TNPSC DAILY CURRENT AFFAIRS – 18 AUGUST 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS – 18 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
கொங்கன் கடற்பயிற்சி 2021
- இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் கடல் பகுதியில், இந்தியா மற்றும் ஐக்கிய இங்கிலாந்து நாடுகளின் கடற்படையினர் மேற்கொண்ட “கடல்சார் கொங்கன் பயிற்சி 2021” நடைபெற்றது
- இந்தியாவின் சார்பில் ஐ.என்.எஸ் தபார் போர்க்கப்பல் இதில் பங்கேற்றது
ஹிந்துஸ்தான் – 228 விமானம்
- அரசு நிறுவனமான “இந்துஸ்தான் விமானவியல் நிறுவனம்” சார்பில், முதல் முறையாக வணிகப் பயன்பாட்டிற்கான விமானமாக “ஹிந்துஸ்தான் – 228 விமானம்” உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் வெற்றிகரமாக தனது சோதனையை நிறைவு செய்துள்ளது
- நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக கான்பூரில் உள்ள அந்நிறுவன வசதி மையத்தில் HAL கிரவுண்ட் ரன் மற்றும் லோ ஸ்பீட் டாக்ஸி சோதனைகளை (LSTT) வெற்றிகரமாக நடத்தியது.
பால்சம் (காசித்தும்பை) செடி
- கேரளாவில் 3 புதிய காட்டு வகை பால்சம் (காசித்தும்பி) செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- புதிய இனங்கள் பால்சமினேசி குடும்பத்தின் கீழ் வரும் இம்பாட்டியன்ஸ் இனத்தைச் சேர்ந்தவை
- இந்த 3 இனங்களுக்கு “இம்பாட்டியன்ஸ் அச்சுதானந்தினி”, “இம்பாட்டியன்ஸ் சைலஜே” மற்றும் “இம்பாட்டியன்ஸ் தானி” எனப் பெயரிடப்பட்டுள்ளது
ஸ்மார்ட் சுகாதார அட்டை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம்
- இந்தியாவில் முதல் முறையாக ஸ்மார்ட் சுகாதார அட்டைக்ள வழங்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பை, ஒடிசா பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் 96 லட்சம் குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட உள்ளது
- போனா பழங்குடியினத்தைச் சேர்ந்த சுக்ரி தங்கிடி மஜ்ஜி என்ற பெண்மணி இந்த நிகழ்வில் முதல்வரிடம் முதல் ஸ்மார்ட் ஹெல்த் கார்டைப் பெற்றார்.
பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி
- பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்பை, “ஆயிஷா மாலிக்” என்ற பெண் நீதிபதி பெற்றுள்ளார்
- இவர் லண்டன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் ஆவார்.
உத்திரப்பிரதேச அரசின் “லங்கடா நடவடிக்கை”
- உத்திரப் பிரதேச மாநில அரசின் காவல்துறை சார்பில், “லங்கடா நடவடிக்கை” என்ற பெயரில் அம்மாநிலத்தில் கடுமையான குற்றங்களை செய்பவர்களை சுட்டுப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
- இதன் படி, அம்மாநிலத்தில் 8742 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு, 3302 குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
சுடோக்கு விளையாட்டின் தந்தை காலமானார்
- உலகப்புகழ் பெற்ற எண் விளையாட்டான சுடோக்கு விளையாட்டினை உலகிற்கு அறிமுகம் செய்த ஜப்பானின் “மாக்கி காஜி” காலமானார்
- சுடோக்கு விளையாட்டின் தந்தை எனப்படும் இவர், ஜப்பானில் முதல்முறையாக சுடோக்கு இதழை துவக்கினார்
13 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயந்துள்ள இந்தியாவின் 2-வது நிறுவனம்
- 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் உயர்ந்துள்ளது
- இந்த நிலையை எட்டியுள்ள இந்தியாவின் 2-வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது டி.சி.எஸ். இதற்கு முன்னர் இந்த மதிப்பினை அடைந்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற சிறப்பை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது
2024 க்குள் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி
- மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி சேவை ஏற்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- தற்போது வரை நாட்டில் 2.8 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 16, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 16, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 15, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 14, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 13, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS – AUGUST 12, 2021