அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி 3-ல், குடிமக்கள் அனைவருக்கும் ஆறு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
- சமத்துவ உரிமை / Right to Equality (Articles 14–18)
- சுதந்திர உரிமை (Articles 19–22)
- சுரண்டலுக்கு எதிரான உரிமை (Articles 23–24)
- சமய சுதந்திர உரிமை (Articles 25–28)
- கலாசார மற்றும் கல்வி உரிமை (Articles 29–30)
- சட்டத் தீர்வு உரிமை (Article 32)
முகப்புரையில் உன்னதமான நோக்கங்கள் உயர்த்திக் காட்டுவதன் மூலமாகவோ அல்லது வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி விட்டதால் மட்டுமோ குடிமக்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் வாழ்ந்து விட முடியாது. மக்கள் அரசியல், பொருளாதார, சமுதாய, சமை ஆதிக்கக் கொடுமைகளில் இருந்து விடுபட்டு கவுரவமாக வாழ வேண்டும். மக்கள் ஆட்சியிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் பெரும்பான்மைக் கொடுமை (Majority Tyranny) நடக்க வாய்ப்பு உண்டு.
அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) நீதிப்படுத்தக் கூடியவை. அதாவது சட்டமீறல்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக நேரடியாகத் தீர்வு காண முடியும். அடிப்படை உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டல்ம் ஒருவர், நேரடியாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து, தனக்கான உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்காக
- ஆட்கொனரும் நீதிப் பேரானை (Habeas Corpus)
- செயலுறுத்தும் நீதிப் பேரானை (Mandamus)
- தடை செய்யும் நீதிப் பேரானை (Prohibition)
- நெறிமுறைப்படுத்தும் நீதிப் பேரானை (Certiorari)
- தகுதி நீதிப் பேரானை (Quo Warranto)
ஆகிய பிரிவுகளின் மூலம் தங்களின் உரிமையை மக்கள் பாதுகாத்துக்கொள்ள இயலும். அடிப்படை உரிமைகளில் மீறுதல் இருக்கும் பொழுது பொருத்தமான நீதிப் பேரானையுடன் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம். பகுதி 3-ல் வழங்கப்பட்ட அடிப்படைகள் முழுமையானவை அல்ல (Not Absolute), நியாயமான கட்டுப்பாடுகளுக்கு (Reasonable Restrictions) உட்பட்டது.
அடிப்படை உரிமைகள் – குறிப்பு
- அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய பொழுது, அடிப்படை உரிமைகள் பகுதியில் மொத்தம் 7 அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டன. விதி 31க்காண “சொத்து உரிமை” (Right to Property) 1978-ம் ஆண்டு 44-வது சட்டத்திருத்தத்தின்படி (44th Amendment Act, 1978) நீக்கப்பட்டது. பின்னர் அது பகுதி 12-ல் விதி 3௦௦-அ (Part 12, Article 300-A) என்ற பிரிவில் சொத்துரிமையானது ஒரு சட்ட உரிமையாக (Legal Rights) மாற்றம் செய்யப்பட்டது.
- போரின் பொது அல்லது உள்நாட்டு ஒழுங்குக்கேட்டின் பொது நெருக்கடி காலநிலை பிரகடனப்படுத்தினால், விதி 19-ல் (Article 19) கூறப்பட்ட உரிமைகளான 7-ம் ரத்து செய்யப்படும்
- பேச்சு, எழுத்துச் சுதந்திரம்
- அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்
- சங்கங்கள் அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம்
- இந்தியப் பகுதிகள் எதற்கு வேண்டுமாயினும் செல்வதற்கான சுதந்திரம்
- இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறுவதற்கான சுதந்திரம்
- இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்தை வாங்கவோ, அனுபவிக்கவோ, விற்கவோ செய்வதற்கான உரிமைகள்
- பிடித்த தொழில், வேலை, வியாபாரம், வர்த்தகம், வாணிபம் செய்யும் சுதந்திரம்
- விதி 2௦ மற்றும் 21-ல் (Article 20, 21) கூறப்பட்டுள்ள உரிமைகளை தவிர மற்ற அணைத்து அடிப்படை உரிமைகளையும், “தேசிய அவசரநிலை” (National Emergency) காலத்தில் நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை