இராஜாஜி
இராஜாஜி வாழ்க்கை குறிப்பு
- ராஜாஜியின் இயற்பெயர் = சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி
- ஊர் = தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி
- பெற்றோர் = சக்கரவர்த்தி வெங்கடார்யா – சிங்காரம்மா
- மனைவி = அலர்மேலு மங்கம்மாள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இராஜாஜி அடைமொழிகள்
- ராஜாஜி
- மூதறிஞர் ராஜாஜி
- சி.ஆர்
- சேலத்து மாம்பலம் என்று அழைக்கப்பட்டவர் = இராஜாஜி
- “தமிழ்நாட்டு அறிவு” என்று அழைக்கப்பட்டவர் = ராஜாஜி (அழைத்தவர் = தமிழ்த்தென்றல் திரு.வி.க)
- “கதர் இயக்கத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் = ராஜாஜி
இராஜாஜி சிறுகதைகள்
- நிரந்தர செல்வம்
- பிள்ளையார் காப்பாற்றினார்
- கற்பனைக் கோடு
- தேவ்வனி
- முகுந்தன் பறையனான கதை
- கூன் சுந்தரி
- அறியாக் குழந்தை
- அன்னையும் பிதாவும்
- கண்ணன் பிழைத்தான்
- சர்ஜன் வாசுக்குட்டி
- திக்கற்ற பார்வதி
- மது சுமந்த மங்கை
நூல்கள்
- தமிழில் முடியுமா
- திண்ணை ரசாயனம்
- சக்கரவர்த்தித் திருமகன்
- வியாசர் விருந்து (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
- கண்ணன் காட்டிய வழி
- பஜகோவிந்தம்
- கைவிளக்கு
- உபநிஷதப் பலகணி
- வேதாந்த தீபம்
- சிசுபாலனம்
- அபேத வாதம்
- கண்ணன் காட்டிய வழி
- அரேபியர் உபதேச மொழிகள்
- குடி கெடுக்கும் கள்
- தாவரங்களின் இல்லறம்
- ரகுபதி ராகவ
- முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
- திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
- மெய்ப்பொருள்
- பக்திநெறி, வானதி பதிப்பகம், சென்னை.
- ஆத்ம சிந்தனை
- ஸோக்ரதர்
- பிள்ளையார் காப்பாற்றினார்
- ஆற்றின் மோகம்
- வள்ளுவர் வாசகம்
- ராமகிருஷ்ண உபநிஷதம்
- வேதாந்த தீபம்
இராஜாஜி குறிப்புகள்
- இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்
- அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்
- 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.
- 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
- 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
- மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர்.
- நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,”என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !” என்று பதிவு செய்தார்.
- புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி.
இராஜாஜி சிறப்புகள்
- காந்தியடிகள் ராஜாஜியை “தனது மனசாட்சியின் காப்பாளர்” என்றார்.
- காந்தியின் ‘மனச்சான்றுக் காவலர்’ ராஜாஜி
- ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர்.
- 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
- சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
- 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
- புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் இயற்றிய பாடலே.
- தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.
- ஜெயகாந்தன்
- சு.சமுத்திரம்
- கு.ப.ரா
- கல்கி
- அறிஞர் அண்ணா
- சிதம்பர ரகுநாதன்
- கி. இராஜ நாராயணன்
- மௌனி
- பி.எஸ்.ராமையா
- கு. அழகிரிசாமி