195௦-ம் வருடமே இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் இலையுதிர் காடுகளில் காணப்படும் இம்மரம், இந்துக்களின் புனித மரமாக கருதப்படுகிறது.
இது நம் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆலமரம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா நகரில் அமைந்துள்ள “ஷிப்பூர் இந்தய தாவரவியல் பூங்காவில்” உள்ளது. இது 25 மீட்டர் உயரத்தில், சுமார் 420 மாட்டார் அகலத்தில், சுமார் 2௦௦௦ விழுதுகளுடன் உள்ளது
பண்டைய இந்தியாவில், தாமரை மாறலை புனித மலராக கருதினர். ஓவியங்கள், தெய்வ வழிபாடுகளில், கலாச்சாரங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தாமரை முதன்மையாக இடம் பெற்றுள்ளது
இம்மலர் உண்மை மற்றும் அழகை வெளிபடுதிகிறது
தாமரை மலர், “கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு” உரியது.
தோற்ற்றம், பேரழகு, மணம் ஆகிய ஒப்பற்றதாகும். இதன் இதழ்கள் ஒன்று சேர்ந்திருப்பது நமது நாட்டின் ஒற்றுமையைக் குறிக்கிறது.
1928 – 1956 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக இந்தியா 6 முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை ஹாக்கியில் வென்றுள்ளது.
இந்த காலக்கட்டத்தில், ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் விளையாடிய 24 போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. மொத்தம் 178 கோல்களை இந்தியா இப்போட்டிகளில் அடித்தது. இதியாவிற்கு எதிராக மொத்தம் 7 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டது
மேலும் 1964-ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், 1980-ம் வருட ரசியாவின் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது.
2௦12-ம் ஆண்டு கேட்கப்பட்ட “தகவல் உரிமை சட்ட” கேள்விக்கு, மத்திய அரசு, இந்துவரை இந்தியாவின் தேசிய விளையாட்டாக எந்த விளையாட்டும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.