விஜயநகர பேரரசு

விஜயநகர பேரரசு

விஜயநகர பேரரசு
விஜயநகர பேரரசு

விஜயநகர பேரரசு

  • விஜயநகர பேரரசு நான்கு வம்சங்களை கொண்டிருந்தது.

வம்சம்

காலம் தோற்றுவித்தவர் கடைசி அரசன்
சங்கம வம்சம் 1336-1485 ஹரிஹரர், புக்கர்

இரண்டாம் விருபாக்ஷா

சாளுவ வம்சம்

1485-1505 சாளுவ நரசிம்மன் ஹிமாதி நரசிம்மன்
துளுவ வம்சம் 1505-1570 வீர நரசிம்மன்

சதாசிவா

ஆரவீடு வம்சம்

1570-1652 இரண்டாம் திருமலா

மூன்றாம் ஸ்ரீரங்கா

  • விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர்கள் = ஹரிஹரர், புக்கர் (கி.பி.1336)
  • விஜயநகர அரசுகளின் பிரதான எதிரிகள் = பாமினி அரசுகள்
  • விஜயநகர அரசு உருவாக காரணமாக இருந்தவர் = துறவி வித்யாரண்யர்.
  • விஜயநகர பேரரசில் மிக அதிக காலம் ஆட்சி செய்த வம்சம் = சங்கம் வம்சம்.
  • விஜயநகரப் பேரரசில் மிக குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் = சாளுவ வம்சம்.
  • ராபர்ட் சுவல் என்பவர் விஜயநகர அரசை பற்றி “மறக்கபப்ட்ட பேரரசு” (A FORGOTTEN EMPIRE) என்ற நூலினை எழுதியுள்ளார்.
  • விஜயநகர பேரரசு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

சங்கம வம்சம்

  • சங்கம வம்சத்தை தோற்றுவித்தவர் = முதலாம் ஹரிஹரர்
  • துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டது. இது தற்போதய கர்நாடக மாநிலம் ஹம்பி பகுதியாகும்.
  • சங்கம வம்சத்தின் சிறந்த அரசர் = இரண்டாம் தேவராயர்
  • விஜயநகர பேரரசு
சங்கம வம்சம்
சங்கம வம்சம்

முதலாம் ஹரிஹரர் (1336-1356)

  • ஹோய்சால அரசர்களை தோற்கடித்து விஜயநகர அரசை துவக்கி வைத்தார்.
  • இவரின் தலைநகரம் = அனகுண்டி.
  • இவர் உருவாக்கியது “வித்யாநகர” அரசு.
  • முதலாம் புக்கர் இதனை “விஜயநகர” அரசு என பெயர் மாற்றினார்.

முதலாம் புக்கர் (1356-79)

  • இவரின் தலைநகர் = குட்டி.
  • பாமினி அரசுடன் யுத்தம் இவரின் காலத்தில் துவங்கியது.
  • கி.பி. 1374ல் சீனாவிற்கு தூதர்களை அனுப்பினார்.
  • இவரின் மகன் “குமார கம்பன்”, மதுரை மீது போர் தொடுத்து வெற்றி பெற்றான் என்ற செய்தியை “மதுரா விஜயம்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • “மதுரா விஜயம்” என்ற நூலின் ஆசிரியர் = கங்காதேவி (குமார கம்பனின் மனைவி)
  • விஜயநகர பேரரசு

இரண்டாம் ஹரிஹரர் (1379-1404)

  • முதலாம் புக்கரின் மகன்.
  • “ராஜா பரமேஸ்வரா, மகாராஜாதிராஜா”, என்ற பட்டங்களை சூட்டிக்கொண்ட முதல் அரசர்.
  • இலங்கை அரசு இவர்களுக்கு கப்பம் கட்டியது.
  • காஞ்சி, தற்போதைய திருச்சி வரை இவர் கைப்பற்றினார்.

முதலாம் தேவராயர் (1406-22)

  • “மகாராஜாதிராஜா” என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
  • பாமினி அரசர் “பிரோஸ்ஷா”வால் தோற்கடிக்கப்பட்டார்.
  • இவரின் அவைக்கு “இத்தாலி” நாட்டின் “நிகோலோ டி காண்டி” என்ற வெளிநாட்டு பயணி வருகை புரிந்தார்.
  • நிகோலோ டி காண்டி தனது பயணக் குறிப்பில், விஜயநகர நகரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். நகரம் 96 கி.மீ சுற்றளவு உடையதாக இருந்தது. மேலும் தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டது பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
  • இவரின் அவைப்புலவர் “ஸ்ரீநாதர்” (தமிழ்ப் புலவர்) எழுதிய நூல் = ஹரவிலாசம்.
  • இவரின் அவைக்கு ரஷ்ய நாட்டு வாணிபர் “நிகிதின்” விஜயம் செய்தார்.

இரண்டாம் தேவராயர் (1422-46)

  • “இம்மாடி தேவராயா”, “ப்ரௌத தேவராயா” என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
  • சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் = இரண்டாம் தேவராயர்.
  • முஸ்லிம் வீரர்களை படையில் அதிகளவு சேர்த்துக் கொண்டார்.
  • நாணயங்களில் தன்னை “கஜாபெடகாரா” (யானைகளை வேட்டையாடுபவர்) என்று குறிப்பிட்டு வெளியிட்டார்.
  • சம்ஸ்கிருத மொழியில் 2 நூல்களை எழுதியுள்ளார் = மகாநாடக சுதநிதி, பத்ராயானரின் பிரம்மசூத்திரம்.
  • கன்னட மொழியில் எழுதிய நூல்கள் = சோபகினா சோனே, அமருகா
  • “வீர சைவம்” பிரிவை பின்பற்றினர்.
  • “இந்திரனின் அவதாரம்” என மக்களால் அழைக்கப்பட்டவர்.
  • பாரசீக தூதர் “அப்துர் ரசாக்” இவரின் அவைக்கு விஜயம் செய்தார்.
  • முஸ்லிம்களுக்காக விஜயநகரத்தில் “மசூதி” ஒன்றினை கட்டினார்.
  • விஜயநகர பேரரசு

மல்லிகார்ஜுனா (1446-1465)

  • பாமினி அரசுகள் மீண்டும் இவர்களை தாக்கின.
  • இவரின் அவைக்கு சீனப் பயணியான “மகுனா” விஜயம் செய்தார்.

இரண்டாம் விருபாக்ஷா (1465-1485)

  • சங்கம வம்சத்தின் கடைசி அரசன்.
  • இரண்டாம் விருபாக்ஷியை கொலை செய்தவர் = அவரின் படைத்தளபதி சாளுவ நரசிம்மர்.

மதுரா விஜயம்

  • “மதுரா விஜயம்” நூலின் ஆசிரியர் = கங்காதேவி.
  • முதலாம் புக்கரின் மகன் = குமார கம்பணா.
  • குமார கம்பணாவின் மனைவி = கங்காதேவி.
  • குமார கம்பணா, “மதுரை சுல்தானிய” அரசை நீக்கி விட்டு அங்கு நாயக்க அரசை வெற்றிகரமாக நிறுவினார் என்ற செய்தியை மதுரா விஜயம் பதிவு செய்துள்ளது.
  • மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் = குமார கம்பண்ணா.
  • விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதை கூறும் நூல் = மதுராவிஜயம்.

சாளுவ வம்சம்

  • சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் = சாளுவ நாரசிம்மன்
  • மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் இதுவே.
  • சாளுவ நரசிம்மனுக்கு அடுத்து, திம்மா மற்றும் இம்மாடி நரசிம்மன் ஆண்டனர்.
  • யம்மாடி நரசிம்மன் ஆட்சி காலத்தில் இவர்களின் மலபார் கடற்கரை நகரமான “காலிகட்டிற்கு” வாஸ்கோடகாமா (கி.பி.1498) வந்து சேர்ந்தார்.
  • ஆட்சியின் உண்மையான அதிகாரம் “நரச நாயக்கர்” என்பவரிடம் இருந்தது.
  • விஜயநகர பேரரசு

துளுவ வம்சம்

  • துளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் = வீர நரசிம்மன்.
  • துளுவ வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் = கிருஷ்ண தேவராயர்.
  • விஜயநகர பேரரசின் மிகச் சிறந்த மன்னன் = கிருஷ்ண தேவராயர்.
கிருஷ்ணதேவராயர்
கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ண தேவராயர் (1509-1529)

  • பாபரின் சமகாலத்தவர்.
  • பாபர் தனது சுயசரிதை நூலில், இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த அரசர் கிருஷ்ணதேவராயர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • இவர் “யவனராஜா ஸ்தாபனாசார்யா” என்று அழைக்கப்பட்டார்.
  • இவரின் சிறப்புப்பெயர்கள் = அபிநவ போஜா, ஆந்திர பிதாமகன், ஆந்திர போஜா.
  • தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலும் மிக்க புலமை பெற்றவர்.
  • இவர் எழுத்சிய நூல்கள் = ஆமுக்தமால்யதா (தெலுங்கு, அரசியல் நூல்), ஜாம்பவதி கல்யாணம் (சம்ஸ்கிருதம்), உஷா பரிணயம் (சம்ஸ்கிருத நாடக நூல்)
  • போர்சுகீசிய ஆளுநர் “அல்புகர்க்குடன்” நெருங்கிய நல்லுறவு கொண்டிருந்தார்.
  • “பாட்கல்” என்னுமிடத்தில் கோட்டை கட்டிக் கொள்ள அல்புகர்க்கு அனுமதி அளித்தார்.
  • இவர் கட்டியவர் = விஜயா மகால் (வெற்றி இல்லம்), ஹசரராமா கோவில் மற்றும் விட்டல்ஸ்வாமி கோவில்.
  • கிருஷ்ணதேவராயரின் அவையில் எட்டு புலவர்கள் இருந்தனர். இவர்களை “அஷ்டதிக்கஜங்கள்” என்பர்.
  • “தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம்” எனப்படுவது இவரின் ஆட்சிக்காலம் ஆகும்.
  • “டோமிங்கோ பயஸ்” என்னும் போர்சுகீசிய பயணி இவரின் அவைக்கு விஜயம் செய்தார்.
  • தனது தாய் “நாகலாதேவி”யின் நினைவாக “நாகலாபுரம்” என்னும் புதிய நகரை உருவாக்கினார்.
  • கிருஷ்ணதேவராயர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 20 ஆண்டுகள்.
  • எந்த பாமினி சுல்தானை சிறையில் இருந்து மீட்டு, அவருக்கு மீண்டும் அரியணையை வழங்கினார் = பாமினி சுல்தான் முகமதுஷா.
  • மழைநீரை சேமிப்பதற்காக பல்வேறு குளங்களை வெட்டியவர் = கிருஷ்ணதேவராயர்.
  • கிருஷ்ணதேவராயரின் தலைநகரம் = ஹம்பி.
  • கிருஷ்ணதேவராயர் கட்டிய புகழ்பெற்ற கோவில்கள் = ஹம்பியில் உள்ள கிருஷ்ணஸ்வாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டாலசுவாமி கோவில்.
  • விஜயநகர பேரரசு

அச்சுத தேவராயர் (1529-42)

  • தனக்கு பின் அச்சுத தேவராயர் ஆள வேண்டும் என கிருஷ்ணதேவராயர் தெரிவித்துள்ளார்.
  • இவரை இராமராஜர் சிறை பிடித்து ஆட்சிக்கு முடிவு கட்டினார்
  • இவரின் அவையில் “கர்நாடக இசையின் தந்தை எனப்படும் புரந்தார தாசர்” இடம் பெற்றிருந்தார்.

சதாசிவராயர் (1543-1576)

  • சதாசிவராயரின் அமைச்சர் “ராமராயர்”, பாமினி சுல்தான்களுடன் இணைந்து “தலைக்கோட்டை” என்னும் இடத்தில இவரை தோற்கடித்தனர்.

தலைக்கோட்டை போர்

அரவீடு வம்சம்

  • அரவீடு வம்சத்தை துவக்கியவர் = இரண்டாம் திருமலா
  • இவர் ராமராயரின் சகோதரர் ஆவார்.
  • இரண்டாம் திருமலை ராயர் தலைநகரை “ஹம்பி” இல் இருந்து “பெனுகொண்டாவிற்கு” (வேணுகொண்டா) மாற்றினார்.
  • திருமலாவிற்கு அடுத்து இரண்டாம் ரங்கா, இரண்டாம் வெங்கட் ஆகியோர் ஆட்சி செய்தனர்.
  • இரண்டாம் வெங்கட் அவர்களின் காலத்தில் தலைநகராக “சந்திரகிரி” அறிவிக்கப்பட்டது.
  • இவருக்கு அடுத்து ஆட்சி செய்தவன் = மூன்றாம் ஸ்ரீரங்கா.
  • விஜயநகர வம்சத்தின் கடைசி அரசன் = மூன்றாம் ஸ்ரீரங்கா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *