பா இயற்றப் பழகலாம்

பா இயற்றப் பழகலாம்

பா இயற்றப் பழகலாம்

  • சங்கம் மருவிய காலத்தில் இருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின.
  • வெண்பா வடிவில் பெருமளவு தோன்றிய இலக்கியங்கள் = நீதி இலக்கியங்கள்

வெண்பா என்றால் என்ன

  • சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும்.
  • வெண்பாவின் ஓசை = செப்பலோசை

வெண்பா எழுதும் முறை

  • ஏனைய பாக்களை விட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா.
  • இதனாலேயே வெண்பாவை “வன்பா” என்பர்.
  • வெண்பாவின் இன்றியமையாத விதி = வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும்
  • வெண்பாவிற்கான தளை = வெண்டளை

வெண்பாவின் தளைகள்

  • வெண்பாவிற்கான தலைகள் 2 வகைப்படும்
    • இயற்சீர் வெண்டளை
    • வெண்சீர் வெண்டளை

தளைத்தல்

பா இயற்றப் பழகலாம்

  • தளைத்தல் என்பதன் பொருள் = கட்டுதல், பிணித்தல்
  • சீர்கள் வெண்டளையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது வெண்பா.
  • “மா முன் நிரை – விளம் முன் நேர் – காய் முன் நேர்” = என்பதே வெண்பாவிற்கான எளிய தளை இலக்கணம் ஆகும்.
    • மா முன் நிரை, விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை
    • காய் முன் நேர் = வெண்சீர் வெண்டளை
  • மா, விளம் = ஈரசைச்சீர் ஆகும். காய் = மூவசைச்சீர் ஆகும்

பா இயற்றப் பழகலாம்

சீர்

  • முதற்சீர் மாச்சீர்என்றால் = வரும் சீரின் முதல் அசை நிறையாக இருக்க வேண்டும்
  • முதற்சீர் “விளச்சீர் அல்லது காய்ச்சீர்” என்றால் = வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும்
  • வரும் சீரின் முதல் ஆசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்

பா இயற்றப் பழகலாம்

  • ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு = நாள், மலர், காசு, பிறப்பு
    • நாள், மலர் = ஒரைச்சீர்கள்
    • காசு, பிறப்பு = குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்
  • ஈற்று அயற்சீர், மாச்சீர் வந்தால் = மலர் (அல்லது) பிறப்பு வர வேண்டும்
  • விளச்சீர், காய்ச்சீர் வந்தால் = நாள் (அல்லது) காசு வரும்.

வெண்பாவின் பொது இலக்கணம்

  1. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்
  2. ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்
  3. ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்
  4. ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

வெண்பா வகைகள்

  • வெண்பா 7 வகைப்படும். அவை,
    1. குரள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. இன்னிசை வெண்பா
    4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
    5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
    6. பஃறொடை வெண்பா
    7. கலிவெண்பா

வெண்பா அடிவரையறை

பா இயற்றப் பழகலாம்

இரண்டடி வெண்பா

குறள் வெண்பா
மூன்றடி வெண்பா

நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா

நான்கடி வெண்பா

நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
நான்கடி முதல் 12 அடி வரை

பஃறொடை வெண்பா

13 அடி முதல் அதற்கு மேற்பட்ட

கலிவெண்பா

நேரிசை வெண்பா என்றால் என்ன

பா இயற்றப் பழகலாம்

 

  • “நாற்சீர் – முச்சீர் – இடையில் தனிச்சீர்” = நேரிசை வெண்பாவில் இலக்கணம் ஆகும்.
  • தனிச்சீர் = இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், 2-வது அடியின் ஈற்றுச் சீராகத் தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர்.
  • பாட்டின் முதற் சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.
  • முதல் 2 அடி ஓர் எதுகையாகவும், மற்ற 2 அடி ஓர் எதுகையாகவும், நான்கு அடிகளும் ஓர் எதுகையை கொண்டும் வரும்.

இன்னிசை வெண்பா என்றால் என்ன

பா இயற்றப் பழகலாம்

  • நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா ஆகும்.
  • முதல் 3 அடிகளில் = நான்கு நான்கு சீர்கள்
  • இறுதி அடி = 3 சீர்கள்
  • தனிச்சீர் வராது

 

 

 

 

Leave a Reply