தொன்மைத் தமிழகம்
மனித நாகரிகத் தொட்டில்
- முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
- தமிழகம் இன்று போல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
- இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள |
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாவேந்தர்
- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் |
தொன்மைத் தமிழகம்
- தமிழினம் தனக்குவமையில்லா ஒரு தனி இனம்.
- தமிழர் நாகரிகம் தன்னிகரில்லா நனி நாகரிகம்.
- வினையை ஆடவர் உயிராகக் கருதினர்;
- சான்றோனாதலே கல்வியின் முடிவெனப் போற்றினர்;
- விருந்தெதிர் கொண்டு வாழ்ந்தனர்; புகழெனில் உயிரும் கொடுக்க முனைந்தனர்.
வாணிகம்
- தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
- நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
கடல் வாணிகம்
- கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
- கி. மு. பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
- தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
- பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்தனர்.
தனிநாயகம் அடிகளாரின் கூற்று
- தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்கிறார் தனிநாயகம் அடிகளார்.
மொழித் தொன்மை
- “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
- “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
- “கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்” என் மணிவாசகம் கூறுகிறது.
- உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி அளித்திருக்கிறது. உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகிறது.
ஏற்றுமதியும் இறக்குமதியும்
- தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
- காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் … … … …. …. ………. மயங்கிய நனந்தலை மறுகு. |
இசைக்கலை
- மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று.
- பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
- தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன.
- “நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
- பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.
- தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது.
- ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
- இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
- “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
- தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.
- குழலினிது யாழினிது என்று இசை பொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.
உழவுத் தொழில்
- பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர்.
- “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எகிறது புறநானூறு.
- உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.
- உழவுக்குச் சிறப்புப் பெற்ற மருதநிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
- மருத நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.
பழந்தமிழர் வாழ்வு
- அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
- அறத்தின் வழியே பொருளைக் கண்டது; அவ்வறத்தின் வழியே இன்பத்தினை எட்டியது. அக்காலத்தே அறம், பொருள், இன்ப வாழ்வைத் தமிழர் பெற்றிருந்தனர்.
- “களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
- ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.
- பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- தொன்மைத் தமிழகம்
- தொன்மைத் தமிழகம்
- உவம உருபுகள்
- மரபுத்தொடர்
- தமிழ்விடு தூது