனால், ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப் படுத்தப்பட்டது.
  • ரோமானியர்களுக்கும் நமக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்த அகழாய்வு = அரிக்கமேடு அகழாய்வு

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள்

  • 1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு வகை அறிவியல்

  • அறிவியலில் இரண்டு வகை உண்டு. அவை,
    • வணிக அறிவியல்
    • மக்கள் அறிவியல்.
9TH TAMIL அகழாய்வுகள்
9TH TAMIL அகழாய்வுகள்

பட்டிமண்டபம் என்றால் என்ன

  • பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு.
  • ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
  • “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம்
  • “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” என்று பாடியவர் = இளங்கோவடிகள்
  • “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்”என்று கூறியவர் = சீத்தலைச் சாத்தனார்.
  • “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருவாசகம்.
  • “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று பாடியவர் = மாணிக்கவாசகர்.
  • “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தில் உள்ள நகரப் படலம்.
  • “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பாடியவர் = கம்பர்.

அகழ்வாய்வில் தமிழகம்

  • உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன.
  • பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
  • இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
  • தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

 

Leave a Reply