அரேபிய துருக்கிய படையெடுப்புகள்

அரேபிய துருக்கிய படையெடுப்புகள்
- இந்தியாவின் மீது படை எடுத்த முதல் முஸ்லிம் படையெடுப்பாளர்கள்? = அரேபியர்கள்.
- இந்தியர்களை “ஹிந்து” என்ற முதன் முதலில் குறிப்பிட்டவர்கள் = அரேபியர்கள்.
- அரேபியர்களின் சிந்து படையெடுப்பை பற்றி கூறும் நூல் = சாச்சா நாமா
- இந்தியாவின் மீது படை எடுத்த முதல் முஸ்லிம் படையெடுப்பாளர் (தோல்வியில் முடிந்தது) = உபையதுல்லா (கி.பி. 711 ஆம் ஆண்டு)
- இந்தியாவின் மீது முதன் முதலில் நடைபெற்ற முஸ்லிம் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு = கி.பி.712 (ரேவார் போர்)
- அரேபியர்கள் இந்தியாவிற்குள் நுழைய காரணமாக அமைந்த போர் = ரேவார் போர்.
- இந்தியாவின் மீது படை எடுத்த முதல் முஸ்லிம் படையெடுப்பாளர் (வெற்றியில் முடிந்த) = முகமது பின் காசிம் (கி.பி. 712 ஆம் ஆண்டு)
- அரேபிய துருக்கிய படையெடுப்புகள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- கி.பி. 712 ஆம் ஆண்டு முகமது பின் காசிம், சிந்துவின் மன்னர் தாகிர் மீது படையெடுப்பை நிகழ்த்தினார். சிந்துவின் தேவால் துறைமுகம் முகமது பின் காசிமால் தாக்கப்பட்டது.
- முகமது பின் காசிம் இறுதியாக படையெடுப்பு நிகழ்த்திய இடம் = முல்தான் (ஸ்வர்ணபுரி).
- முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது முதன் முதலில் ஜசியா வரி விதித்தவர்கள் = அரேபியர்கள்.
- இந்தியாவில் முதன் முதலாக “ஜசியா” வரியை அறிமுகம் செய்த முஸ்லிம் மன்னன் = முகமது பின் காசிம்.
- அரேபியர்களுக்கு அடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள் = துருக்கியர்கள்.
- இந்தியாவின் மீது படையெடுப்பை நிகழ்த்திய முதல் துருக்கிய ஆட்சியாளர்? = சுபுக்தஜின் கஜினி (கி.பி.986)
- இந்தியாவில் அடிமை முறையினை அறிமுகம் செய்தவர்கள் = அரேபியர்கள்
- இந்தியாவின் மீதான படையெடுப்பிற்கு அரேபியர்கள், துருக்கியர்கள் வைத்த பெயர் = ஜிகாத்.
- இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை முதன் முதலில் நிறுவியவர்கள் = துருக்கியர்கள்.
- இந்தியாவில் முதன் முதலில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் = முகமது கோரி.
- அரேபிய துருக்கிய படையெடுப்புகள்

முகமது கஜினி
- கஜினி வம்சத்தை துவக்கி வைத்தவர் = அல்ப் தேகின்
- கஜினி மற்றும் அவனது முன்னோர்கள் சார்ந்த வம்சம் = யாமினி வம்சம்.
- கஜினியின் முதல் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு = கி.பி.1000.
- கி.பி. 1000 வது ஆண்டில் கஜினியின் இரண்டாவது படையெடுப்பை சந்தித்த இந்திய அரசன் = ஜெயபாலர்.
- பஞ்சாபை ஆண்ட இந்து சாகி மன்னர் ஜெயபாலர், கஜினியுடன் நடத்திய போர் = கி.பி. 1001 இல் முதல் வைகிந்த் போர் (அ) பெஷாவர் போர்
- முகமது கஜினி இந்தியாவின் மீது 17 முறை படையெடுப்பை நிகழ்த்தினார்.
- அதில் இரண்டு முறை தோல்வி அடைந்தார் (காஸ்மீர் மீதான 11, 14 வது படையெடுப்பு)
- முகமது கஜினியை தோற்கடித இந்திய மன்னன் = சந்தேலா அரசன் வித்யாதரன்
- கஜினியின் 16 வது படையெடுப்பு = கத்தியவார் கடற்கரையில் உள்ள சோமநாதர் கோவில் மீது.
- சோமநாதர் கோவில் படையெடுப்பின் பொழுது, குஜராத் அரசராக இருந்தவர் = முதலாம் பீமதேவர்.
- சோமநாதர் கோவில் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்ததால், துருக்கி காலிபா கஜினியை “இஸ்லாமிய உலகின் நட்சத்திரம்” (STAR OF ISLAMIC WORLD) என்று புகழ்ந்தார்.
- முகமது கஜினியின் 6 வது படையெடுப்பு = இந்தய அரசர் அனந்தபாலா கஜினிக்கு எதிராக வைகிந்த் பகுதியில் கடுமையாக போரிட்டார் (ஜெயபாலரின் மகன்)
- பஞ்சாபை ஆண்ட இந்து சாகி மன்னர் அனந்தபாலர், கஜினியுடன் நடத்திய போர் = கி.பி. 1008 இல் இரண்டாம் வைகிந்த் போர் (அ) சாச் போர்
- கஜினியின் கடைசி படையெடுப்பு = சிந்து பகுதியில் உள்ள ஜாட் இனத்தவர்கள் மீது.
- கஜினியின் இந்திய படையெடுப்பிற்கான காரணம் = இந்தியாவில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தல்
- இந்திய பகுதிகளை இணைத்து ஆட்சி செய்யும் விருப்பம் கஜினிக்கு இல்லை.
- முகமது கஜினி தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரே இந்தியப் பகுதி = பஞ்சாப்,
- முகமது கஜினி உடன் இந்தியாவிற்கு வந்த பிரபல வரலாற்று அறிஞர் = அல்பெரூணி.
- “கிதாப்-உல்-ஹிந்த்” என்ற நூலின் ஆசிரியர் = அல்பெரூணி
- புராணங்களை படித்த முதல் முஸ்லிம் நபர் = அல்பெரூணி
- முகமது கஜினியின் அவைப் புலவர் = பீர்தௌசி
- புகழ்பெற்ற பாரசீக நூலானா “ஷாநாமா” நூலின் ஆசிரியர் = பீர்தௌசி.
- உலகின் மிக நீளமான கவிதை காப்பியம் = ஷாநாமா.
- “கிழக்கின் ஹோமர்” என்று அழைக்கப்பட்ட அறிஞர் = பீர்தௌசி.
- முகமது கோரியால் ஆதரிக்கப்பட்டவர்கள் = பீர்தௌசி (அவைப் புலவர்), அல்பெரூணி (அறிஞர்), உத்பி (வரலாற்று அறிஞர்)
- கிதாப்-ஐ-யாமினி என்னும் நூலின் ஆசிரியர் = உத்பி
- அரேபிய துருக்கிய படையெடுப்புகள்

முகமது கோரி
- கோரியின் நிஜப்பெயர் = சிகாபதின் / முய்சுதின் முகமது
- இந்தியாவின் மீது முகமது கோரியின் முதல் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு = கி.பி.1175 (முல்தான் மீது)
- “தங்க நகரம்” எனப்படும் நகரம் = முல்தான்
- கி.பி.1178 இல் முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய மன்னன் = சாளுக்கிய மன்னன் இரண்டாம் முலராஜா..
- முதல் மற்றும் இரண்டாம் தரைன் போர்கள் யாருக்கு இடையே நடைபெற்றது = முகமது கோரி மற்றும் மூன்றாம் பிரித்திவிராஜ் சௌகான்.
- முதல் தரைன் போர்:
-
-
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1191
- வெற்றியாளர் = மூன்றாம் பிரித்திவிராஜ் சௌகான்
-
-
- இரண்டாம் தரைன் போர்:
-
-
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1192
- வெற்றியாளர் = முகமது கோரி
-
-
- மூன்றாம் பிரித்திவிராஜ் சௌகானின் வரலாறு மற்றும் அவரின் காதல் கதைகளை பற்றி கூறும் நூல் = ப்ரித்திவிராஜ் ராசோ
- ப்ரித்திவிராஜ் ராசோ நூலின் ஆசிரியர் = சந்த் பர்தாய்
- சந்தவார் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1194
- சந்தவார் போரில் முகமது கஜினி, கண்ணோஜின் அரசர் ஜெயசந்திரரை தோற்கடித்தான்.
- முகமது கோரியுடன் இந்தியாவிற்கு வந்த சூபி துறவி = ஷேக் மொய்னுதீன் சிஸ்தி
- எந்த முஸ்லிம் அரசர் தன்னுடைய நாணயங்களில் “லட்சுமி தேவியின்” உருவத்தை வரைந்து வெளியிட்டார் = முகமது கோரி.
- முகமது கோரியின் மறைவுக்கு பிறகு, அவரின் இந்திய பகுதிகளை நிரவகித்தவர்கள் = கோரியின் மூன்று அடிமைகளில் ஒருவனான குத்புதின் ஐபக்.
- முகமது கோரியின் இந்திய படையெடுப்பின் காரணம் = இந்திய பகுதிகளை இணைத்தல்.
- இந்தியாவில் முஸ்லிம் ஆதிக்கம் ஏற்பட காரணமாக இருந்த மன்னன் = முகமது கோரி.
- இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி ஏற்பட காரணமாக இருந்த மன்னன் = முகமது கோரி.
- இந்தியாவில் துருக்கியர்கள் ஆட்சி ஏற்பட காரணமாக இருந்த போர் = தரைன் போர்கள் மற்றும் சந்தவார் போர்.
- இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்யம் ஏற்படுத்திய முதல் ஆட்சியாளர் = முகமது கோரி.
- கோரியின் படைத்தளபதிகளில் ஒருவனான “பக்தியார் கில்ஜி”, உலகப்புகழ்பெற்ற நாலந்தா மற்றும் விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களை அழித்தான்.
- அரேபிய துருக்கிய படையெடுப்புகள்
- அரேபிய துருக்கிய படையெடுப்புகள்