TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 15, 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 15, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 15, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச பாறை தினம்:
உலகம் முழுவதும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி, சர்வதேச பாறை தினம் (International Rock Day, July 13) கடைபிடிக்கப்படுகிறது. பாறைகள் ஒருவருக்கும் மிகவும் முக்கியமானதாகத் தெரியவில்லை, ஆனால் அவை மனிதகுலத்தின் பிழைப்புக்கு அவசியமானவை. வரலாறு முழுவதும் மனிதர்களுக்கு பாறைகள் முக்கியமானவை. முதல் மற்றும் மிகவும் மதிப்புமிக்க மனித கண்டுபிடிப்புகளில் ஒன்று பாறையால் செய்யப்பட்ட கருவிகள்.
விண்வெளி சுற்றுலா:
சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் நபர், ரிச்சர்ட் பிரான்சன் ஆவார். “வி.எஸ்.எஸ் யுனிட்டி” என்ற விண்கலத்தில் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு சென்று வந்தார். இவருடன் இந்திய வம்சாவழியை சேர்ந்த சிரிஷா பந்தலா என்பவரும் விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். இவர்கள் விண்வெளியில் 88 கிலோமீட்டர் (53 மைல்) உயரத்திற்கு சென்று வந்துள்ளனர். விண்வெளிக்கு முதலில் சுற்றுலா சென்றுவந்த நபர், “டென்னிஸ் டிடோ” ஆவார். அவர் 2௦௦1 ஆம் ஆண்டு ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்தார்.
காதி வர்த்தக முத்திரை பதிவு:
“கே.வி.ஐ.சி” எனப்படும் “காதி மற்றும் கிராம தொழிலக ஆணையம்” (KVIC – Khadi and Village Industries Commission), சமிபத்தில் பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில், தனது வர்த்தக முத்திரையை (Trademark Registration) பதிவு செய்துள்ளது. இதன் மூஅல்ம் காதியின் பதிவை ஏற்றுக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2021 அறிக்கை:
உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2021 அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான 5 அமைப்புகள் சேர்ந்து தயாரித்துள்ளன. அவை,
- ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
- ஐ.நா. வேளாண்மை வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம்
- ஐ.நா. குழந்தைகள் நிதியம்
- ஐ.நா. உலக உணவு திட்ட அமைப்பு
- ஐ.நா. உலக சுகாதார அமைப்பு
இந்த அறிக்கையின் உலகில் பல்வேறு நாடுகளின் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை,
- 2014 ஆம் ஆண்டு முதல உலகின் பசியால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது
- 2௦2௦ ஆம் ஆண்டு வரை உலகில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை 768 மில்லியனாகவும், அதில் பாதியளவு 418 மில்லியன் அளவிற்கு ஆசியக் கண்ட குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் பழைய கற்கால குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு:
ஹரியானாவின் மங்கர் பாணி (Mangar Bani) என்னுமிடத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகளில் மிகவும் பழமையான “மேல் பழைய கற்கால ஓவியங்கள்” (Upper Paleolithic Age Paintings) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆரவளி மலைத்தொடர் பகுதிகளில், குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முதல் முறையாக இந்த ஓவியங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 20000 – 40000 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அம்ரிதா சேர் கில்:
ஹங்கேரியின் புதாஸ்பட் நகரில் பிறந்து இந்தியா வந்தவர் இவர். இவர் இந்தியாவின் மிக சிறந்த ஓவியரில் (Most famous Woman Artist) ஒருவராக போற்றப்படுகிறார். சமிபத்தில் அவரின் ஓவியம் ஒன்று மிக அதிகபட்சமாக 37.8 கோடி (37.8 Crores) ரூபாய்க்கு விலைபோனது. இந்த ஓவியம், ஒரு இந்தியரின் இரண்டாவது மிக விலையுயர்ந்த கலைப்படைப்பு (second most expensive artwork by an indian) ஆகும். இவரின் ஓவியங்கள் “தேசத்தின் சொத்து” (National Treasure) என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிய அனுமதி இன்றி இவரின் ஓவியங்களை இந்தியாவை விட்டு வெளியில் எடுத்து செல்ல இயலாது.
காந்திநகரில் ரயில் பாதையில் இந்தியாவின் முதல் 5 நட்சத்திர ஹோட்டல்:
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரயில் நியதின் மேல் பகுதியில் 5 நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இவ்வகை 5 நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் அமைக்கப்படுவது இந்தியாவில் முதல் (India’s first 5-star Hotel atop Railway Track in Gandhinagar) முறையாகும். 318 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டலின் கீழ் தலத்தில், ரயில் நிலைய பயன்கிகள் அமரும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை சூரியப் பூங்கா:
மத்திய தேசிய அனல் மின் கழகம் சார்பில், குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கவாடா என்னுமிடத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை சூரியப் பூங்கா (India’s Single Largest Solar Park at Rann of Kutch, Gujarat) அமைக்கப்பட உள்ளது. 4750 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவில் இது அமைக்கப்பட்டு வருகிறது.
உலகின் முதல் கடலோர வணிக சிறிய உலை:
சீனா, தனது ஹைனான் மாகாணத்தில் உள்ள சந்ஞாங் அணு உலை ஆலை அருகே, உலகின் முதல் கடலோர வணிக சிறு உலையை (World’s First Commercial Onshore Small Modular Reactor) அமைக்க உள்ளது. “லிங்க்லாங் 1 அல்லது ACP 1௦௦” (Linglong1 or ACP 100) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய உலை, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இது சர்வதேச அணுசக்தி அமைப்பால் (International Atomic Energy Agency), அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் சிறிய உலை (World’s First SMR) ஆகும்.
மிகவிரைவாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களை அடித்த வீரர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், “பாபர் ஆசாம்”, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 81 ஆட்டங்களில் மிக விரைவாக 14 சதங்களை அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் தென்னாப்ரிக்காவின் ஹாசிம் ஆம்லா, 84 போட்டிகளில் 14 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்தது.
இயற்கை வேளாண்மைக்கு மாற சிக்கிம்முடன் ஒப்பந்தம் செய்த லடாக்:
உலகின் முதல் 1௦௦% இயற்கை வேளாண்மை கொண்ட மாநிலம் (World’s First 100% Organic State in the World, Sikkim) என்ற சிறப்பை பெற்ற சிக்கிம் மாநிலத்துடன், லடாக் யூனியன் பிரதேசம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி 2௦25 ஆம் ஆண்டிற்குள், லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இயற்கை வேளாண்மை முறைக்கு மாற இலகு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலக இளைஞர் திறன் தினம்:
ஐக்கிய நாடுகள் சபை உலக இளைஞர் திறன் (World Youth Skills Day) தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று உலகளவில் கொண்டாடுகிறது. இளைஞர்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டி.வி.இ.டி) நிறுவனங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றுக்கான திறன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வதோடு கொண்டாடுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = Reimagining Youth Skills Post-Pandemic ஆகும். முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் திறன தினம், ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவின் சபைத் தலைவராக பியுஷ் கோயல் நியமனம்:
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் (Union Minister Piyush Goyal has been appointed as the Leader of the House in Rajya Sabha). இவரது நியமனம் 2021 ஜூலை 06 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன் இப்பொறுப்பில் இருந்த தவர் சந்த் கல்ஹோட் தற்போது கர்நாடுக ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
ஒலிம்பிக் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த ஏ.ஆர்.ரகுமானின் “இந்துஸ்தானி வே” ஆல்பம்:
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள உள்ள இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர். ரகுமானின் இசையில், “அனன்யா பிர்லா” என்ற பாடகி பாட, “இந்துஸ்தானி வே” (Titled “Hindustani Way”) என்ற பெயரில் இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மீண்டும் நீட்டிக்கப்பட்ட “தேசிய ஆயுஸ் இயக்கம்”:
மத்திய காபினெட் அமைச்சகம், “தேசிய ஆயுஸ் இயக்கத்தை” (National AYUSH Mission = NAM), மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இப்போது 2021 ஏப்ரல் 01 முதல் மார்ச் 31, 2026 வரை செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக 4607.30 கோடி (மத்திய பங்காக ரூ .3,000 கோடி மற்றும் மாநில பங்காக ரூ. 1607.30 கோடி) ஒதுக்கப்டும். இந்த இயக்கம் முதன் முதலில் 15 செப்டம்பர் 2014 அன்று தொடங்கப்பட்டது. AYUSH = Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha, Sowa-Rigpa and Homoeopathy)
இந்தியாவின் முதல் “தானிய ஏ.டி.எம்”:
நாட்டின் முதல் “தானிய ஏ.டி.எம்” (India’s First Grain ATM) மையம், ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இது ஒரு தானியங்கி இயந்திரம் ஆகும். இந்த இயந்திரம் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ‘உலக உணவுத் திட்டத்தின்’ (United Nations “World Food Programme”) கீழ் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இது ‘தானியங்கி, பல பொருட்கள், தானிய விநியோக இயந்திரம்’ (Automated, Multi Commodity, Grain Dispensing Machine) என்று அழைக்கப்படுகிறது.
ககன்யான் திட்டத்திற்கான “விகாஸ் இஞ்சின்” 3-வது முறையாக வெற்றிகரமாக சோதனை:
ககன்யான் திட்டத்திற்கான (Gaganyaan Programme) எஞ்சின் செயல்பாடுகளை மேம்படுத்த ஏதுவாக, “விகாஸ் இஞ்சின்”னின் (Vikas Engine) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, 3-வது நீண்டகால சூடான சோதனையை வெற்றிகரமாக விகாஸ் எஞ்சின் நிறைவு செய்துள்ளது. இஸ்ரோ (ISRO) எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இச்சோதனை தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. ககன்யான் திட்டம் என்பது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டமாகும்.
டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் நகர கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து:
மகாராஸ்டிரா மாநிலத்தின் லாத்தூர் பகுதியில் உள்ள டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் நகர கூட்டுறவு வங்கியின் உரிமைதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. வங்கியின் தற்போதைய நிதி நிலை அதன் வைப்புத்தொகையாளர்களுக்கு முழுமையாக செலுத்த முடியாது என்று மத்திய வங்கி தனது உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தபோது கூறியது.
கொரோனாவை கட்டுப்படுத்த UV-C கிருமி நீக்க தொழில்நுட்பம்:
காற்றின் மூலம் பரவக்கூடிய SARS-CoV-2 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாராளுமன்ற வளாகத்தில் புறஊதா கதிர் UV-C கிருமி நீக்க தொழில்நுட்பம் (Ultra Violet-C or UV-C Disinfection Technology) பயன்படுத்தப்பட உள்ளது. யு.வி-சி கிருமி நீக்கம் தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR – Council of Scientific and Industrial Research) கீழ் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO – Central Scientific Instruments Organisation) உருவாக்கியுள்ளது.
கொரோனாவின் R காரணி:
இந்தியாவில் கொரோனா அஒயினால் R காரணி பாதிப்பு அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R காரணி என்பது “இனப்பெருக்க வீதத்தை” (R – Reproduction Rate) குறிக்கிறது. R காரணியால் பாதிக்கபட்ட நபரால், விரைவாக இது அடுத்த நபர்களை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R காரணி, இனப்பெருக்க வீதத்தை கட்டுப்படுத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 311:
சமிபத்தில் ஜம்மு காஸ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் “மனோஜ் சின்கா” அம்மாநில அரசுப் பணியாளர்கள் 11 பேரை, தீவிரவாத தொடர்பு வைத்துள்ளர்கள் எனக் கூறி பதவி நீக்கம் செய்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 311 (1) = “மத்திய அரசின் கீழ் அல்லது மாநில ரசின் கீழ் குடிமுறை அரசுப் பணியில் இருப்பவரை, அவரை நியமிக்கும் அதிகாரியை தவிர, அவரை விட கீழ்மைப் பதவியில் உள்ள திகரியால் பணிநீக்கம் செய்யக் கூடாது” எனக் கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 311 (2) = அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, அவரின் குற்றத்தை தெரிவித்து, அதுபற்றிய விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கி அதன் பின்னர் முறையாக விசாரணை நடத்தாமல் அவரை பதவிக் குறைப்போ, பதவி நீக்கமோ செய்யக்கூடாது
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 311 (2) (c) = அத்தகைய விசாரணையை மேற்கொள்வது நாட்டின் பாதுகாப்பிற்கு, நலனுக்கு உகந்தது அல்ல என குடியரசுத்தலைவர் அல்லது மாநில ஆளுனர் நினைத்தால், பதவி நீக்கம் செய்யலாம்.
வெள்ளத்தில் மூழ்கிய “கேசரிய புத்த ஸ்தூபம்”:
பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற, “கேசரிய புத்த ஸ்தூபம்” (Kesariya Buddha stupa) வெள்ளத்தில் மூழ்கியது. கந்தக நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், இங்கு நீர் சூழ்ந்துள்ளது. இந்த ஸ்தூபம் 400 அடி சுற்றளவில், 104 அடி உயரம் கொண்டது. உலகில் உள்ள மிகப்பெரிய புத்த ஸ்தூபம் இதுவாகும் (largest Buddhist stupa in the world). சீனப் பயணி பாகியானின் குறிப்பில் உள்ளபடி, இதனை நிர்மாணித்தவர்கள், வைசாலியை சேர்ந்த லிச்சாவிகள் ஆவர்.
ராஜஸ்தானில் அழிந்துவரும் “கானமயில்” பறவையினம்:
ராஜஸ்தான் மாநிலத்தின் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை எரிசக்தி திட்டங்களால், “கிரேட் இந்தியச்ன் பாஸ்டர்ட்” (Great Indian Bustard) எனப்படும் “கானமயில்” பறவை இனம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ardeotis nigriceps என்ற அறிவியல் பெயர் கொண்ட கானமயில், நீண்ட வெள்ளைக் கழுத்துக் கொண்டதாகவும், பழுப்பு நிற உடலைக் கொண்டதாகவும், சுமார் 15 கிலோவரை வளரக்கூடியதாக இருக்கும். உலகில் உள்ள எடை அதிகம் கொண்ட பறவையினத்தில் இதுவும் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்தின் “மாநிலப் பறவையாக” அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“கிரக இணைப்பு” – ஒரே நேர்கோட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள்:
பூமியில் இருந்து பார்ர்க்கும் பொழுது ௦.5 டிகிரி கோண வித்தியாச தூரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் இருப்பது போன்ற அரிய நிகழ்ச்சி நிகழ்ந்தது. இதனை விஞ்ஞானிகள் “கிரக இணைப்பு” (Planetary Conjuction) என்கின்றனர். இந்நிகழ்ச்சி ஜூலை 13ஆம் தேதி வானில் நிகழந்தது. மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களுக்கு சுமார் 4 டிகிரி தொலைவில் பிரைசந்திரன் (super slim crescent Moon ) தென்பட்டது.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 14, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 13, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 12, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 10, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 09, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 08, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 07, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 06, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 05, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 04, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 03, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 02, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 01, 2021