10TH TAMIL தொகாநிலைத் தொடர்

10TH TAMIL தொகாநிலைத் தொடர்

10TH TAMIL தொகாநிலைத் தொடர்
10TH TAMIL தொகாநிலைத் தொடர்

10TH TAMIL தொகாநிலைத் தொடர்

  • ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாக பொருளை உணர்த்துவது “தொகாநிலைத் தொடர்” எனப்படும்.
    • எ.கா = காற்று வீசியது, குயில் கூவியது
  • JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

  • தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை,
      1. எழுவாய்த் தொடர்
      2. விளித் தொடர்
      3. வினைமுற்றுத் தொடர்
      4. பெயரெச்சத் தொடர்
      5. வினையெச்சத் தொடர்
      6. வேற்றுமைத் தொடர்
      7. இடைச்சொல் தொடர்
      8. உரிச்சொல் தொடர்
      9. அடுக்குத் தொடர்
10TH TAMIL தொகாநிலைத் தொடர்
10TH TAMIL தொகாநிலைத் தொடர்

எழுவாய்த் தொடர் என்றால் என்ன

எழுவாய் + (பெயர் பயனிலை (அ) வினை பயனிலை (அ) வினா பயனிலை) = எழுவாய்த் தொடர்

  • எழுவாயுடன் “பெயர், வினை, வினா” ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர் ஆகும்.
    • எ.கா – இனியன் கவிஞர் = பெயர்
    • எ.கா – காவிரி பாய்ந்தது = வினை
    • எ.கா – பேருந்து வருமா? = வினா

விளித் தொடர் என்றால் என்ன

விளி + (வினை பயனிலை) = விளித்தொடர்

  • விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
    • எ.கா = நண்பா எழுது!
  • “நண்பா” என்னும் விளிப் பெயர் “எழுது” என்னும் வினை பயனிலையை கொண்டு முடிந்துள்ளது.

வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன

வினைமுற்று + பெயர் = வினைமுற்றுத் தொடர்

  • வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்ந்து வருவது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.
    • எ.கா – “பாடினாள் கண்ணகி”
  • “பாடினால்” என்னும் வினைமுற்று “கண்ணகி” என்ற பெயரை பெற்று வருகிறது.

பெயரெச்சத் தொடர் என்றால் என்ன

முற்று பெறாத வினை (எச்சம்) + பெயர்ச்சொல் = பெயரெச்சத் தொடர்

  • முற்றுப் பெறாத (எச்சம்) வினை, பெயர்ச்சொல்லை கொண்டு முடிவது “பெயரெச்சத் தொடர்” எனப்படும்.
    • எ.கா – “கேட்ட பாடல்”
  • “கேட்ட” என்னும் எச்ச வினை “பாடல் என்னும் பெயரை கொண்டு முடிந்துள்ளது.
10TH TAMIL தொகாநிலைத் தொடர்
10TH TAMIL தொகாநிலைத் தொடர்

வினையெச்சத் தொடர் என்றால் என்ன

முற்று பெறாத வினை (எச்சம்) + வினைச்சொல் = வினையெச்சத் தொடர்

  • முற்றுப் பெறாத (எச்சம்) வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
    • எ.கா – “பாடி மகிழ்ந்தனர்”
  • “பாடி” என்னும் எச்ச வினை “மகிழ்ந்தனர்” என்ற வினையை கொண்டு முடிந்துள்ளது.

வேற்றுமைத் தொடர் என்றால் என்ன

  • வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள் எனப்படும்.
    • எ.கா – “கட்டுரையைப் படித்தான்”
  • இத்தொடரில் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

இடைச்சொல் தொடர் என்றால் என்ன

இடைச்சொல் + (பெயர் (அ) வினை) = இடைச்சொல் தொடர்

  • இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது “இடைச்சொல்” தொடர் எனப்படும்.
    • எ.கா – “மற்றொன்று”
  • “மற்று” என்னும் இடைச்சொல்லை தொடர்ந்து “ஒன்று” என்ற சொல் நின்று பொருள் தருகிறது.

உரிச்சொல் தொடர் என்றால் என்ன

உரிச்சொல் + (பெயர் (அ) வினை) = உரிச்சொல் தொடர்

  • உரிச்சொல்லுடன் பெயரோ அல்லது வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடர் எனப்படும்.
    • எ.கா – “சாலச் சிறந்தது”
  • “சால” என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து “சிறந்தது” என்ற சொல் நின்று “மிகச் சிறந்தது” என்ற பொருளைத் தருகிறது.

அடுக்குத் தொடர் என்றால் என்ன

  • ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும்.
    • எ.கா = “வருக! வருக! வருக!”
  • இதில் ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் என்றால் என்ன

  • ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
  • வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
    • எ.கா. = கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

 

 

Leave a Reply