1935ம் வருட சட்டப்படி மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டாலும், கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தால் அது மதிப்பில்லாமல் போனது
1939-ம் வருட “2-ம் உலகப் போரில்”, இந்தியர்களின் அனுமதி இல்லாமல் அப்போதைய இந்திய வைசிராயான “லின்லித்தோ பிரபு”, இந்தியாவும் போரில் பங்கு பெறுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்
காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை ஏற்கவில்லை
நிபந்தனைகள்
சில நிபந்தனைகளின் பேரில் இந்தியாவின் ஆதரவை வழங்க முன்வந்தனர். அவையாவன
போருக்கு பின் இந்தியாவின் சுயாட்சிக் கொள்கையை தெளிவாக அறிவிக்க வேண்டும்
இந்தியாவிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டே தற்காலிக தேசிய அரசாக மத்தியில் அமைக்க வேண்டும்
அந்த தற்காலிக அரசு இந்திய சட்டமன்றங்களுக்கு பொருப்புள்ளதாக இருக்க வேண்டும்
காந்தி = “இந்தியர்களால், இந்தியர்களுக்காக பொறுப்புள்ள கூட்டரசு ஒன்று மத்திய அரசில் ஏற்பட வேண்டும்” என்றார்.
வெள்ளை அறிக்கை
அப்போதைய வைசிராய் “லின்லித்தோ பிரபு”, பல தலைவர்களை சந்தித்து பேசி, இறுதியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதாவது
இந்தியா, பிற டொமினியன் நாடுகளை போலவே, இங்கிலாந்து அரசுடன் பிணைப்பை பலப்படுத்தப்படும்
போர் முடிந்த பின்பு இந்தியாவின் அரசியல் அமைப்பு முறையை முழுமையாக பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசீலனை செய்யும்
உடனடியாக இந்தியாவிற்கு அதிக அளவு அதிகாரம் வழங்குவது இயலாது
போர்க்காலத்தின் வைசிராய்க்கு உதவியாக ஒரு ஆலோசனை குழு (Advisory War Council) அமைக்கப்படும்
ஆனால இதனை இந்தியத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர்
காந்தி = “ரொட்டி கேட்டதற்கு கல்தான் கிடைத்தது” என கூறினார்
ஆகஸ்ட் நன்கொடை 1940
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் ஆதரவை பெற லின்லித்தோ பிரபு, 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பே “ஆகஸ்ட் சலுகை” ஆகும். அதில்
இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து (Dominion Status) அளிக்கப்படும்
இந்தியர்களே அவர்களின் அமைப்பை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்
போர் முடிந்த உடனேயே அதற்கான ஏற்பாடு செய்யப்படும்
இந்தியா காமன்வெல்த் நாடுகளுக்கு இணையானது
இப்புதிய அரசியல் அமைப்பு பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் (British Common Wealth) உருப்பாகச் செயல்படும்
அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யும்பொழுது சிறுபான்மையினரின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப்படும்
இதற்காக வைசிராயின் ஆட்சிக்குழு விரிவு படுத்தப்படும். இந்திய பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவும் அமைக்கபடும்
நிராகரிப்பு
ஆகஸ்ட் சலுகையில் இந்தியருக்கு சாதகமான பல அரசியல் அமைப்பு உரிமைகள் வழங்கப்பட்டன
எனினும் “தற்காலிக தேசிய அரசாங்கம்” (Provisional National Government) வழங்கப்பட வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையால், இந்த சலுகை நிராகரிக்கப்பட்டது
கோரிக்கையை நிராகரித்த கையேடு காங்கிரஸ் கட்சி “ஆச்சார்யா வினோபாவா” தலைமையில் “தனிநபர் சத்யகிரக அறப்போராட்டத்தை” (Individual Sathyagraha) துவக்கியது
Such an defined and understable article about August offer… Thank u @tnpscwinners.com