சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள்

  • கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
  • கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர்.

பக்தி என்றால் என்ன

  • பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது.
  • கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது.

பக்தி இலக்கியங்களின் தோற்றம்

  • பக்தி இலக்கிய காலத்தில் இயற்றமிழ்ப் பாடல்கள் பண்ணோடு இயைந்து இசைத் தமிழ்ப்பாடல்களாக மாறின.
  • கற்றோர் நாவில் மட்டும் நடனமாடிய தமிழ், கல்லாதார் நெஞ்சிலும் களிநடனம் புரிந்தது.
  • வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபு தோன்றியது.

பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம்

  • சொல் வளமும் உணர்ச்சிப் பெருக்கும், இசை இனிமையும் சேர்ந்து தமிழ் இலக்கியம் புது மெருகு பெற்றது.
  • இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது.
  • பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது.
  • இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன.
  • சங்க இலக்கியத்தில் மாந்தரின் காதல் வாழ்வு கற்பனை கலந்த பாடல்களாகப் பாடப்பட்டது.
  • பின்னர் இந்நிலை மாறி, தெய்வத்தின்மீது கொண்ட காதலைப் பாடும் பாடல்களாக வளர்ச்சிபெற்றன.
  • அரசர்களின் வீரம் மற்றும் கொடைகளைப் பாடிய பாடல்கள், கடவுளின் திருவிளையாடல்களையும் அருட்செயல்களையும் பாடும் பாடல்களாக மாறின.
  • கற்பனைக் காதலுக்குப் பின்னணியாக இயற்கைச் சூழல் வருணிக்கப்பட்டது போலவே கடவுளிடம் செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் கோவில் தலங்களைச் சூழ்ந்த ஊர்களின் இயற்கையழகைப் பாடும் நிலை உருவானது.

தமிழகத்தில் பக்திநெறி

  • சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் இயற்கையை முன்நிறுத்திய வழிபாட்டு முறைகளும் (பராய்க்கடன், வெறியாட்டு போன்ற சடங்குகள்) நம்பிக்கைகளும் இருந்தன.
  • அக்காலகட்டத்தில் வைதிக நெறியும், இதனை மறுத்த சமணபௌத்த நெறிகளும் தமிழகத்தில் பரவின.
  • சமண பௌத்த சமயங்கள், “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன;
  • இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனிதன் மாறவேண்டும்” என்று வலியுறுத்தின. சமயப் பெரியோர் அருளுணர்வுடையோராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர்.
  • மேலும், “பிறவா நிலையை அடைவதற்குத் துறவறமே சிறந்த வழி என்ற அறவியல் கருத்து நிலவியது.
  • உலகில் உள்ள நிலையில்லாத இன்பங்களை ஒதுக்கி, நிலையான வீடுபேற்றை நாடுவதே கடமை என்று கருதும் நிலை உருவானது..
  • இச்சூழலில், நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம்; இறைவன் அன்பின் வடிவானவன்; அன்பு ஒன்றே அவனை அடையும் வழி என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர்.
  • ஊர்கள் தோறும் கோவில்களுக்குச் சென்று இசைப்பாடல்களால் மனமுருக இறைவனைப் பாடிப் பரவினர்.
  • அப்பாடல்கள், கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுமாறு எளிய இனிய தமிழில் இருந்தன.
  • இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர்.
  • இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
    • ஆண்டான் (அடிமை) = தாச மார்க்கம்
    • தந்தை = சற்புத்திர மார்க்கம்
    • தோழன் = சக மார்க்கம்
    • நாயகன் = ஞான மார்க்கம்

அடிமை நெறி

  • திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியை கொண்டிருந்தனர்

பிள்ளைமை நெறி

  • திருஞானசம்பந்தர் பிள்ளைமை நெறியை கொண்டிருந்தார்
  • பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதித்தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

தோழமை நெறி

  • சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியை பெற்றிருந்தனர்

நாயகன் நாயகி நெறி

  • மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியை கொண்டனர்.
  • பெரியாழ்வார் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.
சமய இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்

பன்னிரு திருமுறைகள்

  • சிவனைத் தலைவனாகக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்பர்.

பன்னிரு திருமுறைகள்

திருமுறைகள் நூல்கள்

ஆசிரியர்கள்

முதல் திருமுறை

இரண்டாம் திருமுறை

மூன்றாம் திருமுறை

தேவாரம் திருஞானசம்பந்தர்
நான்காம் திருமுறை

ஐந்தாம் திருமுறை

ஆறாம் திருமுறை

தேவாரம்

திருநாவுக்கரசர்

ஏழாம் திருமுறை

தேவாரம் சுந்தரர்
எட்டாம் திருமுறை திருவாசகம்

திருகோவையார்

மாணிக்கவாசகர்

ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

திருமாளிகைத்தேவர் உட்பட 9 பேர்
பத்தாம் திருமுறை திருமந்திரம்

திருமூலர்

பதினோராம் திருமுறை

40 நூல்களின் தொகுப்பு காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர்
பனிரெண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)

சேக்கிழார்

சமய இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்

நாலாயிரத் திவ்யபிரபந்தம்

  • திருமாலைத் தலைவனாகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்று அழைக்கப்பட்டன.

பன்னிரு திருமுறைகளும் ஆழ்வார்களும்

வரிசை எண் ஆழ்வார்கள்

நூல்கள்

1

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
2 பூதத்தாழ்வார்

இரண்டாம் திருவந்தாதி

3

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
4 திருமழிசையாழ்வார்

நான்காம் திருவந்தாதி

திருச்சாந்த விருத்தம்

5

நம்மாழ்வார் திருவிருத்தம்

திருவாசிரியம்

பெரிய திருவந்தாதி

திருவாய்மொழி

6 குலசேகராழ்வார்

பெருமாள் திருமொழி

7

தொண்டரடிப் பொடியாழ்வார் திருமலை

திருப்பள்ளியெழுச்சி

8 பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

9

ஆண்டாள் நாச்சியார் திருமொழி

திருப்பாவை

10 திருப்பாணாழ்வார்

திருப்பதிகம்

11

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருக்குறுந்தாண்டகம்

திருநெடுந்தாண்டகம்

திருவெழு கூற்றிருக்கை

சிறிய திருமடல்

பெரிய திருமடல்

12 மதுரகவியாழ்வார்

திருப்பதிகம்

இஸ்லாமியப் பாடல்கள்

  • முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது.
  • இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர்.
  • இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன.

கிறித்துவ இலக்கியங்கள்

  • பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர்.
  • அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர்.
  • அவர்கள், பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர்.
  • தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பினர்.
  • இதன் விளைவாக கிறித்துவ இலக்கியங்களும் தமிழில் பல்கிப்பெருகின.

சமயங்களின் பொதுநீதி

  • சமயங்களின் பொதுநீதி பற்றி “குன்றக்குடி அடிகள்” கூறுவதாவது,
    • நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு.
    • சுவையுடையனவாக, ஆனால் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல்.
    • மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர்.
    • மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம்.

 

 

 

1 thought on “சமய இலக்கியங்கள்”

Leave a Reply