ஆகஸ்ட் நன்கொடை 1940
ஆகஸ்ட் நன்கொடை 1940
- 1935ம் வருட சட்டப்படி மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டாலும், கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தால் அது மதிப்பில்லாமல் போனது
- 1939-ம் வருட “2-ம் உலகப் போரில்”, இந்தியர்களின் அனுமதி இல்லாமல் அப்போதைய இந்திய வைசிராயான “லின்லித்தோ பிரபு”, இந்தியாவும் போரில் பங்கு பெறுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்
- காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை ஏற்கவில்லை
நிபந்தனைகள்
- சில நிபந்தனைகளின் பேரில் இந்தியாவின் ஆதரவை வழங்க முன்வந்தனர். அவையாவன
- போருக்கு பின் இந்தியாவின் சுயாட்சிக் கொள்கையை தெளிவாக அறிவிக்க வேண்டும்
- இந்தியாவிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டே தற்காலிக தேசிய அரசாக மத்தியில் அமைக்க வேண்டும்
- அந்த தற்காலிக அரசு இந்திய சட்டமன்றங்களுக்கு பொருப்புள்ளதாக இருக்க வேண்டும்
- காந்தி = “இந்தியர்களால், இந்தியர்களுக்காக பொறுப்புள்ள கூட்டரசு ஒன்று மத்திய அரசில் ஏற்பட வேண்டும்” என்றார்.
வெள்ளை அறிக்கை
- அப்போதைய வைசிராய் “லின்லித்தோ பிரபு”, பல தலைவர்களை சந்தித்து பேசி, இறுதியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதாவது
- இந்தியா, பிற டொமினியன் நாடுகளை போலவே, இங்கிலாந்து அரசுடன் பிணைப்பை பலப்படுத்தப்படும்
- போர் முடிந்த பின்பு இந்தியாவின் அரசியல் அமைப்பு முறையை முழுமையாக பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசீலனை செய்யும்
- உடனடியாக இந்தியாவிற்கு அதிக அளவு அதிகாரம் வழங்குவது இயலாது
- போர்க்காலத்தின் வைசிராய்க்கு உதவியாக ஒரு ஆலோசனை குழு (Advisory War Council) அமைக்கப்படும்
- ஆனால இதனை இந்தியத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர்
- காந்தி = “ரொட்டி கேட்டதற்கு கல்தான் கிடைத்தது” என கூறினார்
ஆகஸ்ட் நன்கொடை 1940
- இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் ஆதரவை பெற லின்லித்தோ பிரபு, 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பே “ஆகஸ்ட் சலுகை” ஆகும். அதில்
- இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து (Dominion Status) அளிக்கப்படும்
- இந்தியர்களே அவர்களின் அமைப்பை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்
- போர் முடிந்த உடனேயே அதற்கான ஏற்பாடு செய்யப்படும்
- இந்தியா காமன்வெல்த் நாடுகளுக்கு இணையானது
- இப்புதிய அரசியல் அமைப்பு பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் (British Common Wealth) உருப்பாகச் செயல்படும்
- அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யும்பொழுது சிறுபான்மையினரின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப்படும்
- இதற்காக வைசிராயின் ஆட்சிக்குழு விரிவு படுத்தப்படும். இந்திய பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவும் அமைக்கபடும்
நிராகரிப்பு
- ஆகஸ்ட் சலுகையில் இந்தியருக்கு சாதகமான பல அரசியல் அமைப்பு உரிமைகள் வழங்கப்பட்டன
- எனினும் “தற்காலிக தேசிய அரசாங்கம்” (Provisional National Government) வழங்கப்பட வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையால், இந்த சலுகை நிராகரிக்கப்பட்டது
- கோரிக்கையை நிராகரித்த கையேடு காங்கிரஸ் கட்சி “ஆச்சார்யா வினோபாவா” தலைமையில் “தனிநபர் சத்யகிரக அறப்போராட்டத்தை” (Individual Sathyagraha) துவக்கியது
- முதல் சத்யாக்கிரகி = ஆச்சார்யா வினோபாவே
- 2-வது சத்யாக்கிரகி = ஜவஹர்லால் நேரு
- 3-வது சத்யாக்கிரகி = பிரம்ம தத்
- முதல் பெண் சத்யாகிரகி = சுபத்ரா குமாரி சவுகான்
ஆகஸ்ட் நன்கொடை 1940 – குறிப்பு
- ஆகஸ்ட் சலுகையின் போது இந்திய வைசிராய் = லின்லித்தோ பிரபு
- ஆகஸ்ட் சலுகையின் போது இங்கிலாந்து பிரதமர் = வின்ஸ்டன் சர்ச்சில்
- தனிநபர் சத்தியாக்கிரகம் “டில்லி நோக்கி சத்தியாக்கிரகம்” (Individual Sathyagraha was also known as “Dilli Chalo Sathyagraha”)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
Such an defined and understable article about August offer… Thank u @tnpscwinners.com