12 ஆம் வகுப்பு பெருங்கதை

12 ஆம் வகுப்பு பெருங்கதை

12 ஆம் வகுப்பு பெருங்கதை

12 ஆம் வகுப்பு பெருங்கதை

  • வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் = பெருங்கதை
  • இந்நூலின் ஆசிரியர் = கொங்குவேளிர் ஆவார்.
  • இந்நூலிற்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற பெயரும் உண்டு
  • இந்நூலின் காப்பியத் தலைவன் = உதயணன்
  • பெருங்கதை நூலின் மூலநூல் = பைசாச மொழியில் குணாட்டியார் என்பவர் இயற்றிய பிருகத்கதா என்னும் நூலாகும்
  • இது சமண சமயக் காப்பியமாகும்.
  • இதில் 6 காண்டங்கள் உள்ளன.
  • உதயணன் செல்லும் வழியில் உள்ள ஆறு = நருமதை

பெருங்கதை காப்பியச் சுருக்கம்

  • உதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, சரபம் என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது.
  • அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல், துறவு பூணுதல் வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.
  • ஆசிரியப்பாவின் நேர்த்தியான வடிவமைப்பில் பல கருத்துகளைச் செம்மையாக ஆசிரியர் பேசியுள்ளார்.
  • நுணுக்கமான கலைத் திறன்கள் விளக்கப்பட்டிருப்பது போல ஆட்சித் திறனுக்கு அவசியமான கருத்துகளும் கூறப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.

 

 

 

Leave a Reply