TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2021
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆம்பிபியன் படைப்பிரிவு:
- அந்தமான் நிகோபார் தீவுகளின் பிர்ச்ச்குஞ்ச் ராணுவ நிலையத்தில் உள்ள இந்திய இராணுவத்தின் “ஆம்பிபியன் படைபிரிவினை”, அந்தமான் நிகோபார் கமாண்டோ படைத் தளபதி பார்வையிட்டார் (Commander-in-Chief Andaman and Nicobar Command (CINCAN) Lieutenant General Ajai Singh visited the Amphibian Brigade at Birchgunj Military Station)
- ராணுவ வீரர்களை அணைத்து நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
வேளாண் பொருட்கள் பங்குச்சந்தை குறியீடுகள்:
- தேசிய பொருட்கள் மற்றும் பங்குப் பரிமாற்றம் (NCDEX), விவசாயத்தை மையமாகக் கொண்ட இரண்டு பொருட்களின் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.
- வேளாண் பொருட்களில் இந்தியாவின் முதல் துறை குறியீடுகள் இவையாகும். அவை GAUREX and SOYDEX
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போட்டி:
- சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிலம்பம் செய்து முதல் இடத்தை இந்தியாவை சேர்ந்த கணேசன் சந்திரஹாசன் பெற்றார்.
- இரண்டாம் இடத்தை விக்னேஷ் சதீஷ் என்பவரும், மூன்றாவது இடத்தை சரண்ராஜ் என்பவரும் வென்றனர்.
உலகளாவிய மன்னிப்பு தினம்:
- மக்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கும், அவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு குற்ற உணர்ச்சியையும் வேதனையையும் சுமப்பதை நிறுத்த உலகளாவிய மன்னிப்பு நாள் (Global Forgiveness Day) நிறுவப்பட்டது
- உலகளாவிய மன்னிப்பு தினம், உலகம் முழுவதும் ஜூலை 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் 1994 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக மக்கள்தொகை தினம்:
- உலக மக்கள்தொகை தினம் (World Population Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
- உலக மக்கள்தொகை தினம் ஆரம்பிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டு.
- 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, உலக ,மக்கள் தொகை 5 பில்லியனை தொட்டது.
- இந்த ஆண்டிற்கான கரு = ‘the impact of the Covid-19 pandemic on fertility
புவிசார் குறியீட்டினை பெற்ற “பசில் மாம்பழம்” ஏற்றுமதி:
- மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தின் புகழ் பெற்ற “பசில் மாம்பழம்” (GI certified Fazil Mango of West Bengal), முதல் முறையாக பக்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
- இப்பழம் புவிசார் குறியீட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
விம்பிள்டன் – மகளிர் ஒற்றையர் சாம்பியன்:
- உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில உள்ள ஆஸ்திரேலியாவின் “ஆஸ்லே பார்டி”, 2௦21 மகளிர் ஒற்றையர் விம்பிள்டன் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த கரோலின ப்ளிஸ்கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- 1980 க்கு பிறகு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை இவராவார்.
- விம்பிள்டன் ஆட்டத்தை வெல்லும் 3-வது ஆஸ்திரேலிய வீராங்கனை இவராவார்.
உ.பி. மக்கள் தொகை வரைவு மசோதா:
- உத்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டக் கமிசன் சார்பில், “உத்திரப்பிரதேச மக்கள்தொகை (கட்டுப்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் நலன்) மசோதா 2௦21” (Uttar Pradesh Population (Control, Stabilization and Welfare) Bill, 2021) என்ற வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
- இதன் படி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை, அரசின் மானியம், அரசின் சலுகைகள் கிடைக்காது
- வெட்டில் எத்தனை பேர் இருந்தாலும் குடும்ப அட்டையில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர் போன்ற பல்வேறு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடற்படை தளங்கள் மீது டிரோன் பறக்க தடை:
- இந்திய கடற்படைக்கு சொந்தமான அணைத்து இடங்ளிலும், 3 கிலோமீட்டர் சுற்றுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- விதியை மீறி பறக்கும் எந்த ரிமோட் விமானங்களையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை – பி.கே.வாரியார் காலமானார்:
- கேரள மாநிலத்தில் உள்ள, ‘கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை’யின் நிர்வாக அறங்காவலராகவும், ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கும் மூத்த டாக்டருமான பி.கே.வாரியர், தன் 100வது வயதில் இன்று காலமானார்.
- பன்னியம்பள்ளி கிருஷ்ணவாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. 100 வயதான பி.கே.வாரியர் கோட்டக்கலில் உள்ள அவரது கைலாசமந்திரம் இல்லத்தில் காலமானார்.
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 10, 2021
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9, 2021
- TNPSC INDIAN POLITY – 25 NATIONAL SYMBOLS OF INDIA
- TNPSC CURRENT AFFAIRS – JULY 9, 2021
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 8, 2021
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 7, 2021
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 6, 2021
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2021