முதல் முகலாயப் பேரரசர் பாபர்

முதல் முகலாயப் பேரரசர் பாபர்
- பாபரின் முழுப்பெயர் = ஜாகிர்-உத்-தின் முகமது பாபர்.
- தந்தை பெயர் = உமர் சேக் மிஸ்ரா.
- பாபர் அவரது தந்தையின் வழியில் தைமூரின் ஐந்தாவது வழித்தோன்றல் மற்றும் தாய்வழியில் இருந்து செங்கிஸ் கானின் பதினான்காவது சந்ததியாவார்.
- கி.பி.1494 இல் தனது 12 வது வயதில் பர்கானாவின் அரியணையை பெற்றார் பாபர்.
- இவரின் தாய் நிலமான “சாமர்கண்டை” இவரால் கைப்பற்ற முடியவில்லை (சைபாணி கான் தடுத்து நிறுத்தினான்)
- பாபர், துருக்கி இனத்தின் “சகத்தி” பிரிவை சேர்ந்தவர்.
- பாபரின் நேர்மைக்காக அவரை “கலந்தர்” என்று அழைத்தனர்.
- பாபர் முதன் முதலில் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு = கி.பி. 1518-19.
-
- பாபர் முதன் முதலில் இந்தியா மீது படையெடுப்பு நடத்திய இடம் = பஜர்.
- இப்போரில் தான் பாபர் முதன் முதலில் வெடிமருந்தினை பயன்படுத்தினார்.
- பீரங்கிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = பாபர்.
-
- பாபரின் இரண்டாவாது படையெடுப்பு “சியால்கோட்” மீது நடைபெற்றது (கி.பி.1520)
- இந்நிலையில் பஞ்சாப்பின் ஆளுநராக இருந்த தௌலத் கான், பாபரை இந்தியா மீது படையெடுத்து வருமாறு கேட்டுக் கொண்டான்.
- மேவாரை ஆண்ட “ரானா சங்கா”விடம் இருந்தும் பாபருக்கு இந்தியா மீது படையெடுக்க தகவல் அனுப்பப்பட்டது.
- இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்தவர்கள் = பஞ்சாப் ஆளுநர் தௌலத் கான், இப்ராகிம் லோடியின் மாமன் ஆலம்கான் மற்றும் மேவாரின் ரானா சங்கா.
- இதனை ஏற்று பாபர், அப்பொழுது டெல்லியை ஆண்ட “இப்ராகிம் லோடி” மீது படை எடுத்தார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- இந்தியாவில் பாபரின் ஐந்தாவது படையெடுப்பு = முதலாம் பானிபட் போர் ஆகும்.
- பாபர் ஐந்து முறை இந்தியாவின் மீது படை எடுத்துள்ளார்.
- இந்தியாவின் ஒரு பகுதியாக மீண்டும் “காபுல் மற்றும் காந்தகார்” சேர்க்கப்பட்டன.
- குஷானர்களுக்கு பிறகு, “காபுல் மற்றும் காந்தகார்” பகுதிகளை இந்திய பேரரசில் இணைத்த அரசர் = பாபர்.
- பாபரின் பீரங்கி படை மற்றும் காலாட்படைக்கு தலைமை தாங்கியவர்கள் = உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா.
- பாபர் கவிதைகள் எழுதும் திறன் மிக்கவர்.
- பாபர் அறிந்த மொழிகள் = பாரசீகம் மற்றும் அரபி.
- பாபரின் சுயசரிதை நூல் = துசுக்-இ-பாபரி (பாபர்நாமா) (துருக்கிய மொழியில் எழுதப்பட்டது)
- பாபர் தனது “துசுக்-இ-பாபரி” நூலில் குறிப்பிட்டுள்ள இரண்டு இந்து அரசுகள் யாவை? = மேவார் மற்றும் விஜயநகரம் (மன்னர் கிருஷ்ணதேவராயர்).
- பாபர் தனது சுயசரிதை நூலான “துசுக்-இ-பாபரி” நூலில் விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
- துசுக்-இ-பாபுரி பாரசீக மொழியில் (பாபர்நாமா என்று பெயர்) அப்துர் ரஹீம் கான்கானாவால் மொழிப் பெயர்க்கப்பட்டது.
- துசுக்-இ-பாபரி நூலினை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்தவர் = மேடம் பெவ்ரிட்ஜ்.
- பாபரின் மற்றொரு படைப்பு = ரிசல்-இ-உசாஸ் (பாபரின் கடிதங்கள்)
- குவாலியர் மன்னர் ராஜா விக்ரமஜித்திடம் இருந்து கோஹினூர் வைரத்தை பாபர் பெற்று ஹுமாயூனுக்கு பரிசளித்தார்.
- இந்தியாவில் சரியான வரிசை முறையில் தோட்டங்களை அமைக்கும் முறையை அறிமுகம் செய்தவர் = பாபர்.
- பாபர் கி.பி.1530 இல் ஆக்ராவில் காலமானார்.
- முதலில் அவரின் உடல் ஆக்ராவின் “ஆரம்பாக்” என்னும் இடத்தில புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு “காபுலில்” புதைக்கப்பட்டது.
- “மீர் பகி” என்பவர் “பாபர் மசூதியை” கட்டினார்.
- முதல் முகலாயப் பேரரசர் பாபர்

முதலாம் பானிபட் போர்
- நடைபெற்ற ஆண்டு = கி.பி.1526 (ஏப்ரல் 21)
- பாபர், இப்ராஹீம் லோடியை தோற்கடித்தார்.
- டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
- முகலயார்களின் ஆட்சி துவங்கியது.
- பாபரின் வெற்றிக்கு காரணமாக இருந்தவை = பீரங்கிப் படை.
- பாபர் இப்போரில் பயன்படுத்திய முறைகள் = ருமி (அ) ஒட்டமான் முறை.
- பாபர் பயன்படுத்திய யுக்தி முறை = துலுக்மா போர் முறை
கன்வா போர்
- நடைபெற்ற ஆண்டு = கி.பி.1527
- மேவாரின் “ரானா சங்காவை” (சங்கராம் சிங்) தோற்கடித்தார்.
- இவ்வெற்றியின் காரணமாக “காஸி” என்ற பட்டதை சூட்டிக் கொண்டார் பாபர்.
- “கன்வா போரினை” பாபர் “ஜிகாத்” என்று அறிவித்தார்.
- முதல் முகலாயப் பேரரசர் பாபர்
சந்தேரி போர்
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1528 (ஜனவரி 29)
- மால்வாவின் ராஜபுத்திர மன்னன் “மேதினி ராயை” வீழ்த்தினார் பாபர்.
காக்ரா போர்
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1529
- இப்ராகிம் லோடியின் சகோதரர் “மகமுது லோடியின்” தலைமையிலான ஆப்கன் கூட்டுப் படைகளை பாபர் தோற்கடித்தார்.

பாபரின் முக்கிய பங்களிப்புகள்
- வட இந்தியாவில் நடைபெற்ற முக்கிய போர்களில், வெடிமருந்து பீரங்கிகள் மற்றும் போர்க்கள உத்திகளைத் திறம்படப் பயன்படுத்தினார்.
- ‘துலுங்மா’ (படையினரைப் பிரித்து பக்கவாட்டிலிருந்து தாக்கும் முறை) மற்றும் ‘அராபா’ (தேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தற்காப்பு ஏற்பாடு) ஆகிய போருத்திகளைப் பயன்படுத்தினார்.
- சுயசரிதை: ‘பாபர்நாமா’ (துசுக்-இ-பாபுரி) – இது முதலில் சாகதாய் துருக்கிய மொழியில் எழுதப்பட்டது.
- கவிதை, தோட்டங்கள், இயற்கை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்திற்காகவும் பாபர் அறியப்பட்டார்.
- பாரசீக மொழியில் ‘முபையன்’ (Mubaiyan) எனப்படும் புதிய கவிதை நடையை உருவாக்கினார்.
- முதல் முகலாயப் பேரரசர் பாபர்
பட்டங்கள் மற்றும் கௌரவங்கள்
- பாத்ஷா (Badshah): பாரம்பரிய தைமூரியப் பட்டமான ‘மிர்சா’வைக் கைவிட்டு, காபூலில் (1507) இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
- கலந்தர் (Qalandar): இவரது அளப்பரிய தாராள மனப்பான்மையைக் கண்டு உள்ளூர் மக்களால் வழங்கப்பட்ட பட்டம்; பானிபட் வெற்றிக்குப் பிறகு காபூலின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கினார்.
- காசி (Ghazi): கான்வா போரில் ராணா சங்காவைத் தோற்கடித்த பிறகு இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
- முதல் முகலாயப் பேரரசர் பாபர்
பாபர் காலக்கோடு
- 14 பிப்ரவரி 1483 = பாபர் பிறந்த தினம்.
- 1495 = பாபர் 12 வது வயதில் பர்கானாவின் அரியணை ஏறினார்.
- 1505 = காபூலை பாபர் கைப்பற்றினார்.
- 1505 = பாபர் முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுப்பு மேற்கொண்ட ஆண்டு.
- 1526 = முதலாம் பானிபட் போர். இப்ராகிம் லோடியை தோற்கடித்தார். முகலாய் ஆட்சி இந்தியாவில் துவக்கம்.
- 1527 = கன்வா போர். ரானா சந்காவை தோற்கடித்தல்.
- 1528 = சந்தேரி போர். சந்தேரி அரசர் மேதினிராயை தோற்கடித்தல்.
- 1529 = காக்ரா போர். ஆப்கன் கூட்டுப்படையை தோற்கடித்தல்.
- 1530 = பாபர் மரணம்.
- முதல் முகலாயப் பேரரசர் பாபர்