பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்

  • இவரின் இயற்பெயர் = சூரியநாராயணர்
  • “திராவிட சாஸ்த்ரி” எனப் போற்றப்படுபவர் = பரிதிமாற்கலைஞர் ஆவார்
  • இவரை “திராவிட சாஸ்த்ரி” என்று அழைத்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
  • இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார்
  • இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம்
  • எப்.ஏ (F.A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார்
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்
  • 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
  • இவரின் நூல்கள்,
    • கலாவதி (நாடக நூல்)
    • ரூபாவதி (நாடக நூல்)
    • மான விஜயம் (களவழி நாற்பது நூலை தழுவி எழுதப்பட்டது)
    • நாடகவியல் (நாடக இலக்கண நூல்)
    • தனிப்பாசுரத்தொகை

பரிதிமாற்கலைஞர்

 

பரிதிமாற்கலைஞர்

  • இவரின் “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது
  • “ஞானபோதினி” இதழ் = மு.சி.பூர்ணலிங்கம் என்பவருடன் இணைந்து இவர் நடத்திய இதழ்
  • தமிழை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன் முதலில் தன பேச்சின் மூலம் கூறியவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது
  • இவரின் இயற்பெயரான “சூரியநாராயணர்” என்ற வடமொழிப் பெயரை தமிழில் “பரிதிமாற் கலைஞர்” என்று பெயர் மாற்றம் செய்துக் கொண்டார்
  • இவர் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 

“பரிதிமாற் கலைஞர் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்”

 

 

Leave a Reply