புணர்ச்சி
புணர்ச்சி என்றால் என்ன
- நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும்.
இயல்புப்புணர்ச்சி என்றால் என்ன
- இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி எனப்படும்.
- எ.கா:
-
- பொன் + வளையல் = பொன்வளையல்.
-
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
விகாரப்புணர்ச்சி என்றால் என்ன
- இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர்.
- எ.கா:
-
- தோன்றல் விகாரம் – வாழை + பழம் = வாழைப்பழம்
- கெடுதல் விகாரம் – மரம் + வேர் = மரவேர்.
- திரிதல் விகாரம் – பொன் + குடம் = பொற்குடம்
-
திசைப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன
- முதன்மைத் திசைகள் = நான்கு. அவை = கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
- திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.
- எ.கா:
-
- வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
- வடக்கு + மேற்கு = வடமேற்கு
-
- வடக்கு என்னும் நிலைமொழி கிழக்கு, மேற்கு என்னும் வருமொழிகளோடு சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு நீங்கிப் புணர்ந்தது.
- எ.கா;
-
- தெற்கு + மேற்கு = தென்மேற்கு
- தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
-
- தெற்கு என்னும் திசைப்பெயரோடு மேற்கு, கிழக்கு என்னும் திசைப்பெயர்கள் சேரும்போது, நிலைமொழியின் இறுதியிலுள்ள கு நீங்கும்; பிறகு றகர மெய் னகரமாகிப் புணரும்.
திசைப்பெயரோடு பிற பெயர்களின் புணர்ச்சி
- வடக்கு + மலை = வடமலை.
-
- இதில் நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு ஆகியன இரண்டும் நீங்கிப் புணர்ந்தது.
-
- தெற்கு + திசை = தென்திசை.
-
- இதில் நிலைமொழியின் இறுதியாகிய கு நீங்கியது; அதன் அயல் எழுத்தான ற் – ன் ஆக மாறிப் புணர்ந்தது.
-
- கிழக்கு + நாடு = கீழ்நாடு.
-
- இங்கு நிலைமொழியின் இறுதியாகிய க்கு நீங்கி, ழ என்னும் உயிர்மெய்யில் ( ழ் அ ) அகரம் நீங்கி, கி என்னும் முதல் எழுத்து கீ என நீண்டு, கீழ் + நாடு கீழ்நாடு எனப் புணர்ந்தது.
-
- மேற்கு + நாடு = மேல்நாடு, மேனாடு.
-
- நிலைமொழியில் கு நீங்கியது.
- அதன் அயலெழுத்தான ற் ல் ஆக மாறி மேல் + நாடு = மேல்நாடு எனவும், ற் – ன் ஆக மாறி மேல் + மேனாடு எனவும் இருவகையில் புணர்ந்தன.
-
நன்னூல்
திசையொடு திசையும் பிறவும் சேரின் நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற – நன்னூல் |
பண்புப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன
- நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப் பெயர்களாம்.
- செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல்வனவும் இவற்றுக்குரிய எதிர்ச்சொற்களும் இவைபோன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.
- கருவிழி = கருமை + விழி – கரு + விழி = கருவிழி
-
- ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து மை நீங்கிப் புணர்ந்தது.
-
- பெரியன் = பெருமை + அன் பெரு + அன்; பெரி + அன்; பெரி + ய் + அன் = பெரியன்.
-
- ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து, மை நீங்கிப் பின் பெரு என்பதன் இறுதி உகரம் இடைஉகரம் இஆதல் எனும் விதிப்படி பெரி யாகிப் பின் யகர உடம்படுமெய் பெற்றுப் பெரி + ய் + அன் என்பது ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, ய் + அ = ய என்றாகிப் பெரியன் எனப் புணர்ந்தது.
-
- பாசிலை = பசுமை + இலை – பசு + இலை; பாசு + இலை; பாச் + இலை = பாசிலை.
-
- நிலைமொழி ஈறுகெட்டு ஆதி நீடல் என்னும் விதிப்படி, பாசு + இலை என்றாகியது. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது.
-
- பைங்கூழ் = பசுமை + கூழ் – பசு + கூழ், பைசு + கூழ், பை + கூழ்; பைங் + கூழ் = பைங்கூழ்
-
- ‘ஈறுபோதல்’ என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு மை நீங்கியது. (பசு + கூழ்) ‘அடிஅகரம்’ ஐ ஆதல் எனும் விதிப்படி ப – பை ஆனது.
- ‘இனையவும்’ என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது.
- ‘இனமிகல்’ என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.
-
- சிற்றோடை = சிறுமை + ஓடை – சிறு + ஓடை; சிற்று + ஓடை; சிற்ற்+ ஓடை = சிற்றோடை.
-
- ‘ஈறுபோதல்’ என்னும் விதிப்படி மை கெட்டது. ‘தன்னொற்று இரட்டல்’ என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது.
- பின் ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.
-
- சேதாம்பல் = செம்மை + ஆம்பல் – செம் + ஆம்பல்; சேம் + ஆம்பல்; சேத் + ஆம்பல் = சேதாம்பல்
-
- ‘ஈறுபோதல்’ விதிப்படி, மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று.
- பின்னர் ‘ஆதி நீடல்’ விதிப்படி – சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
-
- கருங்குயில் = கருமை + குயில் – கரு + குயில் = கருங்குயில்.
-
- ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது. ‘இனமிகல்’ என்னும் விதிப்படி வருமொழி ககரத்திற்கு ( கு ) இனமான மெல்லெழுத்து ங் மிகுந்து, கருங்குயில் எனப் புணர்ந்தது.
-
மகரஈற்றுப் புணர்ச்சி என்றால் என்ன
- மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும்பொழுது, இறுதி மகரம் (ம்) கெட்டு, உயிரீறுபோல நின்று, உயிர்முதல் மொழியோடு உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
- எ.கா:
-
- மரம் + அடி; மர + அடி; மர + வ் + அடி = மரவடி.
-
- நிலைமொழியின் மகர ஈறுகெட்டு வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணரும்.
- எ.கா:
-
- வட்டம் + கல் = வட்டக்கல் எனப் புணரும்.
-
- நிலைமொழியின் மகரஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.
- எ.கா:
-
- நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான்.
-