வடதிசையில் இருந்து வீசுகின்ற காற்று வாடையாகும். கூதிர்பருவத்தில் வீசும் வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்து தனிமைத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு நெடுவாடை ஆயிற்று. படையோடு சென்று பாசறையில் தங்கி, இன்பத்தில் மனம் செலுத்தாமல், தான் மேற்கொண்ட வினையினை முடிக்க வாய்ப்பை இருந்ததினால் தலைவனுக்கு நல்வாடை ஆயிற்று. எனவே இந்நூல் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றது.
நெடுநல்வாடை என்னும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் = தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான்
இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
இந்நூலில் 188 அடிகளை கொண்டுள்ளது
இந்நூலில் பயிலும் பா = ஆசிரியப்பா
பத்துப்பாட்டில் ஆகம, புறமா என்று கருது வேறுபாட்டைத் தோற்றுவித்த ஒரே நூல் நெடு நல்வாடை ஆகும்
நெடு நல்வாடைக்கு சிறந்த உரை எழுதியவர் = நச்சினார்கினியர்
நூல் சிறப்பு
“பத்துப்பாட்டிலே மிகச் சிறந்த நூல்” எனப் போற்றப்படுகிறது
இவர் இயற்றிய மற்றொரு நூல் = திருமுருகாற்றுப்படை. இந்நூலின் வேறு பெயர் “புலவராற்றுப்படை” மற்றும் “முருகு”.
இவர் பாடிய பாடல்கள் அகநானூறு முதலிய தொகைநூல்களிலும் உள்ளது.
இவர் அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள் மற்றும் புறநானூற்றில் 3 பாடல்களை பாடியுள்ளார்
திருவள்ளுவ மாலையில் “தானே முழுதுணர்ந்து” எனும் வெண்பாவை பாடியுள்ளார்
தமிழின் முதல் உரையாசிரியர் நக்கீரரே
தமிழின் முதல் உரை நூல் = இறையனார் களவியல் உரை
இறையனார் களவியலுக்கு நிறைய பேர் உரை எழுதி உள்ளனர். அவற்றில் சிறந்தது நக்கீரரின் உரையே என்று நிரூபித்தவர் = உப்பூரிக் குடிகிளார் மகனார் உருத்திரசன்மனார் ஆவார்
நக்கீரரின் சிறப்பு
கடைசங்கதின் தலைமைப் புலவர் இவராவார்
இவர் நல்லிசைப்புலவர் ஆவார்
இறையனார் களவியலுக்கு சிறந்த உரை எழுதி உள்ளார்
இறைவன் சிவபெருமான் எழுதிய “அகப்பொருள் (அ) களவியல்” என்னும் நூலிற்கு இவர் உரை எழுதினார். உரையின் சிறப்பினால் இந்நூல் “இறையனார் களவியல் உரை” எனப்படுகிறது
தமிழின் முதல் உரையாசிரியர் நக்கீரரே
சிவப்பிரகாசர் = “இலக்கியப் புலவர் சிங்கம்” எனப் போற்றுகிறார்