இந்தியாவில் பக்தி இயக்கம்

இந்தியாவில் பக்தி இயக்கம்
- “பக்தி என்ற வார்த்தை முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = ஷ்வேதாஷ்வதார உபநிடதம்.
- பக்தி இயக்கம் முதன் முதலில் தமிழகத்தில் கி.பி. 6 – 7 நூற்றாண்டில் துவங்கியது.
- பக்தி இயக்க காலம் எனப்படுவது = பல்லவர்கள் காலம்.
- வடஇந்தியாவின் பக்தி இயக்க மும்மூர்த்திகள் = குருநானக், கபீர், ராய்தாஸ்
- சமணம் மற்றும் புத்த மதத்தின் வளர்ச்சியை தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் தடுத்தி நிறுத்தியது.
- மகாராஷ்டிராவில் பக்தி இயக்கம் வரகரி என்றும், தாராகரி என்றும் இரண்டாக பிரிந்தது.
- இந்தியாவில் சிவனுக்காக உள்ள ஜோதிர்லிங்கங்களின் எண்ணிக்கை = 12.
- “மகானுபாவா” பிரிவை துவக்கி வைத்தவர் = சக்ரதாரா.
|
தத்துவங்கள் |
உருவாக்கியவர்கள் |
| அத்வைத வேதாந்தம் |
சங்கராச்சாரியார் |
|
விசிஷ்டாத்வைதம் |
ராமானுஜர் |
| துவைதஅத்வைதம் |
நிம்பர்கர் |
|
சுத்த அத்வைதம், புஷ்டி மார்க்கம் |
வல்லபாச்சாரியா |
| துவைதம் |
மத்வாச்சாரியார் |
|
பேதா அபேதவாதம் |
பாஸ்கராச்சாரியா |
| சிவாத்வைதம் (சிவ-விசிஷ்டாத்வைதா) |
ஸ்ரீகாந்த் ஆச்சார்யா |
பக்தி இயக்கத்தின் மூன்று மார்கங்கள்
- ஞான மார்க்கம்
- கர்ம மார்க்கம்
- பக்தி மார்க்கம்
பன்னிரு ஆழ்வார்கள்
- ஆழ்வார்கள் மொத்தம் = 12.
- விஷ்ணுவை வழிபடுவோர் = ஆழ்வார்கள்.
- ஆழ்வார்கள் பாடியவற்றை “நாலாயிர திவ்வியப்பிரபந்தம்” என்ற நூலாக தொகுத்தவர் = நாதமுனிகள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாயன்மார்கள்
- நாயன்மார்கள் மொத்தம் = 63.
- சிவனை வழிபடுவோர் இவர்கள்.
- உயர் சாதி முதல் கீழ்சாதி வரையிலான பல்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் நாயன்மார்களாக இருந்தனர்.
- சாதிமதம் பாராமல், சிவனை வழிபடுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்

சங்கராச்சாரரியார்
- காலம் = கி.பி. 788 – 820
- கேரளா மாநிலம் காலடியில் பிறந்தவர்.
- இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணம் செய்து தனது கருத்துக்களை பரப்பியவர்.
- இவரின் தத்துவம் = அத்வைத வேதாந்தம்
- இவரின் மார்க்கம் = ஞான மார்க்கம்
- இவரின் போதனை = மாயை, அத்வைதம் மற்றும் வேதாந்தத்தின் முக்கியத்துவம் பற்றி இருந்தது.
- இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.
- இவர் நான்கு மடங்களை இந்தியாவில் நிறுவினார். அவை,
-
- பத்ரிநாத் (ஜியோதிபீடம் (விஷ்ணு))
- பூரி (கோவர்த்தனபீடம் (பாலபத்ரா, சுபத்ரா))
- சிருங்கேரி (மைசூர், சிருங்கேரி பீடம், சிவன்)
- துவாரகா (சாரதாபீடம், கிருஷ்ணன்)
-
- இவர் எழுதிய நூல்கள் = உபநிடதங்கள், பகவத்கீதை மற்றும் பத்ராயானரின் பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
- “பிரச்சன்ன புத்தர்” (prachana Buddha) அல்லது “மறைக்கப்பட்ட புத்தர்” (hidden Buddha) என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
- பக்தி இயக்கத்தின் முதல் பரப்புரையாளர் என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
- 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
- இவர் எழுதியவை = விவேகசூடாமணி, உபதேசசஹஸ்ரீ, மற்றும் ஆத்மபோதா போன்ற தத்துவ நூல்கள்.
- இவர் எழுதியவை = பஜ கோவிந்தம், சௌந்தர்ய லஹரி மற்றும் நிர்வாண ஷட்கம் உள்ளிட்ட பக்தி பாடல்கள்.
- அவர் யதார்த்தத்தின் மூன்று நிலைகளின் கோட்பாட்டை வகுத்தார் (சட்டா-திரைவித்யா), யதார்த்தத்தின் கருத்து (மூன்று அடுக்கு அறிவாற்றல்)
- இந்தியாவில் பக்தி இயக்கம்
ராமானுஜர் ஆசார்யர்
- காலம் = கி.பி.1017 – 1137
- தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராமத்தில் பிறந்தவர்.
- தமிழ் வைஷ்ணவ துறவி
- இவரின் தத்துவம் = விசிஷ்டாத்வைதத்தம்
- இவர் கடவுளிடம் சரணடைவதை வலியுறுத்தினார்
- இவர் எழுதிய நூல்கள் = வேதாந்த சங்கிரகம். ஸ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திரங்கள்), பகவத் கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். மேலும் “வேதாந்தசாரா” (“வேதாந்தத்தின் சாரம்”) மற்றும் வேதாந்ததீபா (“வேதாந்தத்தின் விளக்கு”) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
மத்வாச்சார்யா
- காலம் = கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
- இவர் கி.பி.1238ல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்தார்
- இவரின் தத்துவம் = துவைதம்
- இவர் பிரபஞ்சத்தை “ஸ்வதந்திரம்” மற்றும் “பரதந்திரம்” என இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
நிம்பர்காச்சார்யா
- இவரின் காலம் 13-14 ஆம் நூற்றாண்டு
- தெலுங்கு வைஷ்ணவ துறவி
- ராமானுஜரின் சமகாலத்தவர்
- இவரின் தத்துவம் = துவைதஅத்வைதம்
- முக்தி அடைவதற்கு இவர் கூறும் ஐந்து வழிகள்
- கர்மா (நீதியான செயல்)
- வித்யா (அறிவு)
- தியானம் (உபாசனா அல்லது தியானம்)
- பிரபத்தி (பக்தியுடன் இறைவனிடம் சரணடைதல்)
- குருபசத்தி (பக்தி மற்றும் குருவிடம் சரணடைதல்)

வல்லபாச்சார்யா
- இவரின் காலம் = கி.பி. 1479-1531
- தெலுங்கு வைஷ்ணவ துறவி
- கி.பி.1479ல் வாரணாசியில் பிறந்து பிருந்தாவனத்திற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
- இவரின் தத்துவம் = சுத்தஅத்வைதம்
- “ஜகத்குரு மகாபிரபு” என்று அழைக்கப்பட்டவர் = வல்லபச்சார்யா.
- சகுனா பிரிவைச் சேர்ந்தவர் (கிருஷ்ண பக்தி)
- கிருஷ்ணர் தொடர்பான “புஸ்தி” மார்க்கத்தை துவக்கி வைத்தார்.
- இவரின் போதனைகள் “புஷ்டிமார்கம்” என்று அழைக்கப்படுகிறது.
- இவரின் கோட்பாடுகள் “கீழை எபிகுரியானியத் தத்துவம்” என அழைக்கப்படுகிறது.
- இவர் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் சமகாலத்தவர்.
- இவர் “ஸ்ரீநாத்ஜி” என்ற பெயரில் கிருஷணரை வழிபட்டார்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
வித்யாபதி
- இவரின் காலம் = கி.பி. 1352-1448
- மைதிலி மொழிக் கவிஞர்
- “மைதிலியின் குக்கூ கவிஞர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
- இவரின் படைப்புகள் = பூ-பரிக்ரமா, வர்சக்ருத்யா, தனவாக்யாவலி.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
தாது தயாள்
- இவரின் காலம் = கி.பி. 1544-1603
- அகமதாபாத்தில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவர்.
- ஆனால் இந்துவால் வளர்க்கப்பட்டவர்.
- இவரின் போதனைகள் “பாணி” என்னும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
- இவர் உருவாக்கிய அமைப்பு = பிரம்ம சம்பிரதாயம் அல்லது பரம் பிரம்ம சம்பிரதாயம்

கபீர்
- இவரின் காலம் = 1440-1510 கி.பி
- நெசவாளர்
- ராமானந்தரின் சீடர்.
- கபீரின் முக்கிய சீடர் = குருநானக்.
- சாதி, மதம் மற்றும் சிலை வழிபாட்டை எதிர்த்தவர்.
- “இந்து – முஸ்லிம்” ஒற்றுமையை வலியுறுத்தியவர்.
- இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்று போதித்தவர்.
- இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட குடங்கள் என்று கூறினார்.
- இவரின் படைப்புகள் = சபாதா தோஹா, ஹோலி, சாகி கிரந்தம், கபீர் கிரந்தவாலி, அனுராக சாகர்.
- இவரின் புகழ்பெற்ற படைப்பு = பிஜாக்.
- இவரின் போதனைகள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
- சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் சமகாலத்தவர் இவர்.
ராமானந்தா
- இவரின் காலம் = கி.பி. 14-5 ஆம் நூற்றாண்டு.
- ராமானுஜரின் சீடர்.
- வடஇந்தியாவின் முதல் பக்தி இயக்க துறவி.
- வடஇந்தியாவில் பக்தி இயக்கத்தை பரப்பியவர்.
- இவர் உருவாக்கிய அமைப்பு = பைராகி சம்பரதாயா.
- இவரின் 2 கொள்கைகள் = கடவுள் மீது பரிபூரண அன்பு, மனித சகோதரத்துவம்.
- இவரின் சீடர்கள் மொத்தம் = 12.
- கபீர் – முஸ்லிம் நெசவாளர்
- தன்னா – ஜாட் விவசாயி
- பிபா – ராஜ்புத் இளவரசர்
- சேனா – முடி வெட்டுபவர்
- இவரின் போதனைகள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இவரின் படைப்புகள் (சமஸ்கிருதம்) = பஜா பாஸ்கரா, ராமர்சான் பதாட்டி
- இவரின் படைப்புகள் (ஹிந்தி) = கியான்-லீலா, யோகா சிந்தாமணி
- இவரின் சீடர் = கபீர்.
- “தெற்கு மற்றும் வடக்கின் பக்தி இயக்கத்திற்கு இடையிலான பாலமாக செயல்பட்டவர்” = ராமானந்தர்.
- தென்இந்தியாவில் இருந்து வடஇந்தியாவிற்கு பக்தி இயக்கத்தை எடுத்துச் சென்றவர்.

துளசிதாஸ்
- இவரின் காலம் = கி.பி. 1544-1623
- சற்குண துறவி
- ராம பக்தி பிரிவைச் சேர்ந்த ஒரு இந்து துறவி.
- அக்பரின் சமகாலத்தவர்.
- இவரின் படைப்புகள் = ராம்சரிதமானஸ், கவிதாவாலி, கீதாவலி, பார்வதி மங்கள், சங்கி மங்கள், வினய பத்ரிகா, ஹனுமான் சாலிஸா.
- வாரணாசியில், ஹனுமானுக்காக “சங்கத் மோச்சன்” என்னும் கோயிலை கட்டினார்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
நபதாசர்
- இவரின் காலம் = 1570-1662 கி.பி
- கி.பி.1570ல் குவாலியரில் பிறந்தவர்.
- கண் பார்வை அற்றவர்.
- இவரின் படைப்பு = பக்தமால் (பிரஜ் மொழியில் எழுதப்பட்டது)
- இந்தியாவில் பக்தி இயக்கம்
சுர்தாஸர்
- இவரின் காலம் = 1478-1583 கி.பி
- வல்லபாச்சாரியாரின் சீடர்.
- பார்வையற்ற துறவி
- இவரின் படைப்பு = சூர்சாகர், சூர் சராவளி, சாகித்திய லகிரி
- கிருஷ்ண பக்தி பிரிவைச் சேர்ந்தவர்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
மீராபாய்
- பெண் துறவி. கிருஷ்ணா பக்தை.
- இவரின் காலம் = 1498-1546 கி.பி.
- இவர் மெர்டாவின் ரத்தோர் இளவரசி மற்றும் மேவார் ராணா சங்காவின் மருமகள் ஆவார்.
- இவரின் கணவர் = போஜராஜன்.
- இவரின் படைப்பு = படாவலி.
- தனது வாழ்க்கையை கிருஷ்ணருக்காக அர்ப்பணித்தவர்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்

சைதன்யர்
- இவரின் காலம் = கி.பி. 1486-1533
- இவரின் இயற்பெயர் = விஸ்வம்பர்.
- வங்காளத்தில் உள்ள நந்த்விபா பகுதியை சேர்ந்தவர்.
- இவரின் குரு = சுவாமி ஈஸ்வரபூரி
- “கௌடியா மகாபிரபு” என்றும் “சைதன்ய மகாபிரபு” என்றும் அழைக்கப்பட்டவர்.
- “விஷ்ணுவின் அவதாரம்” என்று அவரது சீடர்களால் அழைக்கப்பட்டார்.
- “வித்யாசாகர்” என்று அழைக்கப்பட்ட துறவி = சைதன்யர்.
- இவர் உருவாக்கியது = வங்காள வைஷ்ணவ அமைப்பு (அல்லது) கௌரங் (கூடிய வைஷ்ணவம்)
- இவரின் தத்துவம் = அச்சிந்தியா பேத அபேதாம் (மத்தியகௌடிய சம்பிரதாயம்)
- சங்கீர்த்தனம் (அ) கடவுளின் புகழை பொது இடங்களில் பாடும் கீர்த்தனை முறையை அறிமுகம் செய்தவர் இவரே.
- இவரின் படைப்பு = சிக்ஸா அஷ்டகா.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
சங்கர தேவர்
- இவரின் காலம் = கி.பி. 1449-1568
- இவர் நிறுவிய அமைப்பு = ஏக் ஷரன் சம்பிரதாயம் அல்லது மஹாபுருஷிய சம்பிரதாயம்.
- இவரின் போதனைகள் = “பகவதி தர்மம்” என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
ஞானதேவர்
- ஞானேஸ்வரா என்று அழைக்கப்பட்டார்.
- இவரின் காலம் = 1271-1296 கி.பி
- கிருஷ்ண மார்க்க பிரிவை சேர்ந்தவர்.
- இவரின் புகழ்பெற்ற நூல் = பகவத்கீதைக்கு இவர் எழுதிய உரை, “ஞானேஸ்வரி அல்லது பவர்த்ததிப்கா”.
- இவரின் மற்றொரு படைப்பு = அம்ருதானுபவம்.
- இந்தியாவில் பக்தி இயக்கம்
நாமதேவர்
- இவரின் காலம் = கி.பி. 1270-1350
- இவர் தையல்காரர் ஆவார்.
- சாதி வேறுபாடுகளை எதிர்த்தார்
- வரகரி பிரிவை சேர்ந்தவர்.
- இவர் எழுதியது = பக்திக் கவிதைகள் (“அபங்கங்ஸ்” என்பர்)
ஏக்நாதர்
- இவரின் காலம் = 1533-1599 கி.பி
- வரகரி பிரிவை சேர்ந்தவர்.
- இவர் ராமாயணத்திற்கு எழுதிய உரை = பவர்த்த ராமாயணம்.
- பாகவத புராணத்தின் 11வது புத்தகத்திற் உரை எழுதியுள்ளார். அதனை “ஏக்நதி பாகவதம்” என்பர்.
துக்காராம்
- இவரின் காலம் = கி.பி. 1598-1650
- இவர் தர்காரி மற்றும் வரகரி பிரிவை சேர்ந்தவர்.
- முகலாய மன்னர் ஜகாங்கீர் காலத்தை சேர்ந்தவர்.
- இவர் எழுதியது = பக்திக் கவிதைகள் (“அபங்கங்ஸ்” என்பர்)
- சத்ரபதி சிவாஜியின் சமகாலத்தவர். அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
ராமதாஸர்
- இவரின் காலம் = 1608-1681 கி.பி
- தர்காரி பிரிவைச் சேர்ந்தவர்
- இவரின் படைப்பு = தசபோதம்
- இந்தியாவில் பக்தி இயக்கம்
புரந்தர் தாஸ்
- இவரின் காலம் = 1480-1564 கி.பி
- “கர்நாடக இசையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்
- இந்தியாவில் பக்தி இயக்கம்
தியாகராஜா
- இவரின் காலம் = 1767-1847 கி.பி
- தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த துறவி, கர்நாடக இசையமைப்பாளர்.
- இவரின் புகழ்பெற்ற படைப்பு = பஞ்சரத்ன கிருதிகள் என்று அழைக்கப்படும் அவரது ஐந்து பாடல்கள்.
நர்சின் மேத்தா
- குஜராத்தை சேர்ந்த துறவி.
- கிருஷ்ண மார்க்கத்தை பின்பற்றியவர்
- “ஹரிஜன்” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர்.