நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகம் நூல் குறிப்பு
- நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது.
- பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
- இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
- கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கலம்பகம் குறிப்பு
- கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.
- கலம் + பகம் = கலம்பகம்.
- கலம் – பன்னிரண்டு; பகம் ஆறு.
- பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் ( புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம் ) கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
- கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
பாடாண் திணை
- நந்திக் கலம் பகம் நூலின், பாட்டுடைத் தலைவனான “நந்திவர்மனின்” வீரச் செயல்கள் போற்றப்படுவதால், நந்திக் கலம்பகம் நூலில் பயின்று வரும் திணை = பாடாண் திணை ஆகும்.
சொற்பொருள்
- புயல் – மேகம்
- பனண – மூங்கில்
- பகரா – கொடுத்து
- பொருது – மோதி
- நிதி – செல்வம்
- புனல் – நீர்
- கவிகை – குடை
இலக்கணக்குறிப்பு
- பொழிதருமணி – வினைத்தொகை
- பணைதருபருமணி – வினைத்தொகை
- வருபுனல் – வினைத்தொகை
- நிதிதருகவிகை – வினைத்தொகை
- இவை இவை – அடுக்குத் தொடர்
- தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
- பொருள் இலக்கணம்
- சீறாப்புராணம்
- காந்தியம்
- புறப்பொருள்
- நிறுத்தற்குறிகள்
- கலித்தொகை