வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் ஆசிரியர் குறிப்பு

  • வல்லிக்கண்ணனின் இயற்பெயர் = ரா.சு. கிருஷ்ணசாமி
  • பெற்றோர் = ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, மகமாயி அம்மாள்
  • காலம் = நவம்பர் 12, 1920 – நவம்பர் 9, 2006
  • ஊர் = நெல்லை அருகே ராஜவல்லிபுரம்

புனைப்பெயர்

  • வல்லிக்கண்ணன்
  • ராசுகி
  • கோரநாதன்
  • நையாண்டி பாரதி
  • மிவாஸ்கி
  • வேதாந்தி
  • சொனா முனா
  • பிள்ளையார்
  • தத்துவதரிசி
  • அவதாரம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வல்லிக்கண்ணன் சிறப்பு பெயர்

  • “இலக்கிய பீஷ்மர்” என்று அழைக்கப்படுபவர் = வல்லிக் கண்ணன்
  • “இலக்கிய ரிஷி” என்று அழைக்கப்படுபவர் = வல்லிக் கண்ணன்

வல்லிக்கண்ணன் சிறுகதைகள்

  • சந்திர காந்தக்கல் (முதல் சிறுகதை)
  • நாட்டியக்காரி
  • தெருக்கூத்து (சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றது)
  • புன்னகையும் புதுநிலவும் (ஆனந்த விகடன் பரிசு)
  • பெரிய மனுஷி
  • கவிதை வாழ்வு
  • தத்துவ தரிசனம்
  • கல்யாணி
  • மத்தாப்பு சுந்தரி
  • ஓடிப் போனவள் கதை
  • ஆண் சிங்கம்
  • ராதை சிரித்தாள்
  • வாழ விரும்பியவன்
  • இருளடைந்த பங்களா
  • வல்லிக் கண்ணன் கதைகள்
  • அருமையான துணை
  • மனிதர்கள்
  • சுதந்திரப் பறவைகள்
  • கல்யாணி முதலிய கதைகள்
  • தோழி நல்ல தோழி தான்
  • சிவப்புக்கல் மூக்குத்தி

வல்லிக்கண்ணன்

கட்டுரைகள்

  • உவமை நயம்
  • கோயில்களை மூடுங்கள்!
  • அடியுங்கள் சாவுமணி
  • சினிமாவில் கடவுள்கள்
  • கொடு கல்தா
  • எப்படி உருப்படும்?
  • கேட்பாரில்லை
  • அறிவின் கேள்வி
  • விவாகரத்து தேவைதானா
  • நல்ல மனைவியை அடைவது எப்படி?
  • கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ?
  • கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?
  • முத்துக் குளிப்பு
  • புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி பரிசு பெற்றது)
  • பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
  • எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும்
  • சரஸ்வதி காலம்
  • ராகுல் சாங்கிருத்யாயன்
  • புதுமைப்பித்தன்
  • வாசகர்கள் விமர்சகர்கள்
  • வல்லிக் கண்ணனின் போராட்டங்கள்
  • தமிழில் சிறு பத்திரிகைகள்
  • தீபம் யுகம்
  • தமிழில் சிறு பத்திரிக்கைகள்
  • பாரதிதாசனின் உவமை நயம்

வரலாறு

  • நம் நேரு
  • விஜயலட்சுமி பண்டிட்

குறுநாவல்

  • ஒய்யாரி
  • அவள் ஒரு எக்ஸ்ட்ரா
  • அத்தை மகள்
  • முத்தம்
  • விடிவெள்ளி
  • மன்னிக்கத் தெரியாதவர்

கடிதங்கள்

  • வல்லிக் கண்ணன் கடிதங்கள்

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • கடலில் நடந்தது
  • லால்ஸ்டாய் கதைகள்
  • கார்க்கி கட்டுரைகள்
  • சின்னஞ்சிறு பெண்
  • தாத்தாவும் பேரனும்
  • ஆர்மீனியன் சிறுகதைகள்
  • சிறந்த பதின்மூன்று சிறுகதைகள்

கவிதை நூல்கள்

  • அமர வேதனை

நாவல்கள்

  • செவ்வானம்
  • சகுந்தலா
  • வசந்தம் மலர்ந்தது
  • வீடும் வெளியும்
  • ஒரு வீட்டின் கதை
  • நினைவுச் சரம்
  • அலைமோதும் கடல் ஓரத்தில்
  • இருட்டு ராஜா
  • குஞ்சாலாடு

நாடகம்

  • நாசகாரக் கும்பல்
  • விடியுமா?

நூல்கள்

  • அன்னக்கிளி
  • எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும் (தமிழ் வளர்ச்சி பரிசு)

வாழ்க்கை வரலாறு

  • புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
  • ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
  • எழுத்து சி.சு. செல்லப்பா
  • எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி
  • தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்
  • நம் நேரு
  • விஜயலஷ்மி

தன் வரலாறு நூல்கள்

  • வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் – 1988
  • காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்) – 1980
  • வல்லிக்கண்ணன் கடிதங்கள் – 1999
  • வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு) – 2001
  • நிலைபெற்ற நினைவுகள் – 2005

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் குறிப்புகள்

  • அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத் துவங்கினார்.
  • ராஜவல்லி புரத்தில் இருந்துகொண்டு ‘இதய ஒலி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தயாரித்தார்.
  • பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர்.

வல்லிக்கண்ணன் சிறப்புகள்

  • இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது.
  • இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன் தான்.
  • “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் சாகித்திய அகாதமி பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.
  • “வல்லிக்கண்ணனுக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்” என்று வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.
  • வல்லிக்கண்ணனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

 

 

 

Leave a Reply