டாகடர் அம்பேத்கர் தலைமையிலான வரைவு அறிக்கை குழு தனது முதல் வரைவு அறிக்கையை 1948 பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்தது
இரண்டாவது வரைவு அறிக்கை 1948 அக்டோபர் மாதம் சமர்பிக்கப்பட்டது
வரைவு அறிக்கை மீதான விவாதங்கள் எல்லாம் முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது
முதல் வாசிப்பு
அம்பேத்கர் இறுதி வரைவு அறிக்கையை அரசியல் நிர்ணயசபை முன் 1948 நவமபர் 4-ம் தேதி சமர்பித்தார்
அன்று வரைவு அறிக்கை மீதான் முதல் வாசிப்பு துவங்கியது
இது 5 நாள் நடந்தது. நவமபர் 9-ம் தேதி வரை நடைபெற்றது
இரண்டாவது வாசிப்பு
இறுதி வரைவு அறிக்கை மீதான இரண்டாவது வாசிப்பு, நவமபர் 15-ம் தேதி துவங்கியது.
ஒவ்வொரு வரியாக வாசித்து விவாதம் நடந்தது
இது 1949 அக்டோபர் 17-தேதி வரை நடைபெற்றது
இதில் சுமார் 7653 திருத்தங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறுதியாக 2473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டது
மூன்றாவது வாசிப்பு
அரசியலமைப்பு சட்டம் – இறுதி வரைவு அறிக்கை மீதான மூன்றாவது வாசிப்பு 1949 நவம்பர் 14-ம் தேதி துவங்கியது
வரைவு அறிக்கை மீதான விவாதங்கள் முடிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதா நிறைவேறியது என 1949 நவம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது
அன்றைய தினமே, இந்திய சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 299 பேரில், சபைக்கு வந்திருந்த 284 பேரிடம் ஒப்புதல் பெற்று கையொப்பம் பெறப்பட்டது
ஒப்புதல் பெறப்பட்ட 1949 நவம்பர் 26-ம் தேதிய “இந்திய அரசியல் அமைப்பு” ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாகும். இத்தேதிய அரசியலமைப்பு சட்டதின் முகப்புரையில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது
1949 நவம்பர் 26-ம் தேதி = “இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம்” எனப்படும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான 1949 நவம்பர் 26 அன்று, சட்டத்தில் இருந்தவை
முகப்புரை
395 சட்டங்கள்
8 அட்டவணைகள்
முழு சட்டமும் உருவாக்கிய பின்னரே “முகப்புரை” உருவாக்கப்பட்டது
அம்பேத்கர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வரைவு குழுவின் தலைவர் ஆவார்
இவர்,
இந்திய அரசியலமைப்பின் தந்தை
இந்திய அரசியலமைப்பின் சிற்பி
நவீன மனு என்றழைக்கப்படுகிறார்.
இவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார்.
கிரான்வில்லே ஆஸ்டின் (GRANVILLE AUSTIN) = “அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது ஒரு உயர்ந்த, முதன்மையான ஓர் சமூக ஆவணமாகும்” (first and foremost a social document) என குறிபிட்டுள்ளார்
வெளிநாடுகளில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார்.