சமய இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
- கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
- கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர்.
பக்தி என்றால் என்ன
- பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது.
- கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது.
பக்தி இலக்கியங்களின் தோற்றம்
- பக்தி இலக்கிய காலத்தில் இயற்றமிழ்ப் பாடல்கள் பண்ணோடு இயைந்து இசைத் தமிழ்ப்பாடல்களாக மாறின.
- கற்றோர் நாவில் மட்டும் நடனமாடிய தமிழ், கல்லாதார் நெஞ்சிலும் களிநடனம் புரிந்தது.
- வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபு தோன்றியது.
பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம்
- சொல் வளமும் உணர்ச்சிப் பெருக்கும், இசை இனிமையும் சேர்ந்து தமிழ் இலக்கியம் புது மெருகு பெற்றது.
- இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது.
- பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது.
- இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன.
- சங்க இலக்கியத்தில் மாந்தரின் காதல் வாழ்வு கற்பனை கலந்த பாடல்களாகப் பாடப்பட்டது.
- பின்னர் இந்நிலை மாறி, தெய்வத்தின்மீது கொண்ட காதலைப் பாடும் பாடல்களாக வளர்ச்சிபெற்றன.
- அரசர்களின் வீரம் மற்றும் கொடைகளைப் பாடிய பாடல்கள், கடவுளின் திருவிளையாடல்களையும் அருட்செயல்களையும் பாடும் பாடல்களாக மாறின.
- கற்பனைக் காதலுக்குப் பின்னணியாக இயற்கைச் சூழல் வருணிக்கப்பட்டது போலவே கடவுளிடம் செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் கோவில் தலங்களைச் சூழ்ந்த ஊர்களின் இயற்கையழகைப் பாடும் நிலை உருவானது.
தமிழகத்தில் பக்திநெறி
- சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் இயற்கையை முன்நிறுத்திய வழிபாட்டு முறைகளும் (பராய்க்கடன், வெறியாட்டு போன்ற சடங்குகள்) நம்பிக்கைகளும் இருந்தன.
- அக்காலகட்டத்தில் வைதிக நெறியும், இதனை மறுத்த சமணபௌத்த நெறிகளும் தமிழகத்தில் பரவின.
- சமண பௌத்த சமயங்கள், “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன;
- இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனிதன் மாறவேண்டும்” என்று வலியுறுத்தின. சமயப் பெரியோர் அருளுணர்வுடையோராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர்.
- மேலும், “பிறவா நிலையை அடைவதற்குத் துறவறமே சிறந்த வழி என்ற அறவியல் கருத்து நிலவியது.
- உலகில் உள்ள நிலையில்லாத இன்பங்களை ஒதுக்கி, நிலையான வீடுபேற்றை நாடுவதே கடமை என்று கருதும் நிலை உருவானது..
- இச்சூழலில், நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம்; இறைவன் அன்பின் வடிவானவன்; அன்பு ஒன்றே அவனை அடையும் வழி என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர்.
- ஊர்கள் தோறும் கோவில்களுக்குச் சென்று இசைப்பாடல்களால் மனமுருக இறைவனைப் பாடிப் பரவினர்.
- அப்பாடல்கள், கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுமாறு எளிய இனிய தமிழில் இருந்தன.
- இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர்.
- இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
- ஆண்டான் (அடிமை) = தாச மார்க்கம்
- தந்தை = சற்புத்திர மார்க்கம்
- தோழன் = சக மார்க்கம்
- நாயகன் = ஞான மார்க்கம்
அடிமை நெறி
- திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியை கொண்டிருந்தனர்
பிள்ளைமை நெறி
- திருஞானசம்பந்தர் பிள்ளைமை நெறியை கொண்டிருந்தார்
- பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதித்தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.
தோழமை நெறி
- சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியை பெற்றிருந்தனர்
நாயகன் நாயகி நெறி
- மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியை கொண்டனர்.
- பெரியாழ்வார் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.
பன்னிரு திருமுறைகள்
- சிவனைத் தலைவனாகக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்பர்.
பன்னிரு திருமுறைகள் |
||
திருமுறைகள் | நூல்கள் |
ஆசிரியர்கள் |
முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை |
தேவாரம் | திருஞானசம்பந்தர் |
நான்காம் திருமுறை
ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை |
தேவாரம் |
திருநாவுக்கரசர் |
ஏழாம் திருமுறை |
தேவாரம் | சுந்தரர் |
எட்டாம் திருமுறை | திருவாசகம்
திருகோவையார் |
மாணிக்கவாசகர் |
ஒன்பதாம் திருமுறை |
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு |
திருமாளிகைத்தேவர் உட்பட 9 பேர் |
பத்தாம் திருமுறை | திருமந்திரம் |
திருமூலர் |
பதினோராம் திருமுறை |
40 நூல்களின் தொகுப்பு | காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர் |
பனிரெண்டாம் திருமுறை | திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) |
சேக்கிழார் |
நாலாயிரத் திவ்யபிரபந்தம்
- திருமாலைத் தலைவனாகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்று அழைக்கப்பட்டன.
பன்னிரு திருமுறைகளும் ஆழ்வார்களும் |
||
வரிசை எண் | ஆழ்வார்கள் |
நூல்கள் |
1 |
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி |
2 | பூதத்தாழ்வார் |
இரண்டாம் திருவந்தாதி |
3 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி |
4 | திருமழிசையாழ்வார் |
நான்காம் திருவந்தாதி திருச்சாந்த விருத்தம் |
5 |
நம்மாழ்வார் | திருவிருத்தம்
திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய்மொழி |
6 | குலசேகராழ்வார் |
பெருமாள் திருமொழி |
7 |
தொண்டரடிப் பொடியாழ்வார் | திருமலை
திருப்பள்ளியெழுச்சி |
8 | பெரியாழ்வார் |
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி |
9 |
ஆண்டாள் | நாச்சியார் திருமொழி
திருப்பாவை |
10 | திருப்பாணாழ்வார் |
திருப்பதிகம் |
11 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருவெழு கூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் |
12 | மதுரகவியாழ்வார் |
திருப்பதிகம் |
இஸ்லாமியப் பாடல்கள்
- முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது.
- இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர்.
- இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன.
கிறித்துவ இலக்கியங்கள்
- பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர்.
- அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர்.
- அவர்கள், பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர்.
- தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பினர்.
- இதன் விளைவாக கிறித்துவ இலக்கியங்களும் தமிழில் பல்கிப்பெருகின.
சமயங்களின் பொதுநீதி
- சமயங்களின் பொதுநீதி பற்றி “குன்றக்குடி அடிகள்” கூறுவதாவது,
- நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு.
- சுவையுடையனவாக, ஆனால் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல்.
- மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர்.
- மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம்.
- கவிதையியல்
- செவ்வியல் இலக்கியங்கள்
- அறவியல் இலக்கியங்கள்
- காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சமய இலக்கியங்கள்
- சமய இலக்கியங்கள்
கட்டுரை