10TH TAMIL தொகாநிலைத் தொடர்
10TH TAMIL தொகாநிலைத் தொடர்
- ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாக பொருளை உணர்த்துவது “தொகாநிலைத் தொடர்” எனப்படும்.
- எ.கா = காற்று வீசியது, குயில் கூவியது
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
- தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை,
-
- எழுவாய்த் தொடர்
- விளித் தொடர்
- வினைமுற்றுத் தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
-
எழுவாய்த் தொடர் என்றால் என்ன
எழுவாய் + (பெயர் பயனிலை (அ) வினை பயனிலை (அ) வினா பயனிலை) = எழுவாய்த் தொடர் |
- எழுவாயுடன் “பெயர், வினை, வினா” ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர் ஆகும்.
- எ.கா – இனியன் கவிஞர் = பெயர்
- எ.கா – காவிரி பாய்ந்தது = வினை
- எ.கா – பேருந்து வருமா? = வினா
விளித் தொடர் என்றால் என்ன
விளி + (வினை பயனிலை) = விளித்தொடர் |
- விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
- எ.கா = நண்பா எழுது!
- “நண்பா” என்னும் விளிப் பெயர் “எழுது” என்னும் வினை பயனிலையை கொண்டு முடிந்துள்ளது.
வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன
வினைமுற்று + பெயர் = வினைமுற்றுத் தொடர் |
- வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்ந்து வருவது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.
- எ.கா – “பாடினாள் கண்ணகி”
- “பாடினால்” என்னும் வினைமுற்று “கண்ணகி” என்ற பெயரை பெற்று வருகிறது.
பெயரெச்சத் தொடர் என்றால் என்ன
முற்று பெறாத வினை (எச்சம்) + பெயர்ச்சொல் = பெயரெச்சத் தொடர் |
- முற்றுப் பெறாத (எச்சம்) வினை, பெயர்ச்சொல்லை கொண்டு முடிவது “பெயரெச்சத் தொடர்” எனப்படும்.
- எ.கா – “கேட்ட பாடல்”
- “கேட்ட” என்னும் எச்ச வினை “பாடல் என்னும் பெயரை கொண்டு முடிந்துள்ளது.
வினையெச்சத் தொடர் என்றால் என்ன
முற்று பெறாத வினை (எச்சம்) + வினைச்சொல் = வினையெச்சத் தொடர் |
- முற்றுப் பெறாத (எச்சம்) வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
- எ.கா – “பாடி மகிழ்ந்தனர்”
- “பாடி” என்னும் எச்ச வினை “மகிழ்ந்தனர்” என்ற வினையை கொண்டு முடிந்துள்ளது.
வேற்றுமைத் தொடர் என்றால் என்ன
- வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள் எனப்படும்.
- எ.கா – “கட்டுரையைப் படித்தான்”
- இத்தொடரில் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
இடைச்சொல் தொடர் என்றால் என்ன
இடைச்சொல் + (பெயர் (அ) வினை) = இடைச்சொல் தொடர் |
- இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது “இடைச்சொல்” தொடர் எனப்படும்.
- எ.கா – “மற்றொன்று”
- “மற்று” என்னும் இடைச்சொல்லை தொடர்ந்து “ஒன்று” என்ற சொல் நின்று பொருள் தருகிறது.
உரிச்சொல் தொடர் என்றால் என்ன
உரிச்சொல் + (பெயர் (அ) வினை) = உரிச்சொல் தொடர் |
- உரிச்சொல்லுடன் பெயரோ அல்லது வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடர் எனப்படும்.
- எ.கா – “சாலச் சிறந்தது”
- “சால” என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து “சிறந்தது” என்ற சொல் நின்று “மிகச் சிறந்தது” என்ற பொருளைத் தருகிறது.
அடுக்குத் தொடர் என்றால் என்ன
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும்.
- எ.கா = “வருக! வருக! வருக!”
- இதில் ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் என்றால் என்ன
- ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
- வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
- எ.கா. = கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- கோபல்லபுரத்து மக்கள்