அடிப்படை கடமைகள்
அடிப்படை கடமைகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (Indian Constitution) உருவாக்கிய பொழுது, அதில் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதி இல்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். இது 1975 – 1977 வருடங்களில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த உள்நாட்டு அவசரநிலை (Internal Emergency) காலக்கட்டத்தில், “ஸ்வரன் சிங் குழுவின்” (Swaran Singh Committee) பரிந்துரையின் பேரில் 1976-ம் ஆண்டில் 42-வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act, 1976) மூலம் புதிதாக சேர்க்கப்பட்டது. அதில் குடிமக்களுக்கான 1௦ கடமைகள் இடம்பெற்றன.
இது பகுதி 4-அ என்ற (Part 4-A) பிரிவில், விதி 51-அ (Article 51-A) என்ற இடத்தில சேர்க்கப்பட்டது. 1௦ கடமைகள் இருந்த நிலையில், கூடுதலாக ஒரு கடமையை சேர்க்க 2௦௦2-ம் ஆண்டில் 86-வது சட்டத்திருத்தத்தின் மூலம் திருத்தும் மேற்கொள்ளப்பட்டு, மொத்த கடமைகளின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.
அடிப்படை கடமைகள்
- ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அரசியல் அமைப்பிற்கு கீழ்படிவத்துடன் அரசமைப்பு நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்
- விடுதலைப் போராட்டடிஹ்ன் பொது புத்துணர்வு அளிக்க உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கோண்டு பின்பற்ற வேண்டும்
- இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும்
- அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புபுப்பணியில் ஈடுபட்டுத் தேசச் சேவை செய்ய வேண்டும்
- சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்படப் பாடுபட வேண்டும்.
- நமது கூட்டுக்கலாசாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்
- காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூளைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்
- அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்
- வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்
- தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்
- 6 முதல் 14 வயது வரை குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும் (குறிப்பு = 86-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இக்கடமை சேர்க்கப்பட்டது)
உரிமை உணர்வு உள்ள மக்களிடம் கடமை உணர்வும் இருக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதே அடிப்படைக் கடமையாகும்.
அடிப்படைக் கடமைகள், அடிப்படை உரிமைகளைப் (Fundamental Rights) போல் நீதிப்படுத்தப்படக் கூடியதன்று (Non-Justiciable). கடமை தவறியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டதன் நோக்கமே அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் மக்கள் இடையே கடமை உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
- அடிப்படை உரிமைகள் = நீதிபடுத்தக்கூடியது (Justiciable)
- அடிப்படை கடமை, வழிகாட்டு நெறிமுறை கோட்பாடு = நீதிபடுத்தக்கூடியது அல்ல (Non-Justiciable)
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை