இந்தியாவில் பக்தி இயக்கம்

இந்தியாவில் பக்தி இயக்கம்

இந்தியாவில் பக்தி இயக்கம்
இந்தியாவில் பக்தி இயக்கம்

இந்தியாவில் பக்தி இயக்கம்

  • “பக்தி என்ற வார்த்தை முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = ஷ்வேதாஷ்வதார உபநிடதம்.
  • பக்தி இயக்கம் முதன் முதலில் தமிழகத்தில் கி.பி. 6 – 7 நூற்றாண்டில் துவங்கியது.
  • பக்தி இயக்க காலம் எனப்படுவது = பல்லவர்கள் காலம்.
  • வடஇந்தியாவின் பக்தி இயக்க மும்மூர்த்திகள் = குருநானக், கபீர், ராய்தாஸ்
  • சமணம் மற்றும் புத்த மதத்தின் வளர்ச்சியை தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் தடுத்தி நிறுத்தியது.
  • மகாராஷ்டிராவில் பக்தி இயக்கம் வரகரி என்றும், தாராகரி என்றும் இரண்டாக பிரிந்தது.
  • இந்தியாவில் சிவனுக்காக உள்ள ஜோதிர்லிங்கங்களின் எண்ணிக்கை = 12.
  • “மகானுபாவா” பிரிவை துவக்கி வைத்தவர் = சக்ரதாரா.

தத்துவங்கள்

உருவாக்கியவர்கள்
அத்வைத வேதாந்தம்

சங்கராச்சாரியார்

விசிஷ்டாத்வைதம்

ராமானுஜர்
துவைதஅத்வைதம்

நிம்பர்கர்

சுத்த அத்வைதம், புஷ்டி மார்க்கம்

வல்லபாச்சாரியா
துவைதம்

மத்வாச்சாரியார்

பேதா அபேதவாதம்

பாஸ்கராச்சாரியா
சிவாத்வைதம் (சிவ-விசிஷ்டாத்வைதா)

ஸ்ரீகாந்த் ஆச்சார்யா

பக்தி இயக்கத்தின் மூன்று மார்கங்கள்

  1. ஞான மார்க்கம்
  2. கர்ம மார்க்கம்
  3. பக்தி மார்க்கம்

பன்னிரு ஆழ்வார்கள்

  • ஆழ்வார்கள் மொத்தம் = 12.
  • விஷ்ணுவை வழிபடுவோர் = ஆழ்வார்கள்.
  • ஆழ்வார்கள் பாடியவற்றை “நாலாயிர திவ்வியப்பிரபந்தம்” என்ற நூலாக தொகுத்தவர் = நாதமுனிகள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நாயன்மார்கள்

  • நாயன்மார்கள் மொத்தம் = 63.
  • சிவனை வழிபடுவோர் இவர்கள்.
  • உயர் சாதி முதல் கீழ்சாதி வரையிலான பல்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் நாயன்மார்களாக இருந்தனர்.
  • சாதிமதம் பாராமல், சிவனை வழிபடுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்
சங்கராச்சாரியார்
சங்கராச்சாரியார்

சங்கராச்சாரரியார்

  • காலம் = கி.பி. 788 – 820
  • கேரளா மாநிலம் காலடியில் பிறந்தவர்.
  • இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணம் செய்து தனது கருத்துக்களை பரப்பியவர்.
  • இவரின் தத்துவம் = அத்வைத வேதாந்தம்
  • இவரின் மார்க்கம் = ஞான மார்க்கம்
  • இவரின் போதனை = மாயை, அத்வைதம் மற்றும் வேதாந்தத்தின் முக்கியத்துவம் பற்றி இருந்தது.
  • இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.
  • இவர் நான்கு மடங்களை இந்தியாவில் நிறுவினார். அவை,
      1. பத்ரிநாத் (ஜியோதிபீடம் (விஷ்ணு))
      2. பூரி (கோவர்த்தனபீடம் (பாலபத்ரா, சுபத்ரா))
      3. சிருங்கேரி (மைசூர், சிருங்கேரி பீடம், சிவன்)
      4. துவாரகா (சாரதாபீடம், கிருஷ்ணன்)
  • இவர் எழுதிய நூல்கள் = உபநிடதங்கள், பகவத்கீதை மற்றும் பத்ராயானரின் பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
  • “பிரச்சன்ன புத்தர்” (prachana Buddha) அல்லது “மறைக்கப்பட்ட புத்தர்” (hidden Buddha) என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
  • பக்தி இயக்கத்தின் முதல் பரப்புரையாளர் என்று அழைக்கப்படுபவர் = சங்கராச்சாரியார்.
  • 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
  • இவர் எழுதியவை = விவேகசூடாமணி, உபதேசசஹஸ்ரீ, மற்றும் ஆத்மபோதா போன்ற தத்துவ நூல்கள்.
  • இவர் எழுதியவை = பஜ கோவிந்தம், சௌந்தர்ய லஹரி மற்றும் நிர்வாண ஷட்கம் உள்ளிட்ட பக்தி பாடல்கள்.
  • அவர் யதார்த்தத்தின் மூன்று நிலைகளின் கோட்பாட்டை வகுத்தார் (சட்டா-திரைவித்யா), யதார்த்தத்தின் கருத்து (மூன்று அடுக்கு அறிவாற்றல்)
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

ராமானுஜர் ஆசார்யர்

  • காலம் = கி.பி.1017 – 1137
  • தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராமத்தில் பிறந்தவர்.
  • தமிழ் வைஷ்ணவ துறவி
  • இவரின் தத்துவம் = விசிஷ்டாத்வைதத்தம்
  • இவர் கடவுளிடம் சரணடைவதை வலியுறுத்தினார்
  • இவர் எழுதிய நூல்கள் = வேதாந்த சங்கிரகம். ஸ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திரங்கள்), பகவத் கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். மேலும் “வேதாந்தசாரா” (“வேதாந்தத்தின் சாரம்”) மற்றும் வேதாந்ததீபா (“வேதாந்தத்தின் விளக்கு”) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மத்வாச்சார்யா

  • காலம் = கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
  • இவர் கி.பி.1238ல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்தார்
  • இவரின் தத்துவம் = துவைதம்
  • இவர் பிரபஞ்சத்தை “ஸ்வதந்திரம்” மற்றும் “பரதந்திரம்” என இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

நிம்பர்காச்சார்யா

  • இவரின் காலம் 13-14 ஆம் நூற்றாண்டு
  • தெலுங்கு வைஷ்ணவ துறவி
  • ராமானுஜரின் சமகாலத்தவர்
  • இவரின் தத்துவம் = துவைதஅத்வைதம்
  • முக்தி அடைவதற்கு இவர் கூறும் ஐந்து வழிகள்
    • கர்மா (நீதியான செயல்)
    • வித்யா (அறிவு)
    • தியானம் (உபாசனா அல்லது தியானம்)
    • பிரபத்தி (பக்தியுடன் இறைவனிடம் சரணடைதல்)
    • குருபசத்தி (பக்தி மற்றும் குருவிடம் சரணடைதல்)
வல்லபாச்சார்யா
வல்லபாச்சார்யா

வல்லபாச்சார்யா

  • இவரின் காலம் = கி.பி. 1479-1531
  • தெலுங்கு வைஷ்ணவ துறவி
  • கி.பி.1479ல் வாரணாசியில் பிறந்து பிருந்தாவனத்திற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
  • இவரின் தத்துவம் = சுத்தஅத்வைதம்
  • “ஜகத்குரு மகாபிரபு” என்று அழைக்கப்பட்டவர் = வல்லபச்சார்யா.
  • சகுனா பிரிவைச் சேர்ந்தவர் (கிருஷ்ண பக்தி)
  • கிருஷ்ணர் தொடர்பான “புஸ்தி” மார்க்கத்தை துவக்கி வைத்தார்.
  • இவரின் போதனைகள் “புஷ்டிமார்கம்” என்று அழைக்கப்படுகிறது.
  • இவரின் கோட்பாடுகள் “கீழை எபிகுரியானியத் தத்துவம்” என அழைக்கப்படுகிறது.
  • இவர் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் சமகாலத்தவர்.
  • இவர் “ஸ்ரீநாத்ஜி” என்ற பெயரில் கிருஷணரை வழிபட்டார்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

வித்யாபதி

  • இவரின் காலம் = கி.பி. 1352-1448
  • மைதிலி மொழிக் கவிஞர்
  • “மைதிலியின் குக்கூ கவிஞர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
  • இவரின் படைப்புகள் = பூ-பரிக்ரமா, வர்சக்ருத்யா, தனவாக்யாவலி.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

தாது தயாள்

  • இவரின் காலம் = கி.பி. 1544-1603
  • அகமதாபாத்தில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவர்.
  • ஆனால் இந்துவால் வளர்க்கப்பட்டவர்.
  • இவரின் போதனைகள் “பாணி” என்னும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
  • இவர் உருவாக்கிய அமைப்பு = பிரம்ம சம்பிரதாயம் அல்லது பரம் பிரம்ம சம்பிரதாயம்
கபீர்
கபீர்

கபீர்

  • இவரின் காலம் = 1440-1510 கி.பி
  • நெசவாளர்
  • ராமானந்தரின் சீடர்.
  • கபீரின் முக்கிய சீடர் = குருநானக்.
  • சாதி, மதம் மற்றும் சிலை வழிபாட்டை எதிர்த்தவர்.
  • “இந்து – முஸ்லிம்” ஒற்றுமையை வலியுறுத்தியவர்.
  • இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்று போதித்தவர்.
  • இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட குடங்கள் என்று கூறினார்.
  • இவரின் படைப்புகள் = சபாதா தோஹா, ஹோலி, சாகி கிரந்தம், கபீர் கிரந்தவாலி, அனுராக சாகர்.
  • இவரின் புகழ்பெற்ற படைப்பு = பிஜாக்.
  • இவரின் போதனைகள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் சமகாலத்தவர் இவர்.

ராமானந்தா

  • இவரின் காலம் = கி.பி. 14-5 ஆம் நூற்றாண்டு.
  • ராமானுஜரின் சீடர்.
  • வடஇந்தியாவின் முதல் பக்தி இயக்க துறவி.
  • வடஇந்தியாவில் பக்தி இயக்கத்தை பரப்பியவர்.
  • இவர் உருவாக்கிய அமைப்பு = பைராகி சம்பரதாயா.
  • இவரின் 2 கொள்கைகள் = கடவுள் மீது பரிபூரண அன்பு, மனித சகோதரத்துவம்.
  • இவரின் சீடர்கள் மொத்தம் = 12.
    • கபீர் – முஸ்லிம் நெசவாளர்
    • தன்னா – ஜாட் விவசாயி
    • பிபா – ராஜ்புத் இளவரசர்
    • சேனா – முடி வெட்டுபவர்
  • இவரின் போதனைகள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இவரின் படைப்புகள் (சமஸ்கிருதம்) = பஜா பாஸ்கரா, ராமர்சான் பதாட்டி
  • இவரின் படைப்புகள் (ஹிந்தி) = கியான்-லீலா, யோகா சிந்தாமணி
  • இவரின் சீடர் = கபீர்.
  • “தெற்கு மற்றும் வடக்கின் பக்தி இயக்கத்திற்கு இடையிலான பாலமாக செயல்பட்டவர்” = ராமானந்தர்.
  • தென்இந்தியாவில் இருந்து வடஇந்தியாவிற்கு பக்தி இயக்கத்தை எடுத்துச் சென்றவர்.
பக்தி இயக்க துறவிகள்
பக்தி இயக்க துறவிகள்

துளசிதாஸ்

  • இவரின் காலம் = கி.பி. 1544-1623
  • சற்குண துறவி
  • ராம பக்தி பிரிவைச் சேர்ந்த ஒரு இந்து துறவி.
  • அக்பரின் சமகாலத்தவர்.
  • இவரின் படைப்புகள் = ராம்சரிதமானஸ், கவிதாவாலி, கீதாவலி, பார்வதி மங்கள், சங்கி மங்கள், வினய பத்ரிகா, ஹனுமான் சாலிஸா.
  • வாரணாசியில், ஹனுமானுக்காக “சங்கத் மோச்சன்” என்னும் கோயிலை கட்டினார்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

நபதாசர்

  • இவரின் காலம் = 1570-1662 கி.பி
  • கி.பி.1570ல் குவாலியரில் பிறந்தவர்.
  • கண் பார்வை அற்றவர்.
  • இவரின் படைப்பு = பக்தமால் (பிரஜ் மொழியில் எழுதப்பட்டது)
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

சுர்தாஸர்

  • இவரின் காலம் = 1478-1583 கி.பி
  • வல்லபாச்சாரியாரின் சீடர்.
  • பார்வையற்ற துறவி
  • இவரின் படைப்பு = சூர்சாகர், சூர் சராவளி, சாகித்திய லகிரி
  • கிருஷ்ண பக்தி பிரிவைச் சேர்ந்தவர்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

மீராபாய்

  • பெண் துறவி. கிருஷ்ணா பக்தை.
  • இவரின் காலம் = 1498-1546 கி.பி.
  • இவர் மெர்டாவின் ரத்தோர் இளவரசி மற்றும் மேவார் ராணா சங்காவின் மருமகள் ஆவார்.
  • இவரின் கணவர் = போஜராஜன்.
  • இவரின் படைப்பு = படாவலி.
  • தனது வாழ்க்கையை கிருஷ்ணருக்காக அர்ப்பணித்தவர்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்
பக்தி இயக்க முக்கிய துறவிகள்
பக்தி இயக்க முக்கிய துறவிகள்

சைதன்யர்

  • இவரின் காலம் = கி.பி. 1486-1533
  • இவரின் இயற்பெயர் = விஸ்வம்பர்.
  • வங்காளத்தில் உள்ள நந்த்விபா பகுதியை சேர்ந்தவர்.
  • இவரின் குரு = சுவாமி ஈஸ்வரபூரி
  • “கௌடியா மகாபிரபு” என்றும் “சைதன்ய மகாபிரபு” என்றும் அழைக்கப்பட்டவர்.
  • “விஷ்ணுவின் அவதாரம்” என்று அவரது சீடர்களால் அழைக்கப்பட்டார்.
  • “வித்யாசாகர்” என்று அழைக்கப்பட்ட துறவி = சைதன்யர்.
  • இவர் உருவாக்கியது = வங்காள வைஷ்ணவ அமைப்பு (அல்லது) கௌரங் (கூடிய வைஷ்ணவம்)
  • இவரின் தத்துவம் = அச்சிந்தியா பேத அபேதாம் (மத்தியகௌடிய சம்பிரதாயம்)
  • சங்கீர்த்தனம் (அ) கடவுளின் புகழை பொது இடங்களில் பாடும் கீர்த்தனை முறையை அறிமுகம் செய்தவர் இவரே.
  • இவரின் படைப்பு = சிக்ஸா அஷ்டகா.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

சங்கர தேவர்

  • இவரின் காலம் = கி.பி. 1449-1568
  • இவர் நிறுவிய அமைப்பு = ஏக் ஷரன் சம்பிரதாயம் அல்லது மஹாபுருஷிய சம்பிரதாயம்.
  • இவரின் போதனைகள் = “பகவதி தர்மம்” என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

ஞானதேவர்

  • ஞானேஸ்வரா என்று அழைக்கப்பட்டார்.
  • இவரின் காலம் = 1271-1296 கி.பி
  • கிருஷ்ண மார்க்க பிரிவை சேர்ந்தவர்.
  • இவரின் புகழ்பெற்ற நூல் = பகவத்கீதைக்கு இவர் எழுதிய உரை, “ஞானேஸ்வரி அல்லது பவர்த்ததிப்கா”.
  • இவரின் மற்றொரு படைப்பு = அம்ருதானுபவம்.
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

நாமதேவர்

  • இவரின் காலம் = கி.பி. 1270-1350
  • இவர் தையல்காரர் ஆவார்.
  • சாதி வேறுபாடுகளை எதிர்த்தார்
  • வரகரி பிரிவை சேர்ந்தவர்.
  • இவர் எழுதியது = பக்திக் கவிதைகள் (“அபங்கங்ஸ்” என்பர்)

ஏக்நாதர்

  • இவரின் காலம் = 1533-1599 கி.பி
  • வரகரி பிரிவை சேர்ந்தவர்.
  • இவர் ராமாயணத்திற்கு எழுதிய உரை = பவர்த்த ராமாயணம்.
  • பாகவத புராணத்தின் 11வது புத்தகத்திற் உரை எழுதியுள்ளார். அதனை “ஏக்நதி பாகவதம்” என்பர்.

துக்காராம்

  • இவரின் காலம் = கி.பி. 1598-1650
  • இவர் தர்காரி மற்றும் வரகரி பிரிவை சேர்ந்தவர்.
  • முகலாய மன்னர் ஜகாங்கீர் காலத்தை சேர்ந்தவர்.
  • இவர் எழுதியது = பக்திக் கவிதைகள் (“அபங்கங்ஸ்” என்பர்)
  • சத்ரபதி சிவாஜியின் சமகாலத்தவர். அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

ராமதாஸர்

  • இவரின் காலம் = 1608-1681 கி.பி
  • தர்காரி பிரிவைச் சேர்ந்தவர்
  • இவரின் படைப்பு = தசபோதம்
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

புரந்தர் தாஸ்

  • இவரின் காலம் = 1480-1564 கி.பி
  • “கர்நாடக இசையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்
  • இந்தியாவில் பக்தி இயக்கம்

தியாகராஜா

  • இவரின் காலம் = 1767-1847 கி.பி
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த துறவி, கர்நாடக இசையமைப்பாளர்.
  • இவரின் புகழ்பெற்ற படைப்பு = பஞ்சரத்ன கிருதிகள் என்று அழைக்கப்படும் அவரது ஐந்து பாடல்கள்.

நர்சின் மேத்தா

  • குஜராத்தை சேர்ந்த துறவி.
  • கிருஷ்ண மார்க்கத்தை பின்பற்றியவர்
  • “ஹரிஜன்” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *