பா இயற்றப் பழகலாம்
பா இயற்றப் பழகலாம்
- சங்கம் மருவிய காலத்தில் இருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின.
- வெண்பா வடிவில் பெருமளவு தோன்றிய இலக்கியங்கள் = நீதி இலக்கியங்கள்
வெண்பா என்றால் என்ன
- சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும்.
- வெண்பாவின் ஓசை = செப்பலோசை
வெண்பா எழுதும் முறை
- ஏனைய பாக்களை விட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா.
- இதனாலேயே வெண்பாவை “வன்பா” என்பர்.
- வெண்பாவின் இன்றியமையாத விதி = வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும்
- வெண்பாவிற்கான தளை = வெண்டளை
வெண்பாவின் தளைகள்
- வெண்பாவிற்கான தலைகள் 2 வகைப்படும்
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
தளைத்தல்
- தளைத்தல் என்பதன் பொருள் = கட்டுதல், பிணித்தல்
- சீர்கள் வெண்டளையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது வெண்பா.
- “மா முன் நிரை – விளம் முன் நேர் – காய் முன் நேர்” = என்பதே வெண்பாவிற்கான எளிய தளை இலக்கணம் ஆகும்.
- மா முன் நிரை, விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை
- காய் முன் நேர் = வெண்சீர் வெண்டளை
- மா, விளம் = ஈரசைச்சீர் ஆகும். காய் = மூவசைச்சீர் ஆகும்
சீர்
- முதற்சீர் மாச்சீர்என்றால் = வரும் சீரின் முதல் அசை நிறையாக இருக்க வேண்டும்
- முதற்சீர் “விளச்சீர் அல்லது காய்ச்சீர்” என்றால் = வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும்
- வரும் சீரின் முதல் ஆசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்
- ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு = நாள், மலர், காசு, பிறப்பு
- நாள், மலர் = ஒரைச்சீர்கள்
- காசு, பிறப்பு = குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்
- ஈற்று அயற்சீர், மாச்சீர் வந்தால் = மலர் (அல்லது) பிறப்பு வர வேண்டும்
- விளச்சீர், காய்ச்சீர் வந்தால் = நாள் (அல்லது) காசு வரும்.
வெண்பாவின் பொது இலக்கணம்
- இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்
- ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்
- ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்
- ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
வெண்பா வகைகள்
- வெண்பா 7 வகைப்படும். அவை,
- குரள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- பஃறொடை வெண்பா
- கலிவெண்பா
வெண்பா அடிவரையறை
இரண்டடி வெண்பா |
குறள் வெண்பா |
மூன்றடி வெண்பா |
நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா |
நான்கடி வெண்பா |
நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா |
நான்கடி முதல் 12 அடி வரை |
பஃறொடை வெண்பா |
13 அடி முதல் அதற்கு மேற்பட்ட |
கலிவெண்பா |
நேரிசை வெண்பா என்றால் என்ன
- “நாற்சீர் – முச்சீர் – இடையில் தனிச்சீர்” = நேரிசை வெண்பாவில் இலக்கணம் ஆகும்.
- தனிச்சீர் = இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், 2-வது அடியின் ஈற்றுச் சீராகத் தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர்.
- பாட்டின் முதற் சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.
- முதல் 2 அடி ஓர் எதுகையாகவும், மற்ற 2 அடி ஓர் எதுகையாகவும், நான்கு அடிகளும் ஓர் எதுகையை கொண்டும் வரும்.
இன்னிசை வெண்பா என்றால் என்ன
- நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா ஆகும்.
- முதல் 3 அடிகளில் = நான்கு நான்கு சீர்கள்
- இறுதி அடி = 3 சீர்கள்
- தனிச்சீர் வராது
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- பா இயற்றப் பழகலாம்
- பா இயற்றப் பழகலாம்
- பா இயற்றப் பழகலாம்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்