தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், சங்ககால மன்னன் நன்னனையும், மலைபடுகடாம் நூலையும் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் = பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இடம் பெற்றுள்ள பாடல்,

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்

வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்

வாகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய

அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்

தொல்லியல்

  • தொல்பழங்காலம் பற்றிய ஆய்வையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பர்.
  • தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவைபற்றி அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களான கல்வெட்டுகள், கட்டடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியவற்றின் அடிப்படையில் ஆய்ந்தறிதலே தொல்லியலின் முதன்மையான நோக்கம்.
  • தொல்லியலை ஆங்கிலத்தில், “ஆர்க்கியாலாஜி” எனக் குறிப்பிடுவர்.
  • மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மைக்காலம் என்பர்.
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

காவிரிப்பூம்பட்டினம்

  • 1963 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் பூம்புகார் அருகில் உள்ள “கிழார்வெளி” என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு. மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த கட்டட இடிபாடுகள் கிடைத்தன.
  • இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை, அரைவட்டவடிவ நீர்த்தேக்கம், புத்தவிகாரம் (புத்த பிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தால் ஆன புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
  • இவ்வாய்வு காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரம் இருந்ததை உறுதி செய்தது.

காசுகள்

  • தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம், கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு

  • ஆய்வுக்குழுவினர் ஆய்விடத்திலுள்ள மண்ணை மிக நுட்பமாகவும் பொறுமையுடனும் சிறுகச் சிறுகத் தோண்டிச் சிதையாமல் தடயங்களைத் திரட்டுவர்;
  • அகழாய்வு செய்யும்போது பூமியின் மேற்பரப்பிலிருந்து கீழாகக் குறிப்பிட்ட ஒரு பகுதியினைச் சில வழிமுறைகளைப் பின்பற்றி அகழ்ந்து ஆய்வு செய்வர்.
  • இவ்வாறு செய்யுங்கால் பல்வேறு காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் வெவ்வேறு மண்ணடுக்குகளில் கிடைப்பதுண்டு.
  • இவற்றின் அடிப்படையில்தான் ஒரு நாகரிகத்தின் கூறுகளை அறிந்துகொள்ள இயலும்.
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

முதுமக்கள் தாழிகள்

  • பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது.
  • இவ்வைகைத் தாழிகள், “முதுமக்கள் தாழிகள்” என்கிறோம்.
  • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  • கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டங்களைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண், பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினால் ஆன கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.

 

 

 

Leave a Reply