TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 12/08/2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 12/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 12/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலக யானைகள் தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக யானைகள் தினம், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / World Elephant Day is observed every year on August 12 worldwide for the preservation and protection of the global elephants.
  • இத்தினம் உலகத்தில் உள்ள யானைகளை பாதுக்காப்பதற்காக கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் முக்கிய நோக்கம் யானை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்

சர்வதேச இளைஞர் தினம்

  • சர்வதேச இளைஞர் தினம், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமுதாய முன்னேற்றத்திற்காக இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது / The International Youth Day is observed on August 12 annually to draw the attention of governments and others towards youth issues worldwide
  • சர்வதேச இளைஞர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று உலகெங்கிலும் உள்ள இளைஞர் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் மற்றும் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = உணவு அமைப்புகளை மாற்றுவது: மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்கான இளைஞர் கண்டுபிடிப்பு / Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் 2-ஆம் இடத்தை பிடித்த நீரஜ் சோப்ரா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் தங்கப் பதக்கம் பெற்ற, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் 2 வது இடத்தைப் பிடித்துள்ளார் / Javelin Thrower Neeraj Chopra has finished at number 2 rank in the World Athletics ranking after securing Gold Medal at the Tokyo Olympics 2020
  • நேராஜ் சோப்ரா 1315 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் ஜோஹன்னஸ் வெட்டர் 1396 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளனர்

இந்தியாவின் முதல் “வட்டார் ப்ளஸ் நகரம்” (தூய்மையான தண்ணீர் நகரம்)

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் தூய்மையான நகரமாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூர், தற்போது இந்தியாவின் முதல் ‘தூய்மையான தண்ணீர்’ (வாட்டர் ப்ளஸ்) கொண்ட நகரம் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. ‘2021 ஸ்வட்ச் சர்வேக்‌ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த அடையாளம் இந்தூருக்கு வழங்கப்பட்டுள்ளது / India’s cleanest city, Indore, has now been declared as India’s first water plus city under the Swachh Survekshan
  • இந்த சான்றிதழை பெற 3 நிபந்தனைகள் உள்ளன,
    • அழுக்கு நீர் எந்த ஆற்றிலும் அல்லது வடிகாலிலும் செல்லக்கூடாது.
    • மேலும், நகரத்தின் 30 சதவீத கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
    • பொது கழிப்பறைகள் கழிவுநீர் இணைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் மற்றும் அதை சுத்தம் செய்ய வேண்டும்.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – ஆயில் பாம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சமீபத்தில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் பாமாயில் உற்பத்தியில் புதிய தேசிய முயற்சியை பிரதமர் அறிவித்துள்ளார் / The scheme, called National Edible Oil Mission-Oil Palm (NMEO-OP), for self-reliance in edible oil involves investment of over Rs. 11,000 crore (over a five year period).
  • தேசிய சமையல் எண்ணெய் மிஷன்-ஆயில் பாம் (NMEO-OP) எனப்படும் இந்தத் திட்டம், சமையல் எண்ணெயில் தன்னிறைவுக்காக ரூ. 11,000 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட உள்ளது
  • 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் போது, ​​எண்ணெய் பனை பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும், சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பனைக்கான தேசிய மிஷன் (NMOOP) செயல்படுத்தப்பட்டது.

ஒரு மாதத்தில் அதிகளவு மொபைல் டேட்டாவினை பயன்படுத்தும் நாடு

  • உலக அளவில் ஒரு மாதத்தில் மிக அதிகளவு மொபைல் டேட்டாவினை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது / India has the highest data consumption per person per month and 2nd largest broadband subscription country in the world after the USA.
  • மேலும் உலக அளவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் அதிகளவு கொண்டுள்ள 2-வது நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது. முதல் இடத்தில அமேரிக்கா உள்ளது.

முதல் மார்பக் வைரஸ் நோய் ஆப்ரிக்காவின் கினியாவில் பதிவு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஆப்ரிக்க நாடான கினியாவில் கண்டறியப்பட்டுள்ள மார்பக் எனப்படும் வைரஸ் கொரோனாவை போன்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது / West Africa has confirmed the first case of the contagious Marburg virus in Guinea.
  • உலகத்தையே அச்சுறுத்திய எபோலா-வை போன்று மார்பக் எனப்படும் புதிய வகை வைரஸ் கினியா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியுள்ள இந்த வைரஸ், கொரோனா வைரஸை போன்று மனிதனில் இருந்து மனிதனுக்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 1% இடஒதுக்கீடு

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மகாராஷ்டிரா மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யசோமதி தாக்கூர், கோவிட் – 19 தொற்றுநோயின் போது பெற்றோரை இழந்து அனாதையாக உள்ள குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைகவாய்ப்புகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார் / Maharashtra government will offer 1 per cent reservation in education and jobs to children orphaned during the COVID-19
  • மேலும் மாநில அரசு தேர்வுக் கட்டணம், வயது, கல்விக் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல், கல்வியின் கீழ் கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்கான சலுகைகளையும் பட்டியல் சாதியினருக்கு வழங்குகிறது.

மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு பட்டங்களை வென்ற கவுசிக் ராம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டெல்லியில் நடந்த இந்திய ஆணழகன் போட்டியில் சென்னை சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கவுசிக் ராம், “மிஸ்டர் இந்தியா”, “மிஸ்டர் தமிழ்நாடு” ஆகிய 2 பட்டங்களையும் பெற்று வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்றார்
  • இவரின் தாய் மற்றும் தந்தை இருவரும், சென்னை உயர்நீதிமன்ற வழங்கறிஞர்கள் ஆவர்.

தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 2021 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (FEMBoSA) மன்றத்தின் 11 வது வருடாந்திர கூட்டத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தொடங்கி வைத்தார் / The Chief Election Commissioner of India has inaugurated the 11th Annual meeting of the Forum of the Election Management Bodies of South Asia (FEMBoSA) for the year
  • ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • இக்கூட்டத்தின் கரு = ‘தேர்தலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்’ / ‘Use of Technology in Elections’

உலகிலேயே பணக்கார கிராமம்

  • உலகிலேயே பணக்கார கிராமம் என்ற சிறப்பை, குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம் பெற்றுள்ளது
  • உலகிலேயே மிகவும் வசதி படைத்த கிராமம் இதுவாகும். இங்கு 17 வங்கிகள் உள்ளன. மொத்தம் 76௦௦ குடும்பங்கள் உள்ளன. ஆனால் வங்கியில் மொத்தம் 5௦௦௦ கோடி ரூபாய் சேமிப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்

 

 

Leave a Reply