பொருள் மயக்கம்

பொருள் மயக்கம்

பொருள் மயக்கம்

  • எழுதும்போதோ பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவது படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்

இடைவெளியும் பொருள் வேறுபாடும்

பொருள் மயக்கம்

எம் மொழி யார்க்கும் எளிது

எம்மொழியார்க்கும் எளிது
அப் பாவின் நலங் காண்க

அப்பாவின் நலங்காண்க

ஐந்து மாடிவீடு

ஐந்துமாடி வீடு
அன்றுமுதல் பாடம் கற்றோம்

அன்று முதல்பாடம் கற்றோம்

வல்லின மெய்களும் பொருள் வேறுபாடும்

பொருள் மயக்கம்

பிட்டுத் தின்றான்

பிட்டு தின்றான்
உள்ளக் கருத்து

உள்ள கருத்து

ஈட்டிக் கொண்டு வந்தான்

ஈட்டி கொண்டு வந்தான்

காற்புள்ளியும் பொருள் மயக்கமும்

  • இயல்பாக உரையாடும் போது பொருள் நிலையில் பெரும்பாலும் குழப்பம் ஏற்படுவதில்லை.
  • ஆனால் எழுதும் பொது காற்புள்ளி இடாமல் எழுதினாலோ இடம் மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறுபொருளைத் தந்துவிடும்.
    • அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள்
    • அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்
  • முதல் தொடரில் அந்தப் பெண் தனது அக்காள் வீட்டிற்கு சென்றால் எனவும், 2-வது தொடரில் அந்தப் பெண்ணின் அக்காள், அவள் வீட்டிற்கு சென்றால் எனவும் பொருள் மாறுபடுகிறது.

இடைச்சொற்களும் விகுதிகளும், சொல்லுருபுகளும்

  • தமிழில் உள்ள சில இடைச்சொற்கள், சொல்லுருபுகள், விகுதிகள் ஆகியவற்றைத் தொடர்களில், சொற்களில் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் பொருள் வேறுபாடு தோன்றுகிறது.
 

விடும்

தன் தவற்றினை உணர்ந்துவிடுவானாயின் நன்று

தன் தவற்றினை உணர்ந்து விடுவானாயின் நன்று

 

தன்

பாண்டியன்தன் கவிதையைப் படித்தான்

பாண்டியன் தன் கவிதையைப் படித்தான்

 

தான்

கண்ணன்தான் எழுதுவதாகச் சொன்னான்

கண்ணன் தான் எழுதுவதாகச் சொன்னான்

 

பற்றி

குகன் இராமனைப்பற்றிக் கூறினான்

குகன் இராமனைப் பற்றிக் கூறினான்

 

முன்

சில குறைகளை மக்கள் முன்வைத்தனர்

சில குறைகளை மக்கள்முன் வைத்தனர்

 

முதல்

அன்றுமுதல் அமைச்சர் வந்தார்

அன்று முதல்அமைச்சர் வந்தார்

தமிழில் உள்ள சில இடைச்சொற்கள் = விடும், தன், தான், பற்றி, முன், முதல், பால், கண், படி, மூலம், கூட

பொருள் மயக்கம் சொல்லுருபுகள்

      • வீட்டிலிருந்து சென்றான்
      • வீட்டில் இருந்து சென்றான்
  • இத்தொடரில் அமைந்துள்ள “வீட்டிலிருந்து” என்ற சொல்லைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும் பொது இருவேறு பொருள் உணர்த்துகிறது

சொற்களை மாற்றி எழுதும் பொது ஏற்படும் பொருட்குழப்பம்

  • தொடர்கள் அமைக்கும் பொது தேர்ந்தெடுத்த சொற்களையும் சொற்களுக்குரிய தெளிவான பொருளையும் தொடரமைப்பு மாறாமல் அமைத்தல் வேண்டும்.
    • ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்
    • மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
  • மேற்கண்ட இரு தொடர்களில், முதல் தொடரின் ஆண்டுதோறும் மறைந்தார் என்பது தவறாகும். இரண்டாவது தொடர் சரியாக அமைந்துள்ளது.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • பண்புத்தொகை, வினைத் தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை. அவற்றை பிருது எழுதக் கூடாது.
    • செங்கடல் (சரி) – செங் கடல் (தவறு)
    • கத்துகடல் (சரி) – கத்து கடல் (தவறு)
  • பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் “இடைச்சொற்களைச் சேர்த்து” எழுத வேண்டும்
    • அணங்குகொல் (சரி) – அணங்கு கொல் (தவறு)
  • இடைச்சொற்களுடன் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்
    • பேசியபடி பணம் கொடுத்தேன் (பேசியவாறு)
    • பேசிய படி பணம் கொடுத்தேன் (படியளவு)
  • உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுத வேண்டும்
    • மணியடித்துச் சென்றான் (ஒலி எழுப்புதல்)
    • மணி அடித்துச் சென்றான் (மணி என்பவன் யாரையோ அறைதல்)
  • பன்மையை உணர்த்தும் “கள்” விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்
    • ஈக்கள் மொய்த்தன – ஈக் கள் மொய்த்தன
    • குரங்குகள் உண்டன – குரங்கு கள் உண்டன
  • இரட்டைக்கிழவி சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்
    • படபடவெனச் சிறகை அடித்தது (சரி)
    • பட பட எனச் சிறகை அடித்தது (தவறு)
  • சொற்புனர்ச்சியில் நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய் எழுத்தாகவும், வருமொழி முதல் எழுத்து உயிர் எழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும்
    • சுடராழி = சுடர் + ஆழி
  • உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் பொது சேர்த்தே எழுத வேண்டும்
    • கடிமணம் – கடை மணம்
  • உம்மைத்தொகைச் சொற்களையும், நேரிணைச் சொற்களையும் எதிரிணைச் சொற்களையும் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.
    • உற்றாருறவினர் (சரி) – உம்மைத்தொகை
      • உற்றார் உறவினர் (தவறு)
    • சீரும்சிறப்பும் (சரி) – நேரிணைச் சொற்கள்
      • சீரும் சிறப்பும் (தவறு)
    • மேடுபள்ளம் (சரி) – எதிரிணைச்சொற்கள்
      • மேடு பள்ளம் (தவறு)

பொருள் மயக்கம் சொற்றொடர்ப் பிழை

  • திணை, பால், எண், இடம், காலம் முதலிய பிழைகள் ஏற்படாவண்ணம் தொடர் எழுதிப் பழகுதல் நல்லது. பொருள் மயக்கம் ஏற்படாது.
  • அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல என்பனவற்றைத் திணை, பால், எண், இடம் அறிந்து ஆளுதல் வேண்டும்.

வினைத்தொகை

சரி

தவறு
திருவளர்செல்வன் / திருவளர்செல்வி

திருவளர்ச்செல்வன் / திருவளர்ச்செல்வி

திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி

திருநிறைச்செல்வன் / திருநிறைச்செல்வி

 

 

Leave a Reply