அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள் 

அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள்

             இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (Indian Constitution) உருவாக்கிய பொழுது, அதில் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதி இல்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். இது 1975 – 1977 வருடங்களில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த உள்நாட்டு அவசரநிலை (Internal Emergency) காலக்கட்டத்தில், “ஸ்வரன் சிங் குழுவின்” (Swaran Singh Committee) பரிந்துரையின் பேரில் 1976-ம் ஆண்டில் 42-வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act, 1976) மூலம் புதிதாக சேர்க்கப்பட்டது. அதில் குடிமக்களுக்கான 1௦ கடமைகள் இடம்பெற்றன.

       இது பகுதி 4-அ என்ற (Part 4-A) பிரிவில், விதி 51-அ (Article 51-A) என்ற இடத்தில சேர்க்கப்பட்டது. 1௦ கடமைகள் இருந்த நிலையில், கூடுதலாக ஒரு கடமையை சேர்க்க 2௦௦2-ம் ஆண்டில் 86-வது சட்டத்திருத்தத்தின் மூலம் திருத்தும் மேற்கொள்ளப்பட்டு, மொத்த கடமைகளின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள்

  1. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அரசியல் அமைப்பிற்கு கீழ்படிவத்துடன் அரசமைப்பு நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்
  2. விடுதலைப் போராட்டடிஹ்ன் பொது புத்துணர்வு அளிக்க உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கோண்டு பின்பற்ற வேண்டும்
  3. இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும்
  4. அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புபுப்பணியில் ஈடுபட்டுத் தேசச் சேவை செய்ய வேண்டும்
  5. சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்படப் பாடுபட வேண்டும்.
  6. நமது கூட்டுக்கலாசாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்
  7. காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூளைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்
  8. அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்
  9. வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்
  10. தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்
  11. 6 முதல் 14 வயது வரை குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும் (குறிப்பு = 86-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இக்கடமை சேர்க்கப்பட்டது)

       உரிமை உணர்வு உள்ள மக்களிடம் கடமை உணர்வும் இருக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதே அடிப்படைக் கடமையாகும்.

அடிப்படை கடமைகள்

       அடிப்படைக் கடமைகள், அடிப்படை உரிமைகளைப் (Fundamental Rights) போல் நீதிப்படுத்தப்படக் கூடியதன்று (Non-Justiciable). கடமை தவறியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டதன் நோக்கமே அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் மக்கள் இடையே கடமை உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

  • அடிப்படை உரிமைகள் = நீதிபடுத்தக்கூடியது (Justiciable)
  • அடிப்படை கடமை, வழிகாட்டு நெறிமுறை கோட்பாடு = நீதிபடுத்தக்கூடியது அல்ல (Non-Justiciable)

 

               

Leave a Reply