TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 15/08/2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 15/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 15/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

2047 ஆம் ஆண்டிற்குள், இந்தியா எரிக்சக்தி ஆற்றில் தன்னிறைவு

  • 2047 ஆம் ஆண்டிற்குள், இந்தியா எரிக்சக்தி ஆற்றில் தன்னிறைவு பெறுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
  • இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டிற்குள், எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விருது

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

 

  • இந்திய சுதந்திர தின விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்
  • இதன் படி சிறந்த சிறந்த மாநகராட்சியாக “தஞ்சாவூர் மாநகராட்சி” தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • சிறந்த நகராட்சிக்கான விருதுகள்,
    • முதல் பரிசு = ஊட்டி நகராட்சி
    • 2-ஆம் பரிசு = திருசெங்கோடு நகராட்சி
    • 3-ஆம் பரிசு = சின்னமனூர் நகராட்சி
  • சிறந்த பேரூராட்சி விருதுகள்,
    • முதல் பரிசு = திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி
    • 2-ஆம் பரிசு = கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம்
    • 3-ஆம் பரிசு = சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சி

முன்னாள் கடற்படை அதிகாரி கோபால் ராவ் காலமானார்

  • பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற கடற்படை அதிகாரி கே.பி.கோபால் ராவ், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94
  • இவர் கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்திய கப்பலான ஐ.என்.எஸ் கில்தான் என்ற கடற்படை கப்பல் பிரிவிற்கு அதிகாரியாக இருந்தவர் ஆவார்.
  • இவருக்கு நாட்டின் 2-வது உயரிய ராணுவ விருதான “மகாவீர் சக்ரா” விருது வழங்கப்பட்டுள்ளது

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த தினம், அரசு விழாவாக கொண்டாடப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

  • மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலவர் அறிவித்துள்ளார்
  • அறியலார் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான “ஆடி மாதத்தின் திருவாதிரை தினத்தில்” அவரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சங்கரய்யாவுக்கு முதல் “தகைசால் தமிழர் விருது”

  • தமிழகத்தின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யாவிற்கு, தமிழக அரசின் சார்பில் முதல் “தகைசால் தமிழர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சமிபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது

தமிழக அரசின் சுதந்திர தின விழா விருதுகள்

  • நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது
    • டாக்டர் அப்துல்கலாம் விருது = பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் பள்ளி, நேரற்ற இயக்கவியல் துறை பேராசிரியர் மு. லட்சுமணன்
    • கல்பனா சாவ்லா விருது = மறைந்த மருத்துவர் ப.சண்முக ப்ரியா
    • முதல் அமைச்சரின் நல் ஆளுமை விருது = 1) கிண்டி அரசு கொரோனோ மருத்துவமனை மருத்துவர் நாராயணசாமி, 2) சென்னை மாநிலக் கல்லூரி 3) சென்னை சேப்பாக்கம் நில நிர்வாக இணை ஆணையர் ஜெ.பார்த்திபன்
    • மாற்றுத்திறனாளி நலனுக்காக சேவை புரிந்தோருக்கான விருது = வீ ஆர் யுவர் வாய்ஸ் நிறுவனம், சென்னை
    • அவ்வையார் விருது = சக்தி மசாலா நிறுவன உரிமையாளர் டாக்டர் டி.சாந்தி
    • சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது = தூத்துக்குடி திருநங்கை கிரேஸ்பானு
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் = 1) ஆண்கள் = சென்னையை சேர்ந்த அரவிந்த் ஜெயபால், திருவாரூர் மாவட்டதி சேர்ந்த பக்ரூதின் மற்றும் நீலகிரி மாவட்டதி சேர்ந்த ரஞ்சித்குமார் 2) பெண்கள் = சென்னையை சேர்ந்த ச.மீனா, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமலா ஜெனிபர் ஜெயராணி

100 லட்சம் கோடியில் “கதி சக்தி” திட்டம் – பிரதமர் அறிவிப்பு

  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ. 1௦௦ லட்சம் கோடியில் “கதி சக்தி” (உத்வேகம்) உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பும் என சுதந்திர தின உரையில், பிரதமர் அறிவித்துள்ளார்
  • ரூ. 1௦௦ லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்பு கிடைக்கும். நாட்டில் செயல்படுத்தப்படும் அணைத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடித்தளம் அமைக்கும் தேசிய அளவிலான மிகப்பெரிய திட்டமாக கதி சக்தி (உத்வேகம்) இருக்கும் என தெரிவித்தார்

வாயு சேனா விருது

  • விமானப்படையினரின் சிறப்பான பணிகளுக்கு வழங்கப்படும் வாயு சேனா பதக்கம் ஸ்குவாட்ரன் லீடர் தீபக் மோகனன் மற்றும் விங் கமாண்டர் உத்தர் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தப் பதக்கங்களை வழங்கினார்

பிட் இந்தியா ஓட்டம்

  • மத்திய அரசின் சார்பில் பிட் இந்தியா ஓட்டம் 2.௦ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
  • மத்திய விளையாட்டு அமைச்சரின் கூற்றுப்படி. இந்த திட்டம் 75 முக்கியமான இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 2.0 அக்டோபர் 2, 2021 அன்று முடிவடைகிறது.

 

Leave a Reply