பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ் க்கணக்கு நூல்கள் எனப்படும்.
- இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைப்பர்.
- பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல்
அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும் – பன்னிரு பாட்டியல் |
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்பதை கூறும் பாட்டு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு |
- பதினெண் கீழ் க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் = 11 (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் = 6 (கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் = 1 (களவழி நாற்பது)
- நீதி நூல்களுள் சிறியது = இன்னா நாற்பது
- நீதி நூல்களுள் பெரியது = திருக்குறள்
- அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது
- அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது
- இரட்டை அறநூல்கள் = இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- திருக்குறள் தவிர ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட “சங்கம் மருவிய” காலத்தை சார்ந்தவை
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = 11 அற நூல்கள் + 6 அக நூல்கள் + 1 புற நூல்
- கீழ்க்கணக்கில் கைந்நிலை நூலை ஏற்காதவர்கள் இந்நிலை எனும் நூலைக் கீழ்க்கணக்கு நூலாகக் கொண்டு கீழ்க்கணக்கில் அற நூல்கள் 12 என்றும், அக நூல்கள் 5 என்றும் கூறுவர்
- கீழ்க்கணக்கு அற நூல்கள் 12 மற்றும் பிற்கால நீதி நூல்கள் 10 (நீதி நூல் கொத்து), பாரதியார், பாரதிதாசன், ஆத்திச்சூடி ஆகியவை முக்கிய தமிழ் நீதி நூல்கள் ஆகும்.
- மருந்து பெயரில் அமைந்த நூல்கள் = திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி
- திரிகடுக மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி
- பஞ்சமூல மருந்து பொருட்கள் = சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, பெருவழுதுணை, கண்டங்கத்திரி
- ஏலாது மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்
- திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி நூல்கள் முறையே பாடல் தோறும் 3, 5, 6 கருத்துக்கள் கொண்டவை
- நீதி நூல் கொத்து = 10 நூல்கள் (ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலகநீதி, அறநெறி சாரம், அருங்கலச் செப்பு)
- அவ்வையார் எழுதிய நீதிநூல்கள் = ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
- அதிவீரராம பாண்டியன் எழுதியது = வெற்றிவேற்கை
- குமரகுருபரர் எழுதியது = நீதிநெறி விளக்கம்
- சிவப்பிரகாசர் எழுதியது = நன்னெறி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
எண் | நூல் | பொருள் | பாடல் | ஆசிரியர் |
---|---|---|---|---|
1 | நாலடியார் | அறம் | 400 | சமண முனிவர்கள் |
2 | நான்மணிக்கடிகை | அறம் | 106 | விளம்பிநாகனார் |
3 | இன்னா நாற்பது | அறம் | 40 | கபிலர் |
4 | இனியவை நாற்பது | அறம் | 40 | பூதஞ்சேந்தனார் |
5 | திருக்குறள் | அறம் | 1330 | திருவள்ளுவர் |
6 | திரிகடுகம் | அறம் | 100 | நல்லாதனார் |
7 | ஆசாரக்கோவை | அறம் | 100 | பெருவாயில் முள்ளியார் |
8 | பழமொழி நானூறு | அறம் | 400 | முன்றுறை அரையனார் |
9 | சிறுபஞ்சமூலம் | அறம் | 102 | காரியாசான் |
10 | முதுமொழிக் காஞ்சி | அறம் | 100 | கூடலூர் கிழார் |
11 | ஏலாதி | அறம் | 80 | கணிமேதாவியார் |
12 | கார் நாற்பது | அகம் | 40 | கண்ணன் கூத்தனார் |
13 | ஐந்திணை ஐம்பது | அகம் | 50 | மாறன் பொறையனார் |
14 | ஐந்திணை எழுபது | அகம் | 70 | மூவாதியார் |
15 | திணைமொழி ஐம்பது | அகம் | 50 | கண்ணன் சேந்தனார் |
16 | திணைமாலை நூற்றைம்பது | அகம் | 150 | கணிமேதாவியார் |
17 | கைந்நிலை | அகம் | 60 | புல்லாங்காடனார் |
18 | களவழி நாற்பது | புறம் | 40 | பொய்கையார் |
18 | இன்னிலை | புரம் | 45 | பொய்கையார் |
nice
மிகவும் பயனுள்ள்தாகவும் தமிழைக் கண்டு வியப்பாகவும் இருந்தது. நன்றி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை 👍👍👍
அருமை
தமிழின் பெருமை
Nalla munnetram tamil language
தமிழ் நல்ல பயனுள்ள வகையில் தகவல்கள் இருந்தது.தமிழ் நல்ல முறையில் அனைவருக்கும் பயனடைய வேண்டும்.