TNPSC POLITY – NATIONAL RIVER OF INDIA

TNPSC POLITY – NATIONAL RIVER OF INDIA

 

TNPSC POLITY – NATIONAL RIVER OF INDIA இந்தியாவின் தேசிய நதியான கங்கை நதி பற்றிய விவரங்கள் இங்கு பதியப்பட்டுள்ளது.

TNPSC

  • இந்தியாவின் தேசிய நதி = கங்கை நதி
  • 2008-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் “மன்மோகன் சிங்” அவர்களால் நவம்பர் 4-ம் தேதி, கங்கை தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது
  • கங்கை / புனித கங்கை நதியானது பல மலைகள், பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் போன்றவற்றில் பாய்ந்து சுமார் 2525 கிலோமீட்டர் ஓடி கடலில் கலக்கிறது
  • இமயமளியில் உள்ள கங்கோத்திரி பனிப்படிவுகளில் துவங்கி பாய்ந்து வருகிறது. இமயமலைப் பகுதிகளில் இதனை “பகிரதி நதி” என்று கூறுவர்
  • கங்கை நதி பல்வேறு நதிகளுடன் சேர்ந்து பாய்கிறது. அலகனந்தா, யமுனை, சோன், கோம்தி, கோசி மற்றும் காக்ரா நதிகளுடன் இணைத்து பாய்கிறது.
  • கங்கை நதியின் துணை நதிகளில் மிக நீளமானது = காக்ரா நதி ஆகும்

TNPSC

  • கங்கை நதி சமவெளி பகுதியானது உலகிலேயே அதிக வளமான பகுதியாகும். மிகவும் அதிக அடர்த்தி கொண்ட மக்கள் தொகை உள்ள பகுதியாகும். இது சுமார் 1௦ லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி உள்ளது.
  • இந்நதியின் இடையே 2 பெரிய அணைகள் உள்ளன. ஒன்று ஹாரித்வாரிலும், மற்றொன்று பராக்கா பகுதியிலும் உள்ளது
  • கங்கை நதி டால்பின்கள் இந்திய தேசிய நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • இந்துக்களின் புனிதமான நதி = கங்கை ஆகும்
  • புகழ்பெற்ற ஹரித்வார், வாரணாசி மற்றும் அலாகாபாத் கும்பமேளா புனித நிகழ்சிகள் கங்கை நதிக்கரையில் நடைபெறுகிறது.

குறிப்பு:

  • கங்கை நதி, பக்கத்துக்கு நாடான வந்கதேசம் வரை பாய்கிறது. வங்கதேசத்தில் கங்கை நதியை “பத்மா நதி” என்பர்
  • அதிக அளவு நீர் வெளியேற்றம் செய்வதில் உலகிலேயே 3-வது பெரிய நதி கங்கை ஆகும் (3rd Greatest River in the World by Water Discharge)

TNPSC

  • ரிக்வேதத்தில் 2-முறை குறிப்பிடப்பட்டுள்ள நதி = கங்கை ஆகும்
  • உலகின் 34-வது நீளமான நதி = கங்கை நதி
  • உலகின் 5-வது மாசுப்பட்ட நதியாக் கங்கை அறிவிக்கப்பட்டது (Pollutted River)
  • சமிபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், உலகில் உள்ள மற்ற நதிகளை காட்டிலும், கரிம கழிவுகளை 15 – 25 மடங்கு வேகமாக கங்கை நதி சிதைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது (Studies have shown that the Ganges River decomposes organic wastes at a rate 15 to 25 times faster compared to other rivers in entire world.)

TNPSC

  • உலகின் மிகப்பெரிய டெல்டா பகுதியான மேற்குவங்கத்தில் சுந்தரவன டெல்டா பகுதியை கங்கை நதி உருவாக்கியது (It had also created the World’s Largest DELTA in West Bengal – Sundarban Delta.)

 

Leave a Reply