TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 25/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
100 பில்லியன் சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் 4-வது நிறுவனம் – இன்போசிஸ்
இந்தியாவில் 100 பில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நான்காவது நிறுவனம் என்ற சிறப்பை, இன்போசிஸ் எட்டியுள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (140 பில்லியன் டாலர்), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (எம்-கேப் $ 115 பில்லியன்) மற்றும் எச்டிஎப்சி வங்கி (எம்-கேப் $ 1 பில்லியன்) ஆகியவை 100 சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் மூன்று நிறுவனங்கள் ஆகும்
உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில், இந்தியா 2-வது இடம்
குஷ்மேன் & வேக்ஃபீல்டின் 2021 உலகளாவிய உற்பத்தி இடர் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இக்குறியீட்டில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது
இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து, அமெரிக்காவை திறம்பட முறியடித்து உலகின் இரண்டாவது விரும்பத்தக்க உற்பத்தி இடமாக மாறியுள்ளது.
இக்குறியீட்டில், முதல் இடத்தில சீனா உள்ளது
உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் 2021
பொருளாதார புலனாய்வு பிரிவு நிறுவனம் சார்பில், உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் 2021 வெளியிட்டுள்ளது
இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள நகரங்கள் = கோபன்ஹேகன் (டென்மார்க்), டொராண்டோ (கனடா), சிங்கப்பூர்
இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள 2 இந்திய நகரங்கள் = புது தில்லி (48-வது இடம்), மும்பை (50-வது இடம்)
மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய இணை செயலாளர்
சமிபத்தில் மத்திய காபினெட் அமைச்சகம் விஸ்தரிப்பு செய்யும் பொழுது, புதிதாக “கூட்டுறவு அமைச்சகம்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார்
கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய இணை செயலாளராக, அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்காணிப்பு சக்கரம் – ஐன் துபாய்
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்காணிப்பு சக்கரம், “ஐன் துபாய்” என்ற பெயரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் திறக்கப்பட்டுள்ளது
பார்வையாளர்களை துபாயின் அழகிய வானத்தின் அழகிய காட்சியை அனுபவிப்பதற்காக 250 மீட்டர் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
இது துபாய் மெரினாவுக்கு அருகிலுள்ள ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ளது.
கடல்சார் கூட்டுப் பயிற்சி
இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இணைந்து, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் “கடல்சார் கூட்டுப் பயிற்சி” மேற்கொண்டன
இந்தியாவின் சார்பில் ஐஎன்எஸ் ரன்விஜய் மற்றும் ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இதில் கலந்துக் கொண்டன.
ஆபரேசன் தேவி சக்தி – ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் மீட்டு வரும் பணிகளுக்கான நடவடிக்கைக்கு “ஆபரேஷன் தேவி சக்தி” என்று இந்திய வெளியுறவுத்துறை பெயர் சூட்டியுள்ளது.
இதுவரை இந்திய நாட்டை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட குடிமக்களை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் கடலோரப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி 28 ஆண்டுகளில் அரிப்பைச் சந்தித்துள்ளன
மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் (என்சிசிஆர்) சமீபத்திய தொழில்நுட்ப அறிக்கையின்படி, கடந்த 28 ஆண்டுகளில் இந்தியாவின் கடலோரப் பகுதியில் 32 சதவிகிதம் கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளன
ஆனால் 27% கடல் பகுதிகள் விரிவடைந்து உள்ளன.
மிக அதிகளவு கடற்பரப்பு பாதிப்பிற்கு உள்ளாகிய மாநிலங்கள் = மேற்கு வங்கம் (60%), புதுச்சேரி (56%); கேரளா (41%); தமிழ்நாடு (41%)
கடற்பரப்பு விரிவடைந்துள்ள மாநிலங்கள் = ஒடிசா கடற்கரை 51 சதவீதம் விரிவடைந்துள்ளது. ஆந்திரா (48%) கர்நாடகா (26%); மேற்கு வங்கம் (25%); தமிழ்நாடு (22%)
நாட்டின் கடற்கரை 6,631.53 கிலோமீட்டர் நீளம்: 2,135.65 கிலோமீட்டர்கள் பல்வேறு அளவிலான அரிப்புக்கு உள்ளாகி உள்ளன மற்றும் 1,760.06 கிமீ இந்த காலகட்டத்தில் விரிவடைந்தது. கடற்கரையின் 2,700 கிமீ மாற்றம் இன்றி நிலையாக உள்ளது
நாட்டின் 98 கடலோரப் பகுதிகள் கடல் அரிப்பை எதிர்கொண்டுள்ளன. மிக அதிகமாக தமிழகத்தில் கடல் அரிப்புக்கு ஆளாகக்கூடிய 26 கடலோரப் பகுதிகள் உள்ளன
என்.எஸ். விசுவநாதன் குழு – நகர்ப்புற கூட்டுறவு வங்கி கட்டமைப்பு
மத்திய ரிசர்வ் வங்கி, நகர்புற கூட்டுறவு வங்கிகளின் கட்டமைப்பை பற்றி ஆராய்ந்து மேம்படுத்தும் நடவடிக்கை கோரி, என்.எஸ்.விஸ்வநாதன் தலைமையில் குழுவினை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது
இக்குழு நாண்டு அடுக்கு முறையை பரிந்துரை செய்துள்ளது
அடுக்கு-1- ரூ.100 கோடி வரை வைப்புத்தொகையுடன்
அடுக்கு-2 100 முதல் 1000 கோடி வரை வைப்புத்தொகையுடன்
அடுக்கு-3 1000 கோடி முதல் 10000 வரை வைப்புத்தொகை
அடுக்கு-4 10000 கோடிக்கு மேல் வைப்புத்தொகை
நிலையான வளர்ச்சி தாக்கம் உச்சி மாநாடு 2021
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர நிலையான வளர்ச்சி தாக்கம் உச்சி மாநாடு 2021 செப்டம்பர் 20-23 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற உள்ளது
இந்த ஆண்டின் உச்சி மாநாட்டின் கரு = சமமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான மீட்பை வடிவமைத்தல் / haping an Equitable, Inclusive and Sustainable Recovery
அரசாங்கம், வணிகம் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுக்கும் இது வரவேற்பை அளிக்கும்
மிஷன் சாகர்
இந்திய கடற்படை கப்பலான ஐராவத் மருத்துவ பொருட்களை வழங்குவதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு எடுத்து செல்லும் பயண திட்டத்திற்கு “மிஷன் சாகர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது
இந்தோனேசிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவில் இருந்து 10 கொள்கலன்களை கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜினை, ஏற்றிக்கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கப்பல், ஜகார்த்தா நகருக்கு சென்றது
ஹவானா நோய்
ஹவானா நோய் முதன் முதலில் கியூபாவில் தங்கி இருந்த அமெரிக்க அரசு பிரதிநிதிகள் இடம் உருவானது
அவர்கள் ஒரு விசித்திரமான அறிகுறிகளை அனுபவித்தனர். சில அதிகாரிகள் அதை ஒழுங்கற்ற சுகாதார சம்பவங்கள் என்றும் சிலர் தாக்குதல்கள் என்றும் அழைத்தனர்.
நோய்க்குறியுடன் தொடர்புடைய அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றல், சோர்வு, பதட்டம், குமட்டல், அறிவாற்றல் சிரமங்கள் மற்றும் மாறுபட்ட தீவிரத்தின் நினைவாற்றல் இழப்பு ஆகியவை அடங்கும்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளம் – இ-ஷார்ம் போர்ட்டல்
தொழிலாளர் அமைச்சகம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளத்தை (NDUW) அல்லது இ-ஷார்ம் போர்ட்டலை தொடங்க உள்ளது.
இந்த போர்டல் இந்தியாவில் மில்லியன் கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வர உதவும்.
ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் 500 மில்லியன் ஊழியர்களில் 92% அமைப்புசாரா. அவர்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் பிற சமூகப் பாதுகாப்பை இழக்கிறார்கள்.