10TH TAMIL கலித்தொகை
10TH TAMIL கலித்தொகை
- எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்.
- எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது.
- நாடகப் பாங்கில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் = கலித் தொகை.
- இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது.
- கலித் தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
- கலித் தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
- கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.
- இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும்.
- எனவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனச் சிறப்பித்துக் கூறுவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நல்லந்துவனார் ஆசிரியர் குறிப்பு
- நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
- இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
- இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
- கலித்தொகையை தொகுத்தவர் இவரே.
- “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
- “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = கலித் தொகை.
- “அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
- “அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் = கலித் தொகை.
- “ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
- “ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் = கலித் தொகை.
- “நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
- “நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = கலித் தொகை.
சொற்பொருள்
- கிளை – சுற்றம்
- நோன்றல் – பொறுத்தல்
இலக்கணக்குறிப்பு
- ஒழுகுதல் – தொழிற்பெயர்
- பொறுத்தல் – தொழிற்பெயர்
பிரித்தறிதல்
- அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
- பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
- வல்லினம் மிகும் இடங்கள்
- வல்லினம் மிகா இடங்கள்
- திருக்குறள்
- தேவாரம்
- தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
- பொருள் இலக்கணம்
- சீறாப்புராணம்
- காந்தியம்