10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள்
10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள்

  • உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையே வரும் உருபு, உவம உருபு எனப்படும்.
  • எ.கா:
    • தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள்.
  • இத்தொடர் குரல் இனிமையை உணர்த்துகிறது.
  • குரலின் இனிமைக்கு குயிலின் குரல் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
  • இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும்.
  • இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உவமை உவமேயம்

  • சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும்.
  • அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும்.
  • உவமையை “உவமானம்” என்றும் கூறுவர்.
  • எ.கா:
    • தமிழ் தேன்போல இனிமையானது.
  • இத்தொடரில் “போல” என்பது “உவம உருபு” ஆகும்.

உவம உருபுகள்

  • உவம உருபுகள் = போல, புரைய, ஒப்ப, உறழ, இயைய, ஏய்ப்ப, மான, கடுப்ப, இயைய, நேர, நிகர, அன்ன, இன்ன.
    • போல = கிளிபோலப் பேசினாள்
    • புரைய = வேய்புரை தோள்
    • ஒப்ப = தாயொப்பப் பேசும்
    • உறழ = முழவு உறழ் தடக்கை
    • அன்ன = மலரன்ன சேவடி.

போல புரைய ஒப்ப உறழ இயைய ஏய்ப்ப

  • “போல புரைய ஒப்ப உறழ இயைய ஏய்ப்ப மான கடுப்ப இயைய நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” எனக் கூறும் நூல் = நன்னூல்.

விரியுவமை என்றால் என்ன

  • உவமை, உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) ஆகிய இரண்டனையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை எனப்படும்.
  • உவம உருபு வெளிப்படையாக வருவது = விரியுவமை.
  • உவம உருபு வெளிப்படையாக வருவது = உவமைத் தொடர்.
  • விரியுவமையை “உவமைத் தொடர்” எனவும் கூறுவர்.
  • எ.கா:
    • தேன்போன்ற மொழி.
  • தேன் = உவமை.
  • மொழி = உவமேயம்
  • போன்ற = உவம உருபு..
  • இத்தொடரில் வெளிப்பட வந்துள்ளதனால் இது, விரியுவமை எனப்படும். இஃது, உவமைத் தொடராகும்.
10TH TAMIL உவம உருபுகள்
10TH TAMIL உவம உருபுகள்

தொகையுவமை என்றால் என்ன

  • உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது “தொகை உவமை” என்பர்.
  • தொகையுவமையை “உவமத்தொகை” என்றும் கூறுவர்.
  • உவம உருபு மறைந்து வருவது = தொகையுவமை.
  • உவம உருபு மறைந்து வருவது = உவமத்தொகை.
  • எ.கா:
    • தேன்மொழி.
  • இதில் உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

உவமை உருவக மாற்றம்

  • பவளவாய் ( பவளம் போன்ற வாய் )
  • இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
  • பவளம் = உவமை.
  • வாய் = உவமேயம் (உவமையை ஏற்கும் பொருள்).
  • இவ்வாறு, ஒருபொருளை அதனைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
    • வாய்ப்பவளம்.
  • இத்தொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
  • உவமைத்தொகையில் முதல் பகுதி ( பவளம் ) உவமானமாகவும் அதன் அடுத்த பகுதி உவமேயமாகவும் ( வாய் ) அமையும். உருவகத்தில், உவமேயம் முதல் பகுதி; உவமை அடுத்த பகுதியாக இருக்கும்.
  • இவ்வாறு உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே உருவகம்.

உவமை உருவகம்

உவமைஉருவகம்
அமுதமொழிமொழியமுது
கயற்கண்கண்கயல்
தேன்தமிழ்தமிழ்த்தேன்
பூவிரல்விரல்பூ
மதிமுகம்முகமதி
மலரடிஅடிமலர்
முத்துப்பல்பல்முத்து
விற்புருவம்புருவவில்
மலர்ப்பாதம்பாதமலர்

 

 

Leave a Reply