DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

                             DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலக மூட்டு நோய் தினம்

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • உலக மூட்டு நோய் தினம் (WORLD ARTHIRITIS DAY, 12TH OCTOBER), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்நோயினை “உலக கீல்வாத நோய்”, உலகஆர்த்ரைடிஸ் தினம் என்றும் கூறுவர்
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு = DON’T DELAY, CONNECT TODAY: TIME2WORK

உலக விண்வெளி சங்கத்தை துவக்கி வைத்த பிரதமர்

  • மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்திய விண்வெளி சங்கம் (ISpA – INDIAN SPACE ASSOCIATION) – விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில் சங்கத்தை துவக்கி வைத்தார்
  • அதன் நிறுவன உறுப்பினர்களில் பார்தி ஏர்டெல், லார்சன் & டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், மேப்மைண்டியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தின் கன்னியாகுமரி கிராம்பிற்கு புவிசார் குறியீடு

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்க்கப்படும் கிராம்பிற்கு “கன்னியாகுமரி கிராம்பு” (KANYAKUMARI CLOVE) என்ற பெயரில் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
  • இந்தியாவில், கிராம்புகளின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன் ஆகும், இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது, அதே நேரத்தில் 750 மெட்ரிக் டன் கிராம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது

இந்திய ரயில்வேயின் நீண்டதூர சரக்கு ரயில்கள் – திரிசூல் மற்றும் கருடா

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • இந்திய இரயில்வே இரண்டு நீண்ட தூர சரக்கு ரயில்களான “திரிசூல்” மற்றும் “கருடா” ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது – இது சரக்கு ரயில்களின் சாதாரண அமைப்பை விட இரண்டு மடங்கு அல்லது பல மடங்கு அதிகமாகும் (RAILWAYS LAUNCH TWO LONG HAUL FREIGHT TRAINS ‘TRISHUL’, ‘GARUDA’)
  • திரிசூல் என்பது தெற்கு மத்திய ரயில்வேயின் (SCR) முதல் நீண்ட தூர ரயில் ஆகும். இது மூன்று சரக்கு ரயில்கள் நீளமுடையது.  அதாவது 177 வேகன்கள் கொண்டது.
  • இந்த ரயில் வியாழக்கிழமை விஜயவாடா பிரிவின் கொண்டப்பள்ளி நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா பிரிவு வரை தொடங்கப்பட்டது
  • குண்டக்கல் கோட்டத்தின் ராய்ச்சூரில் இருந்து செகந்திராபாத் கோட்டத்தின் மானுகுரு வரை இதேபோன்ற மற்றொரு ரயிலான ‘கருடா’ இயக்கப்பட்டது.

U -17 2022 மகளிர் உலகக் கோப்பையின் சின்னம் ‘இபா’

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக “இபா” எனப்படும் “பெண்ணின் சக்தியை வெளிப்படுத்தும் ஆசிய சிங்கம்” அறிவிக்கப்பட்டுள்ளது (WORLD FOOTBALL BODY, FIFA UNVEILED THE OFFICIAL MASCOT OF THE U-17 WOMEN’S WORLD CUP INDIA 2022 — IBHA — AN ASIATIC LIONESS REPRESENTING WOMEN POWER)
  • மேகாலயாவின் காசி மொழியில், “இபா” என்பதன் பொருள் = நாரி சக்தி எனப்படும் பெண்ணின் சக்தி ஆகும்
  • இந்தப் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் 11-30 வரை இந்தியாவில் நடைபெறும்.

இந்தியா, டென்மார்க் இடையேயான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  • டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் இந்திய வருகையின் பொழுது, இந்தியா மற்றும் டென்மார்க் இடையே திறன் மேம்பாடு, நிலத்தடி நீர் வளங்கள் உட்பட நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன (INDIA, DENMARK INKS FOUR MOUS, INCLUDING ON SKILL DEVELOPMENT, GROUNDWATER RESOURCES)
  • டென்மார்க் பிரதமர் அக்டோபர் 9 ஆம் தேதி புதுடெல்லி வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

திரைப்பட தயாரிப்பாளர் பி கோபால் அவர்களுக்கு சத்யஜித் ரே விருது

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பெஜவாடா கோபால் எனப்படும் பி கோபால், நான்காவது சத்யஜித் ரே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் (TELUGU FILMMAKER B GOPAL CHOSEN FOR SATYAJIT RAY AWARD)
  • இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த ஒட்டுமொத்தப் பங்களிப்பிற்காக, இவ்விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது

பாகிஸ்தான் அணு குண்டின் தந்தை, அப்துல் காதர் கான் காலமானார்

  • பாகிஸ்தான் நாட்டின் அணு குண்டின் தந்தை எனப்படும் அப்துல் காதர் கான் காலமானார். அவருக்கு வயது 85 (DR ABDUL QADEER KHAN, THE MAN REGARDED AS THE “FATHER OF PAKISTAN’S NUCLEAR BOMB”, HAS PASSED AWAY)
  • பாகிஸ்தானை உலகின் முதல் இஸ்லாமிய அணுசக்தி சக்தியாக மாற்றியவர் இவர்.

கருப்பூர் கலம்காரி துணி ஓவியம், கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைக்கு புவிசார் குறியீடு

DAILY CURRENT AFFAIRS 12 OCTOBER 2021

  • இம்மாதத்தில், தமிழகத்தின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
  • கன்னியாகுமரி கிராம்பு, கருப்பூர் கலம்காரி துணி ஓவியம் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது

 

 

Leave a Reply