பெரியாழ்வார்

பெரியாழ்வார்

பெரியாழ்வார்

பெரியாழ்வார்

  • இவர் பிறந்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்
  • இவரின் இயற் பெயர் = விஷ்ணுசித்தர்
  • இவர் கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர்
  • இவர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பட்டுக்கும் மேற்பட்ட பருவங்களைப் பாடியவர்
  • அம்புலிப்பருவத்தில் “சம தான பேத தண்டம்” என்ற அமைப்பில் பாடும் முறையை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இவரே
  • மதுரை மன்னன் வல்லபதேவன் கட்டிய பொற்கிழியை, வேதத்தை விரைந்து ஓதி அறுத்துக் கிழி அறுத்த ஆழ்வார் என்றார் அப்பெயர் பெற்றார்
  • இவரின் வளர்ப்பு மகள் ஆண்டாள்
  • இவர் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடியவர்
  • இவர் தன்னை யசோதையாகப் பாவித்துப் பாடியவர்

சிறப்பு பெயர்

  • விஷ்ணு சித்தர் (இயற் பெயர்)
  • பட்டர் பிரான்
  • பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
  • கிழியறுத்த ஆழ்வார்
  • புதுவை மன்னன்
  • வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்

பாடியவை

  • பெரியாழ் வார் திருமொழி
  • திருப்பல்லாண்டு

மேற்கோள்

  • பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

            மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

  • மாணிக் குறளனே தாலேலோ

           வையம் அளந்தானே தாலேலோ

 

 

Leave a Reply